இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று ஒரு வழக்கு உண்டு. ஆயிரம் கண்கள் இருக்கிறதோ இல்லையோ, இரவு என்பது நாம் இளைப்பாற ஏற்பட்டது என்றுதான் எனக்குப் படுகிறது. காலை எழுந்தவுடன் விழித்த கண்கள் ஓய்வை நோக்கி காத்திருக்கும் நேரம் இரவு. உடல் மனம் என அனைத்தும் ஓய்வெடுத்து அடுத்த நாளுக்கு தயாராவதும் இரவில்தான்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் நாவலில் 'எல்லாருடைய துக்கத்தையும் மறக்கச் செய்யும் இரவு' என்று சொல்லியிருப்பார். ஆம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேதனைகள், பிரச்சனைகள், சங்கடங்கள் அவை எல்லாவற்றையும் மறந்து போகச் செய்யும் ஆற்றல் இரவுக்கு உண்டு.
நிசப்தமான இரவுகளில் அலைந்து கொண்டிருக்கும் நபர்கள், நெடுஞ்சாலையில் கனரக வண்டியை செலுத்திக் கொண்டிருப்பவர்கள், அயல் நாட்டு நேரத்தில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர்கள், உறவுகளை இழந்து வாடுபவர்கள் என எல்லோரையும் இரவு தன் வலிய கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது.
எண்ணிப் பார்த்தால் துக்கத்துக்கும் தூக்கத்துக்கும் ஒரு 'கால்' தான் வித்தியாசம். துக்கம் - தூக்கம்.
இரவில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதாவது செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் நம் கண்களை இழுத்துக் கொண்டு போகிறது. இந்த வார்த்தைகளைக் கூட ஓர் இரவு நேரத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆறுதல் கூறும் நண்பன் போல தினமும் இருப்பது இந்த இரவு மட்டும் தான் அல்லவா ?.
இரவை நேசிப்போம். [தூங்கிக் கொண்டு :) ]

அருமையாக உள்ளது
ReplyDeleteநிசப்தமான இரவுகளில் அலைந்து கொண்டிருக்கும் நபர்கள், நெடுஞ்சாலையில் கனரக வண்டியை செலுத்திக் கொண்டிருப்பவர்கள், அயல் நாட்டு நேரத்தில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர்கள், உறவுகளை இழந்து வாடுபவர்கள் என எல்லோரையும் இரவு தன் வலிய கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது.
ReplyDelete...... இரவின் நிசப்தம் - மனதின் அலறல் கேட்க வைக்கும் என்று வாசித்து இருக்கிறேன்.
இரவை நேசிப்போம் நிச்சயமாக ...
ReplyDeleteஇரவை நேசிப்போம். [தூங்கிக் கொண்டு :)///
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு
@ nis (Ravana)
ReplyDeleteநன்றி nis (Ravana).
//Chitra said...
ReplyDelete...... இரவின் நிசப்தம் - மனதின் அலறல் கேட்க வைக்கும் என்று வாசித்து இருக்கிறேன். //
அதுவும் உணமைதாங்க சித்ரா அக்கா. பகலில் கூட எதாவது ஒன்றைப் பார்த்துக்கொண்டு இருந்து விடலாம். ஆனால் இரவில், நம் மனதை உற்றுக் கவனித்தால் அதன் அலறல் துக்கம் எல்லாம் புரியும். அதையும் மீறி தூக்கம் இழுத்துக் கொண்டு விடும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
//புதிய மனிதா.. said...
ReplyDeleteஇரவை நேசிப்போம் நிச்சயமாக ... //
நன்றி புதிய மனிதா தங்களின் வருகைக்கும், இரவை நேசிப்போம் என்று சொன்னதற்கும்.
// சௌந்தர் said...
ReplyDeleteஇரவை நேசிப்போம். [தூங்கிக் கொண்டு :)///
ரொம்ப நல்லா இருக்கு
//
நன்றி சௌந்தர் அண்ணா.
உறக்கம் என்பது தற்காலிக சாவு, சாவு என்பது நிரந்தர உறக்கம் - காந்தி.
ReplyDeleteஉறக்கத்திற்கு
பிந்தைய பொழுதுகள்
ஒரு புதுப்பிறவிதான்.
ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறக்க
உறக்கமே உதவுகிறது.
ஆம் நேசிப்போம் இரவுகளை
உறக்கத்தோடு...
பதிவின் லே அவுட் சூப்பர்.நல்ல தெளிவான எழுத்து நடை
ReplyDelete//முரளிகுமார் பத்மநாபன் said...
ReplyDeleteஉறக்கம் என்பது தற்காலிக சாவு, சாவு என்பது நிரந்தர உறக்கம் - காந்தி.
உறக்கத்திற்கு
பிந்தைய பொழுதுகள்
ஒரு புதுப்பிறவிதான்.
ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறக்க
உறக்கமே உதவுகிறது.
ஆம் நேசிப்போம் இரவுகளை
உறக்கத்தோடு...
//
அதனால்தான் 'உறங்குவது போலும் சாக்காடு' என்று சொல்லியிருக்கிறார்கள்.
நன்றி முரளி.
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபதிவின் லே அவுட் சூப்பர்.நல்ல தெளிவான எழுத்து நடை//
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்
நன்றி செந்தில் அண்ணா.
என்னுடைய கவிதை "இரவெனும் ஆழி"....படித்து விமர்சியுங்கள் இளங்கோ...asainila.blogspot.com இல்... உங்கள் கருத்துக்கு மாற்றமாக எழுதியுள்ளேன்..
ReplyDeleteபடித்துப் பின்னூட்டம் கூடப் போட்டு விட்டேன்.
ReplyDeleteநன்றி ஷஹி.
ஆமாம்.. எனக்கும் தூக்கம் வருகிறது.. ஆனால் பின்னூட்டம் இடாமல் தூங்கக்கூடாது என்று உங்கள் எழுத்து என்னைக் கட்டிப் போட்டு கட்டளை இடுகிறது..
ReplyDeleteஎன்ன செய்வது சாமக்கோடங்கியின் வேலையே இரவில் தானே...
சாமக்கோடங்கி..
@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி..
ReplyDeleteதூக்கம் சொக்கும் இரவிலும் கண் விழித்து பின்னூட்டம் போடும் தங்களுக்கு என் நன்றிகள்.
ஆமாம், சாமகோடாங்கிகள் இரவு தூங்க கூடாதுல்ல..? :)