ஜூலை மாதம் ஆரம்பித்த மாடித் தோட்டம் அறுவடை முடியப் போகிறது. கீரைகள் குறை இல்லாமல் வளர்ந்தன. கொத்தவரை, வெண்டை போன்றவை பூச்சி தாக்குதலால் சரியாக வரவில்லை. இனி அடுத்த விதைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
முதல் முறை என்பதால், நிறைய காய்க்கவில்லை. போலவே ரசாயனங்கள் பயன்படுத்தவில்லை. சாணி உரம், ஆட்டுப் புழுக்கை உரம், கொஞ்சம் செம்மண் என்று கலந்துதான் வைத்தேன். அடுத்த முறை, மண்புழு உரம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.
தக்காளி
கத்தரி
மிளகாய்
கீரைகள்
அறுவடை செய்த பின்னர்:
நண்பர் சிவா அவர்களின் http://thooddam.blogspot.in/ எனும் பதிவில் மாடித் தோட்டம் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. மாடித் தோட்டம் அமைக்க உங்களுக்கு ஆர்வமிருப்பின், இவரின் பதிவுகள் மிகுந்த பயனளிக்க கூடியவை.
எங்க வீட்டிலும் தக்காளி சூப்பரா வந்தது கத்தரி இப்பத்தான் வளருது....பார்க்கலாம்...
ReplyDeleteஅருமை
ReplyDeletegood
ReplyDeleteகண்களை கவர்ந்திழுக்கும் கத்தரிக்காய் ,பச்சைமிளகாய் படங்கள் அருமை .
ReplyDelete