தமிழ்நாடு
அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில்
மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)'
கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள்
தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான
ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள்.
தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன் சேர்க்க வேண்டும்.
மாடித் தோட்டம் மற்றும் கீரைப் படங்களின் தொகுப்பு.
(விதைக்கத் தயாராக இருக்கிறது - மாடித் தோட்டம்)
முளைத்து வரும் கீரை விதைகள்..
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரை - அறுவடைக்குப் பின்னர்
அருமையா இருக்கு இப்பவும் கிடைக்குமா இந்தப் பைகளும், தென்னை நாரும்...
ReplyDelete@ezhil
ReplyDeleteகீழ்க்கண்ட முகவரியில் விசாரித்துப் பாருங்கள்:
Department Of Horticulture & Plantation Crops
No.8, Thadagam Road,
GCT Post,
Coimbatore.
Ph: 2453578
அருமை.
ReplyDeleteநானும் க்ரீன்ஹவுஸில் கீரை போட்டுருக்கேன். ரெண்டு முறை அறுவடை முடிச்சு சமையலும் ஆச்சு. ஆனால் எல்லாமே ஒரே ஒரு வகைதான்:( இந்தியாவைப்போல் இங்கெ வகைவகையான கீரைகள் இல்லை:(