அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி.
ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது.
குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்த்துக் கொண்டே இருந்தோம்.
ஒரு நாள் மேல் சீப்பில் ஒரே ஒரு பழம் மட்டும் ரோஸ் நிறத்துக்கு மாறி இருந்தது. அன்றே வெட்டி வைக்க, இரண்டு மூன்று நாட்களில் அனைத்து சீப்புகளும் பழுத்து விட்டது. முதல் சீப்பில் பதினேழும், மற்ற சீப்புகளில் 15 முதல் 16 வரையிலும் பழங்கள் இருந்தன. எந்தச் செயற்கை உரமும் போடாமல் விளைந்த செவ்வாழையின் ருசி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அடுத்த பக்க கன்று வளர்ந்து வருகிறது, அடுத்த வருடமும் செவ்வாழை உண்டு. :)
வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்களே மனதிற்கு எத்தனை குளிர்ச்சி + மகிழ்ச்சி...!
அருமையாக இருக்கு!
ReplyDeleteவாழையுள்ள நிலத்தில் நிழல் அதிகம் விழுமோ? மரம் அதிக உயரமாக வளர்ந்துள்ளதால் கேட்டேன்.
செவ்வாழை ஒரு பழம் பத்து ரூவாய்க்கும் மேல சொல்றாங்க , நாங்கல்லாம் படத்துல பார்க்குறதோட சரி :( .
ReplyDeleteதேன் வாழைக்கு - கேரளா ரஸ்தாளி என்றொரு பெயரும் உண்டா ?
எங்க வீட்டில் பச்சை வாழைக்கன்று இப்பதான் துளிர் விட ஆரம்பிச்சிருக்கு. அடுத்த வருச நானும் இப்படி ஒரு பதிவு போடுவேன்.
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteநன்றிங்க..
அருமை ஐயா, வாழை மரமும் செவ்வாழை பழமும் அழகு...
ReplyDelete@யோகன் பாரிஸ்(Johan-Paris)
ReplyDeleteஆமாங்க, நிழல் அதிகம் தான்.. பக்கத்து வீட்டில் தென்னை மரம் இருக்கிறது..
நன்றிங்க
@ஜீவன் சுப்பு
ReplyDeleteமற்ற வாழைகளின் அறுவடைக் காலத்தை விட, செவ்வாழை அறுவடை காலம் அதிகம். அதுபோலவே தாரில் சீப்புகளும் குறைவு. எனவேதான் அந்த விலை.
தேன் வாழைக்கு அந்த பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சில இடங்களில் இதே பழத்தையே கற்பூரவல்லி என்றும் சொல்கிறார்கள்.
நன்றிகள் சுப்பு.
@ராஜி
ReplyDeleteஅவ்வபொழுது கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு, புளிக்க வைத்த மோர், மீன் தொட்டி கழுவிய தண்ணீர் என்று உரமிடுங்கள். வாழை அமோகமாக வரும்.
நன்றிங்க.
என்னோட பெரிய அண்ணா (பியூசி) கடைசி பேட்ச்.. அவரின் துணைப்பாடத்தில் இந்தக் கதை படிச்சிருக்கேன் அப்போலருந்து எனக்கு செவ்வாழை சாப்பிடணும்னு ஆசை எங்க கிராமத்துல கிடையாது...அப்புறம் கல்லூரி முடித்து சென்னையில் தான் அதை வாங்கி சாப்பிட முடிந்தது.. அந்த சிறு வய்து ஆசை இப்பவும் செவ்வாழை எங்கு பார்த்தாலும் வாங்கி விடுவேன்.. தோட்டத்தில் போடலாம் ஆனா எங்களுக்கு குறைவான இடமே தோட்டத்திற்கு உள்ளதால் வாழை போட்டால் இடம் அடைத்து கொள்கிறது என்று விட்டுவிட்டேன் முதல்லெல்லாம் கற்பூர வல்லி போட்டிருந்தேன்,...ஒரு முறைக்கு 250 காய் வரை காய்க்கும்..
ReplyDeleteHi......I tried to grow red banana in my garden.....but Malai banana only yielded.good luck to u.....ur blog is informative......this is the first time I have come across ur blog......keep it up....
ReplyDeleteஹைய்யோ!!!! பார்க்கவே அற்புதமா இருக்கு! இனிய பாராட்டுகள்.
ReplyDeleteநியூஸியில், எங்க ஊரில் நம்ம வீட்டில் மட்டுமே ஒரு வாழை பத்துவருசமா தொட்டியில் இருக்கு. குளிர்காலம் வந்தவுடன் ஏறக்குறைய செத்து, வசந்தத்தில் பிழைக்கும். வாழை நம்ம வீட்டில் இருக்கு என்ற பெருமைதான் எனக்கு:-))))
பழமும் பதிவும் இனித்தன!
ReplyDeleteதங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது.
ReplyDeletehttp://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_27.html
அருமை, அற்புதமா இருக்கு
ReplyDeleteநண்பாஎங்குகிடைக்கும்
ReplyDelete