Wednesday, December 8, 2010

காதல் செய்வீர் உலகத்தீரே!

உலகம் என்ன சொல்லும்
என்கிறாய்
உன்னையும் என்னையும் தவிர
உலகத்தில்
யாருமில்லை கண்ணே !

*********************************

நீ
வெட்டி விலகிச்
செல்லும் போதெல்லாம்
வெட்ட வெட்ட
மீண்டும் தழைக்கும் தாவரமென
வளர்கிறது
உன்மேலான என் பிரியம் !

*********************************

தென்றலாய் நடந்தாய்
மணியாய் சிரித்தாய்
தண் நிலவாய்ப் பார்த்தாய்
ஒரு நாள்
கவிதையாய்ப் பேசியபோதுதான்
நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் !

*********************************

20 comments:

  1. எத சொல்ல? எத விட? எல்லாமே அருமை சகோ

    ReplyDelete
  2. 1.காதல் செய்யும் பொது உலகமே கண்ணுக்குத் தெரியாதே :)

    2.வற்றுவதேயில்லை ப்ரியம்
    உன் வருகை இல்லாத கணத்திலும்.. :)

    3.கவிதை பேசிய கவிதை! :)

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  4. நல்ல ஃபீல்.. எல்லாக் கவிதைகளுமே நல்லாயிருந்தது..

    ReplyDelete
  5. உன் கண்கள் இரண்டும்
    காற்றில் கவிதை
    பேசியபோது...
    என் கை கவிதை கிறுக்க
    தொடங்கியது....

    அனைத்தும் அருமை இளங்கோ.

    ReplyDelete
  6. கவி வரிகளில் கலக்குறீங்க

    ReplyDelete
  7. "அணுஅணுவாய்க் கொல்லும் விஷம் ஆயிரம் உண்டு!
    காதல் என்பது...
    அதில் அழகிய ஒன்று!"

    பிரமாதம் இளங்கோ..

    ReplyDelete
  8. //உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

    அருமை
    //
    நன்றிங்க உலவு.

    ReplyDelete
  9. //ஆமினா said...

    எத சொல்ல? எத விட? எல்லாமே அருமை சகோ
    //

    ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  10. //Balaji saravana said...

    1.காதல் செய்யும் பொது உலகமே கண்ணுக்குத் தெரியாதே :)
    2.வற்றுவதேயில்லை ப்ரியம்
    உன் வருகை இல்லாத கணத்திலும்.. :)

    3.கவிதை பேசிய கவிதை! :)
    //

    அழகா நீங்களே கவிதை எழுதிட்டீங்க தோழரே.
    ரசித்து எழுதிய வரிகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. //Chitra said...

    அனைத்தும் அருமை.
    //

    நன்றிங்க அக்கா.

    ReplyDelete
  12. //பதிவுலகில் பாபு said...

    நல்ல ஃபீல்.. எல்லாக் கவிதைகளுமே நல்லாயிருந்தது..
    //

    காதல்னாலே ஃபீல் தானே தலைவரே !
    நன்றிங்க.

    ReplyDelete
  13. //RVS said...

    உன் கண்கள் இரண்டும்
    காற்றில் கவிதை
    பேசியபோது...
    என் கை கவிதை கிறுக்க
    தொடங்கியது....

    அனைத்தும் அருமை இளங்கோ.
    //

    ஆஹா, காதல் என்று சொன்னாலே கவிதைகள் சரளமாக வருகின்றன.
    பாராட்டுக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  14. //nis said...

    கவி வரிகளில் கலக்குறீங்க
    //

    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  15. //ஷஹி said...

    "அணுஅணுவாய்க் கொல்லும் விஷம் ஆயிரம் உண்டு!
    காதல் என்பது...
    அதில் அழகிய ஒன்று!"

    பிரமாதம் இளங்கோ..
    //

    நன்றிங்க ஷஹி

    ReplyDelete
  16. "உன்னையும் என்னையும் தவிர
    உலகத்தில்
    யாருமில்லை கண்ணே "-இந்த வரி பிடித்தது அன்பரே அருமை

    ReplyDelete
  17. //சி.பிரேம் குமார் said...

    "உன்னையும் என்னையும் தவிர
    உலகத்தில்
    யாருமில்லை கண்ணே "-இந்த வரி பிடித்தது அன்பரே அருமை
    //

    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  18. அனைத்தும் அருமை ....ஆதலினால்...

    ReplyDelete
  19. //பத்மநாபன் said...

    அனைத்தும் அருமை ....ஆதலினால்...
    //

    ஆதலினால் காதலைக் காதலிப்போம் அண்ணா. !!

    நன்றிங்க.

    ReplyDelete