காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

பல்லவர் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோவில்களில் ஒன்று காஞ்சி கைலாசநாதர் கோவில். ஒவ்வொரு இடத்திலும் கலைநயம், காலங்களைத் தாண்டி நிற்கிறது. சில சிற்பங்கள் மணல் கற்களால் செதுக்கப்பட்டதால் காலப்போக்கில் தனது பொலிவை இழந்திருக்கிறது. உறுதியான கற்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் காலங்கள் தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது. 

நாங்கள் சென்றபோது அளவான கூட்டமே இருந்தது. காஞ்சியில் உள்ள பிரபலமான கோவில்களில் உள்ள கூட்டம் போல் இங்கே இல்லை. குறைவான மக்கள் வந்து போவதும் இந்த பழைய கோவிலுக்கு நல்லது தான். 


காணும் இடமெல்லாம் கலை நயத்தை காட்சிக்கு வைத்திருக்கும் அற்புதமான கோவில் கைலாசநாதர் கோவில்.  நாம் பார்க்கும் இடமெல்லாம் சிம்ம தூண்கள் அழகுடன் இருக்கிறது.  இந்தக் கோவிலுக்கு பின்னர் பெரிதாக எடுக்கப்பட்ட பல ஆலயங்களுக்கு இந்த ஆலயம் முன்னோடியாக இருந்திருக்கிறது. முக்கியமாக தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சொல்லலாம்.



முன்பு பல சிற்பங்கள் பழுது பார்க்கப்பட்டதில் அரைகுறையாகத் தெரிவது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தக் கோவிலில்  ஓவியங்கள் முன்பு இருந்திருக்கிறது. இப்போது சில கோடுகளும் அங்கங்கே தெரியும் வண்ணங்கள் பூசப்பட்ட சில இடங்கள் மட்டுமே நமக்குத் தெரிகிறது.



கலையையும் வரலாற்றையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய முக்கியமான கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவில். 







Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை