Tuesday, December 21, 2010

உலரும் குருதி















ரீங்காரமிட்டு
சுற்றி சுற்றி வந்தது
பெரும் கொசுவொன்று...
இரண்டு மூன்று முறை
அடிக்க முயற்சித்தும் தப்பி விட
இம்முறை தவற விடக் கூடாதென
ஆடாமல் அமர
முன்கையில் வந்தமர்ந்து
குருதி ருசியில் சொக்கியது..

ஓங்கி அடித்த அடியில்
வெளிவந்த குருதி
இப்பொழுது
என் உடம்பிலும் இல்லை
கொசுவின் உடம்பிலும் இல்லை
காற்றில் உலர்ந்து கொண்டிருந்தது..!

படம்: இணையத்தில் இருந்து. நன்றி.

பின்குறிப்பு: கவனிக்க, இதை நான் கவிதை லேபிளில் அடைக்கவில்லை !! :)


20 comments:

  1. பின்குறிப்பு இல்லைனாலும் அது எந்த கேடகரில வரும்னு எல்லோருக்கும் தெரியும் :)
    //உலரும் குருதி //
    தலைப்பு அட்டகாசம்..

    ReplyDelete
  2. அனால் நியத்தை விளங்கிக் கொண்டேன் சகோதரா...
    எங்கே நம்ம ஓடைப்பக்கம் காணல..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  3. ஹை..இது நல்லா இருக்கே...'கவிதைன்னு நான் சொல்லல' அப்புடின்னு சொன்னா..நாங்க விட்டுடுவோமா? இருங்க கேஸ் போடறேன்!
    (தலைப்பு நல்லா இருக்கேன்னு நம்பி வந்தா....)

    ReplyDelete
  4. இறுதி வரிகளால் கவிதை என்ற வரம்புக்குள் வருகிறது.
    பட தெரிவு அருமை.

    ReplyDelete
  5. ஓ, எங்க வாயால கவிதை-னு சொல்லனுமா?
    சரி... கவித, கவித...
    (நாங்களும் கோயமுத்தூர் தானுங்கோ)

    ReplyDelete
  6. தலைப்பு நல்லா இருக்குங்க.. கவிதையும் தான்.. :)

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  8. கொசுவும் குருதியும் ...... ஒரு சொட்டு ரத்தம் வீணாப் போயிடுச்சு... நல்லா இருக்கு எதிலும் சேராதவை... ;-)

    ReplyDelete
  9. @Balaji சரவணா
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  10. @ம.தி.சுதா
    அன்பு நண்பரே, தங்கள் ஓடைக்கு நான் வந்து கொண்டேதான் இருக்கிறேன். :)

    நன்றிங்க.

    ReplyDelete
  11. @ஷஹி
    நன்றிங்க ஷஹி :).

    ReplyDelete
  12. @பாரத்
    நன்றிங்க.
    வரிகளை ரசித்தமைக்கு என் நன்றிகள்.

    //சரி... கவித, கவித..//
    நீங்களும் கோவை தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். :)

    ReplyDelete
  13. @பால் [Paul]
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  14. @வைகறை
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  15. @ஜீ...
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  16. //RVS said...

    கொசுவும் குருதியும் ...... ஒரு சொட்டு ரத்தம் வீணாப் போயிடுச்சு... நல்லா இருக்கு எதிலும் சேராதவை... ;-)
    //

    ஆமாங்க அண்ணா, ரத்தம் வீணாப் போயிருச்சு. :) அந்தக் கொசுவ அடிச்சா அப்புறம்தான் யோசிச்சேன்.

    நன்றிங்க அண்ணா.

    ReplyDelete
  17. இளங்கோ..

    இப்பக் கேளுங்க...

    கொசுவுக்கேல்லாம் பாவம் பாத்தா
    நிம்மதி என்றுமே இருக்காது..

    பத்திய நீயும் கொளுத்தி வெச்சா
    தொந்தரவென்பதே நெருங்காது..

    மின்சார மட்ட வாங்கினாலும்
    வாரண்டி என்பதே கிடையாது..

    பாதி தூக்கத்துல எழுந்துகிட்டா
    மறுபடி தூங்க முடியாது..

    சாக்கடைக்கு மருந்தடிக்க அரசுக்கும்
    என்றுமே தோன்றாது..

    தேர்தல் அறிக்கை தயாரிக்கவே
    அவர்களுக்கு நேரம் போதாது.."

    ஆக..

    இந்த நாட்டில் கொசுவையும் அரசியல்வாதிகளையும் ஒழிக்கவே முடியாது...

    கவிதை நல்லா இருக்குங்க இளங்கோ.. (உணர்ச்சி வசப் பட்டுட்டனோ..)

    ReplyDelete
  18. இத சொன்னதினால கொசுவால என்னோட உயிர்க்கு ஒன்னும் ஆபத்தில்லையே...

    ReplyDelete
  19. @சாமக்கோடங்கி
    ஆஹா, சாமக்கோடாங்கி கவிஞரா மாறிட்டார். :)

    //இந்த நாட்டில் கொசுவையும் அரசியல்வாதிகளையும் ஒழிக்கவே முடியாது...//
    அதிலும் இந்த வரிகள் அருமை பிரகாஷ்.

    உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல, அப்பப்போ கடிச்சு வெச்சு காய்ச்சல், உடல் வலி அப்படின்னு சின்ன சின்னதா வரும். :)

    ReplyDelete