ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் - தூக்கு செல்வம்
செல்வன் பெற்றோர் வைத்த பெயர், செல்வம் காவல்துறை கொடுத்த பெயர், தூக்கு செல்வம் சிறை அதிகாரிகள் வைத்த புதிய நாமகரணம். 'சிறை குறித்து சமூகம் கொண்டிருக்கும் பார்வைகள் புதிதல்ல. சமூகம் குறித்து சிறையிலிருக்கும் ஒரு கைதி எழுதியிருக்கும் முதல் விரிவான நூல் இதுவே' - என்று இப்புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கிறது. தூக்கு செல்வம் அவர்களின் இந்த புத்தகம், தண்டனை கைதிகள் என நாம் நினைக்கும் சிறையாளிகள் பற்றியும், சிறைச்சாலைகள் மற்றும் அங்கே உள்ள அதிகார மையங்கள் என நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 'சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் சிறை வாழ்க்கை அனுபவத்தைப் பதிவு செய்யும் செல்வம் தமிழ்நாடு சிறைகளில் நடைபெறும் பல சங்கதிகளையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.' - என்று தனது இப்புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு. தான் எதற்காக சிறைக்கு வந்தேன் எனத் தயக்கமில்லாமல் பின்னோக்கி அனைத்தையும் சொல்லும் செல்வம் சிறைக்கு வந்த பின்னர் கண்ட உலகத்தையும் தெளிவாக நம் முன் வைக்கிறார். அவர் கடந்து வந்த பாதை வலி நிறைந்தது. தினசரிகளில...