Posts

Showing posts with the label தென்னக சிற்பங்கள்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்

Image
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றி அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் 'ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் (திருவட்டாறு கோவில் வரலாறு)' . ஒரு கோவிலைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும்  மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். கோவிலின் வழிபாட்டு முறைகள், வரலாறு, சிற்பங்கள், கதைகள், இலக்கியங்களில், ஆழ்வார் பாடல்களில் இக்கோவில் சுட்டிக்காட்டப்பட்ட இடம் மற்றும் வாய்மொழிக் கதைகள் என ஒன்று விடாமல் எழுதியுள்ளார் ஆசிரியர்.  ஒரு கோவில் என்பது சாதாரண இடம் அல்ல. பல நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டு, சில மாற்றங்கள் காலப்போக்கில் உருவாகி இன்று நம்முன் வலிமை குன்றாமல் நிற்கிறது. "ஒரு ஆலயத்தின் சிறப்பிற்கு பத்து விசேஷக் குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.  அந்த ஆலயம் பழமையானதாய், பாரம்பரிம் உடையதாய் இருத்தல்;  கோவிலுடன் தொடர்புடையதாக ஓலை ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் கிடைத்தல்;  கோவிலுக்கும் வட்டார வரலாற்றுக்கும் மிகுந்த தொடர்பு இருத்தல்; புராணங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருத்தல், தலபுராணங்கள் இருத்தல்;  கோவிலில...

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

Image
பல்லவர் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோவில்களில் ஒன்று காஞ்சி கைலாசநாதர் கோவில். ஒவ்வொரு இடத்திலும் கலைநயம், காலங்களைத் தாண்டி நிற்கிறது. சில சிற்பங்கள் மணல் கற்களால் செதுக்கப்பட்டதால் காலப்போக்கி ல் தனது பொலிவை இழந்திருக்கிறது. உறுதியான கற்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் காலங்கள் தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது.  நாங்கள் சென்றபோது அளவான கூட்டமே இருந்தது. காஞ்சியில் உள்ள பிரபலமான கோவில்களில் உள்ள கூட்டம் போல் இங்கே இல்லை. குறைவான மக்கள் வந்து போவதும் இந்த பழைய கோவிலுக்கு நல்லது தான்.  காணும் இடமெல்லாம் கலை நயத்தை காட்சிக்கு வைத்திருக்கும் அற்புதமான கோவில் கைலாசநாதர் கோவில்.  நாம் பார்க்கும் இடமெல்லாம் சிம்ம தூண்கள் அழகுடன் இருக்கிறது.  இந்தக் கோவிலுக்கு பின்னர் பெரிதாக எடுக்கப்பட்ட பல ஆலயங்களுக்கு இந்த ஆலயம் முன்னோடியாக இருந்திருக்கிறது. முக்கியமாக தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சொல்லலாம். முன்பு பல சிற்பங்கள் பழுது பார்க்கப்பட்டதில் அரைகுறையாகத் தெரிவது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தக் கோவிலில்  ஓவியங்கள் முன்பு இருந்திருக்கிறது. இப்போது சில கோடுகளும் அங்கங...

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா. பாலுசாமி

Image
அர்ச்சுனன் தபசு எனப்படும் சிற்பத்தொகை மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. இதனை பகீரதன் தவம் என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகளை மறு ஆய்வு செய்து இந்நூலை சா.பாலுசாமி அவர்கள் எழுதியுள்ளார்.  கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகையை மகாபாரத கதைகளில் சொல்லப்பட்டது போல அமைந்துள்ளது, அதில் உள்ள மிருகங்கள், பறவைகள், மரங்கள் என யாவும் இமய மலைத் தொடர்களில் உள்ளவையே என்றும் நிறுவுகிறார் பாலுசாமி. மேலும் அவர் இமய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பல்லாண்டுகள் முயற்சிக்கு பின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது. கின்னர, கிம்புருடர்கள், நாக இணையர், கங்கையில் குளிப்பவர்கள், முனிவர்கள் என ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விளக்குகிறார். இது பகீரதன் தவம் அல்ல அவர் மறுக்க ஒரு பெரிய காரணத்தைச் சுட்டுகிறார். அதாவது, சிற்பத்தில் காட்டுவது கங்கை நதி என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வது. பகீரதன் தவம் செய்ததே கங்கை நதி பூமியில் இறங்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அவன் தவம் செய்யும்போதே கங்கை நதி பாய்ந்து கொண்டுள்ளது. மற்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், இது முதல் தவறு ...

சிற்பம் தொன்மம் - செந்தீ நடராசன்

Image
சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள்.  கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம்,  இந்தக் கோவிலில் உள்ளது என்று சொல்லிச் செல்வதில்லை. அந்தச் சிலைக்குரிய புராணக் கதைகள், மற்ற இடங்களில் உள்ள அது போன்ற சிலைகள், அச்சிலை பற்றி சிற்ப புத்தகங்களில் சொல்லியுள்ள அம்சங்கள் என விளக்குகிறார் செந்தீ நடராசன் அவர்கள்.  அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்றால் நேராக மூலவரை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவோம். ஆனால் பிரகாரகங்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை நாம் உற்று நோக்குவதில்லை. உண்மையான கலை அங்கே இருப்பதை நாம் அறிவதில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், சண்டேசருக்கு அருள்புரியும் சிற்பத்தைச் சிலர், அந்தச் சிவனே ராஜராஜனுக்கு முடிசூட்டினார் என மாற்றிப் புரிந்து கொள்ளக்கூடும். கோவில்களில் உள்ள சிற்பங்கள் விநாயகர், கிருஷ்ணன், அனும...