தானியங்களை அதன் மேல் உமி மட்டும் நீக்கி விட்டு, அப்படியே உண்ட அந்தக் காலங்களில் எந்த நோயும் அணுகவில்லை. இப்பொழுது வெள்ளை ஆக்குகிறோம் என்ற பெயரில் "பாலிஷ்" செய்து உண்கிறோம். நார்ச் சத்து எல்லாம் நீக்கி விட்டு, வெறும் மாவை மட்டும் உணவாக உண்கிறோம். மெல்ல வேண்டியதில்லை, உடனே ஒரே கொதியில் சோறு வெந்து விடுகிறது, சுவையாக இருக்கிறது எனப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
அது போலவே சிறு தானியங்களும். கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, பனிவரகு, சாமை என எவ்வளவோ தானியங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் நாம் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. தீராத பின் விளைவுகளைத் தரும் ரெடிமேட் உணவுகளின் பின்னர் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
பலர் இப்பொழுது சிறு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினாலும், அதையும் பாலிஷ் செய்து விற்கிறார்கள். வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை நாம் பாலிஷ் செய்வதால், அதில் உள்ள முதன்மையான சத்துக்களை இழக்க நேர்கிறது.
கடைகளில் சிறு தானியங்களை வாங்கி சமைத்து உண்டிருக்கிறோம் நாங்கள். ஆனால் எல்லாம் பாலிஷ் செய்தவையாக இருந்தது. நாமே ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பசுமை விகடன் கட்டுரைகள், மசானபு புகோகா அவர்களின் புத்தகங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமானது.
கடை ஆரம்பிக்கலாம் என கடை தேடி அலைந்தோம். ஆனால் வாடகை, இடம் என எதுவும் சரியாக அமையவில்லை. ஏன், நம் வீட்டிலேயே சிறு கடை போல ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். இதோ நேற்று (23/02/2015) அன்று "தரு இயற்கை அங்காடி" என்ற பெயரில், கோவையில் எங்கள் வீட்டின் முன்பாகவே கடையைத் துவங்கி விட்டோம்.
எங்களிடம் அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த நிலக்கடலை, தட்டைப் பயிறு, கொள்ளு போன்ற பருப்பு வகைகளும்,சுத்தமான கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை கிடைக்கும்.
நீங்கள் கோவை மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றால், ஒருமுறை வருகை தந்து பாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
எங்கள் முகவரி:
தரு இயற்கை அங்காடி
C-285, சேரன் மாநகர்,
6-வது பேருந்து நிறுத்தம் அருகில்,
விளாங்குறிச்சி,
கோவை - 641 035
Tharu Organic,
C-285, Cheran Managar,
Near 6th Bus Stop,
Vilankurichi,
Coimbatore - 641 035.
அருமை .முகபுத்தகதிலும் பகிர்கிறேன் .
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதம +1
வணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்வது 100வீதம் உண்மைதான் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உரிய கருத்து.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாவ்! வாழ்த்துகள்! இதைப் பற்றி நானும் நண்பரும் யோசித்துக் கொண்டிருந்தோம். முகநூலிலும் பகிர்கிறேன்.
ReplyDeleteத.ம.2
அன்பு நன்றிகள் நண்பர்களே..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. நாங்களும் சிறு தானியங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறோம். நேரமிருக்கும் போது உங்கள் கடைக்கு வர முயற்ச்சிக்கிறோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.. வாருங்கள்
ReplyDeleteஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யவும் முயன்று வருகிறோம். தளம் செயல்பாட்டுக்கு வரும்போது அறிவிக்கிறோம்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை
வலைச்சர தள இணைப்பு : கோழி முட்டையும் வலைப்பூவும்
நன்றிகள் நண்பரே..
ReplyDeleteஉங்களிடம் வாங்கிய தட்டைப் பயிரை இன்று உண்டேன். அருமையாக இருந்தது. காலம் மாறக் காத்திராமல் மாற்றத்தை உண்டாக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். முயற்சியில் சிறிதென்ன பெரிதென்ன..
ReplyDeleteநன்றிகள் சாமக்கோடங்கி நண்பரே..
ReplyDeleteOnline Store: www.tharuorganic.com
ReplyDelete