Posts

Showing posts from May, 2026

கேரள முரல் ஓவியங்கள்

Image
மிகச் சில வண்ணங்களைக் கொண்டு அழகாக வரையப்பட்டவை கேரள முரல் ஓவியங்கள். அந்தக் காலத்தில்  இயற்கையான பொருட்களில் இருந்தே இந்த வண்ணங்கள் பெறப்பட்டன. உதாரணத்துக்கு வெண்மை நிறத்துக்கு சுண்ணாம்பும், கருமை நிறத்துக்கு நல்லெண்ணெய் விளக்கு தீபத்தின் மேல் கவியும் கருமையான மையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  கோவில்களிலும், அரண்மனைச் சுவர்களிலும் இந்த வகை ஓவியங்களை கேரளாவில் நாம் இப்போதும் காணலாம். சில இடங்களில் உள்ள ஓவியங்கள் காலத்தை தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது. இப்பொழுது இந்த வகை ஓவியங்கள் துணிகளிலும் வரையப்படுகின்றன. எனக்கு இந்த வகை ஓவியங்களின் அழகு பிடித்துப்போக, ஓவியம் வரையத் தெரியாத எனக்கு வரைந்து பார்த்தால் என்னவென்று தோன்றியது. நான் வரைந்த இந்த இரண்டு ஓவியங்களுமே கேரளாவின் பள்ளிமன் னா மகாதேவர்  கோவிலில் உள்ளது. முகம், கை வளைவுகள் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பல முறை முயன்று வரைந்தேன். பார்த்து வரைந்தாலும் மூலத்துக்கும் இதற்கும் வண்ணங்களின் கலவை, வளைவுகளின் நேர்த்தி ஒன்றல்ல. அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஆலமர் செல்வன் / தட்சிணாமூர்த்தி  Acrylic on canv...

சகீனாவின் முத்தம் - முத்தம் பெறுவது எளிதா ?

Image
விவேக் ஷான்பாக் எழுதிய நாவலான காச்சர் கோச்சர் போன்றே ஒரு சிறு குடும்பத்தைப் பற்றிய கதை சகீனாவின் முத்தம். கதை சொல்லும் முறையில் சுற்றியிருக்கும் அனைவரின் அன்றாடத்தையும், கடந்த காலத்தையும் நேர்த்தியாக சொல்லிச் சொல்கிறார் விவேக் ஷான்பாக். தலைப்புக்கும் நாவலில் இருக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் கதையின் முக்கிய திருப்பமே இந்த தலைப்புதான்.  வெங்கி எனப்படும் வெங்கடரமணன், மனைவி விஜி மற்றும் அவர்களின் ஒரே மகளான ரேகா. இவர்களின் வாழ்க்கையில் நான்கைந்து  நாட்கள் கதைதான் இந்நாவல் என்றாலும், வெங்கட்டின் நினைவுகள் மூலம் பழைய கதை சொல்லப்படுகிறது. வெங்கட்டும் விஜியும் கணிணித்   துறையில் வேலை செய்பவர்கள். அவர்களின் மக்கள் ரேகா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. ரேகா ஒருநாள் வெங்கட்டின் சொந்த ஊருக்குச் சென்ற வேளையில், இங்கே அவளைத் தேடி அவளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து போகிறார்கள். அவளுடைய செல்போனுக்கு கூப்பிட்டால் போன் போகவில்லை என்று சொல்கிறார்கள்.  'அவள் இங்கே இல்லை. எந்த தொலைபேசித் தொடர்பும் எங்கள் ஊரில் இல்லை. அவளாக கூப்ப...

தொட்டியில் அல்லி வளர்ப்பு

Image
எங்காவது வெளியே போகும்போது அல்லி, தாமரை போன்ற மலர்களைப் பார்க்கும்போது நம் வீட்டில் நாமும் வளர்த்துப் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு முன்னால் நர்சரியில் சிறு தொட்டியில் இரண்டு இலைகள் மட்டுமே இருந்த அல்லி செடியை வாங்கி வந்தோம். அங்கே இருந்தவர் பிங்க் நிறம் என்று சொன்னார். வாங்கி வந்த சிறு தொட்டியை அப்படியே இன்னொரு பெரிய அகன்ற தொட்டியில் வைத்தோம். சில கலர் மீன்களை வாங்கி தொட்டியில் விட்டோம். ஓரிரண்டு இலைகள் தழைத்து வந்து அப்படியே சிறிதாக இருந்தன. இலைகள் பெரிதாக வளரவும் இல்லை. Youtube ல் சில அல்லி வளர்ப்பு சம்பந்தமான வீடியோக்கள் பார்த்தால் இலைகள் பெரிதாக இருந்தன. சரி பெரிய தொட்டியில் மாற்றிப் பார்க்கலாம் என்று களிமண்ணும் கொஞ்சம் செம்மண்ணும் கலந்து பெரிய தொட்டியில் அல்லிச் செடியை மாற்றி விட்டேன். மாற்றிய பின்னர் கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தது. முன்பிருந்ததை விட இலைகள் நல்ல நிறமாகி வந்தன. சிறு இலைகளாகவே இப்போதும் தழைத்து வந்தது. மீன்கள் இருப்பதால் எந்த விதமான உரங்களும் பயன்படுத்தவில்லை. இரண்டு முறை ...

நட்ராஜ் மகராஜ் - அதிகாரத்தின் முன் வரலாற்றின் நிலை

Image
பழைய இடிந்து போன ஒரு மாளிகையின் ஓரத்தில் பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வசித்து வரும் ஒரு குடும்பத் தலைவனான 'ந' வின் கதை இந்நாவல். நாவலில் எல்லோருடைய பெயரும் ஒரு குறியீடு போல முதல் எழுத்து மட்டுமே. தா என்னும் ஊர், வ என்னும் பெயரையுடைய மனைவி என்று முதல் எழுத்து மட்டும்தான். படிக்கும் பொழுது இந்தக் குறியீட்டு எழுத்துக்கள் முதலில் புரிபடத் தடுமாறினாலும், நாவல் பின்னர் நம்மை அதற்குள் இழுத்துக் கொள்கிறது.  ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் ந வுக்கு, அரசு வேலையாக பள்ளி சத்துணவுத் திட்ட அலுவலராக வேலை கிடைக்கிறது. இந்த வேலையைப் பெறவும் ஒரு சிலருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறான். சம்பளம் குறைவு என்றாலும் அரசு வேலை என்ற மரியாதை இருக்கும் என்றே அவன் நினைக்கிறான். அரசுப் பள்ளியின் கணக்குகள், மாணவர்களுடைய உணவின் தரம் என்று அவனுக்கு புரியும்பொழுது சுற்றியுள்ளோர் அவனுக்கு, இந்த வேலையில் இருந்து எப்படி மேலும் சம்பாதிப்பது என பாடம் எடுக்கிறார்கள்.  அவன் அந்தப் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் இருந்த அலுவலர்கள் அரிசி பருப்பு போன்றவற்றை வெளியில் கடத்தி மற்றவர்களுக்கு க...