Wednesday, October 20, 2010

கவிதை எழுதாத நாள்














துரோகத்தைச் சந்திக்காத
நட்பை உணராத
புன்னகை உதிர்க்காத
புதியவை கற்காத
காதலிக்கத் தோன்றாத
குழந்தை முகம் பார்க்காத
பூக்களின் வாசம் முகராத
வெயிலின் தீண்டல் அறியாத
காற்றின் உயிர் காணாத

நாட்களெல்லாம்
கவிதை எழுதாத நாளாகவே முடிகிறது !




படம் : இணையத்திலிருந்து - நன்றி.

================================

25 comments:

  1. ரணங்கள் ஆறாத..
    தோழமை பேசாத,.
    சில்லென்று சிரிக்காத..
    புத்தகம் படிக்காத..
    நினைத்தது மறக்காத..
    துளிர்கள் விரியாத..
    தென்றல் தீண்டாத..
    ஆறுதல் வாராத..
    நெஞ்சம் மலராத..
    நாட்களெல்லாம்..
    கவிதை எழுதியாகும் நாட்கள்!
    எதிர் பாட்டு!!!

    ReplyDelete
  2. கவிதைக்கான கருவுகளை வைத்தே ஒரு கவிதை... அருமை.

    ReplyDelete
  3. ச்சே... இப்படி எல்லாம் எழுத நமக்கு வர மாட்டேங்குதே... பேசாம இளங்கோ கிட்ட அசிச்டண்டா சேந்துட வேண்டியதுதான்...

    ReplyDelete
  4. சிறப்பாக உள்ளது!

    ReplyDelete
  5. கவிதை எழுதாத நாட்கள் எல்லாம் சொல்லிட்டீங்க..
    எப்பெல்லாம் கவிதை எழுத தோணும்? அதயும் சொல்லுங்க.. :-))

    ReplyDelete
  6. //ஷஹி said...

    ரணங்கள் ஆறாத..
    தோழமை பேசாத,.
    சில்லென்று சிரிக்காத..
    புத்தகம் படிக்காத..
    நினைத்தது மறக்காத..
    துளிர்கள் விரியாத..
    தென்றல் தீண்டாத..
    ஆறுதல் வாராத..
    நெஞ்சம் மலராத..
    நாட்களெல்லாம்..
    கவிதை எழுதியாகும் நாட்கள்!
    எதிர் பாட்டு!!!
    //

    நன்றிங்க ஷஹி. எதிர் பாட்டு பாடியதற்கு. :)

    ReplyDelete
  7. //ம.தி.சுதா said...

    நல்லாயிருக்க....
    //

    நன்றி நண்பா..

    ReplyDelete
  8. //Chitra said...

    கவிதைக்கான கருவுகளை வைத்தே ஒரு கவிதை... அருமை.
    //

    பாராட்டுக்கு நன்றிங்க சித்ரா அக்கா.

    ReplyDelete
  9. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    ச்சே... இப்படி எல்லாம் எழுத நமக்கு வர மாட்டேங்குதே... பேசாம இளங்கோ கிட்ட அசிச்டண்டா சேந்துட வேண்டியதுதான்...
    //

    மொதல் போனி நீங்கதான் பிரகாஷ், சீக்கிரம் சேர்ந்துடுங்க. :)
    நன்றிங்க.

    ReplyDelete
  10. //எஸ்.கே said...

    சிறப்பாக உள்ளது! //

    நன்றிங்க எஸ்.கே

    ReplyDelete
  11. //Ananthi said...

    கவிதை எழுதாத நாட்கள் எல்லாம் சொல்லிட்டீங்க..
    எப்பெல்லாம் கவிதை எழுத தோணும்? அதயும் சொல்லுங்க.. :-))
    //

    ஒவ்வொரு வரியின் கடைசி வார்த்தைகளில் 'ம்' சேர்த்துக்குங்க. உதாரணத்துக்கு 'உணராத' -- 'உணரும்' .

    ஷஹி தான் மேல எதிர் பாட்டு போட்டிருக்காங்க. அது கூட கவிதை எழுத தோணும் நேரங்கள்தான்.

    :).

    நன்றிங்க ஆனந்தி.

    ReplyDelete
  12. அந்த லிஸ்ட்ல இருக்கறது எதுவும் இன்னிக்கி நடக்கலை. அதனால் ஒரு கவிதை. அப்படித்தானே இளங்கோ. இன்னும் ரெண்டு வரி சேர்த்து எழுதியிருக்கலாம். அப்ப இன்னும் கொஞ்சம் டெப்த் கிடைச்சிருக்கும் தோணுது. நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நல்லாயிருக்குங்க கவிதை..

    ReplyDelete
  14. கவிதை எழுதாதநாள் அதற்கு ஒரு கவிதை சொல்லி கலக்குறிங்க

    ReplyDelete
  15. @ ஆர்விஎஸ்
    தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஆர்விஎஸ் அண்ணா.

    ReplyDelete
  16. @ பதிவுலகில் பாபு
    நன்றிங்க பாபு.

    ReplyDelete
  17. //சௌந்தர் said...

    கவிதை எழுதாத நாள் அதற்கு ஒரு கவிதை சொல்லி கலக்குறிங்க
    //
    நன்றிங்க சௌந்தர். :)

    ReplyDelete
  18. இந்த மாதிரி முத்தான எழுத்துக்களை
    படிக்காத நாளும்-எனக்கு
    கவிதை எழுதாத நாளாகவே முடிகிறது !
    அருமை நண்பரே..

    ReplyDelete
  19. //ஒவ்வொரு வரியின் கடைசி வார்த்தைகளில் 'ம்' சேர்த்துக்குங்க. உதாரணத்துக்கு 'உணராத' -- 'உணரும்' //

    ஹ்ம்ம்... ஓகே ஓகே..
    ஷஹி எதிர் கவிதையும் பார்த்தேன்.. :-))

    ReplyDelete
  20. //padaipali said...

    இந்த மாதிரி முத்தான எழுத்துக்களை
    படிக்காத நாளும்-எனக்கு
    கவிதை எழுதாத நாளாகவே முடிகிறது !
    அருமை நண்பரே..
    //

    தங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  21. Elanko pls see suseela amma's blog..

    ReplyDelete
  22. அழகான சிந்தனை இளங்கோ!

    ReplyDelete
  23. //Abhi said...

    அழகான சிந்தனை இளங்கோ!
    //

    நன்றிங்க Abhi.

    ReplyDelete
  24. //ஷஹி said...

    Elanko pls see suseela amma's blog..
    //

    நான் முன்னமே அந்தப் பதிவைப் படித்து விட்டேன். நீங்கள் எழுதிய கடிதம், அந்தப் பெயரில்லா எழுதிய மறுப்பு, ஜெயமோகன் பதில் என அருமை.

    வாழ்த்துக்கள் ஷஹி.

    ReplyDelete