Monday, December 6, 2010

பயோடேட்டா : மழை


பெயர்: மழை

சாதனை: உயிர்கள் தோன்ற காரணமாக இருந்தது

இருப்பிடம்: வானம், பூமி, ஆறு, கடல் முதற்கொண்டு உங்கள் வீட்டின் நீர் பிடிக்கும் பாத்திரங்கள் என அனைத்திலும்.

நிறம்: இல்லை

பிடித்த இடம்: என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை எழுதும் கவிஞர்களின் மனம்.

பிடித்தவர்கள்: மரம் வளர்ப்பவர்கள்

பிடிக்காதவர்கள்: மரம் + காடுகளை அழிப்பவர்கள், சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள்.

எரிச்சல்: வெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால்.

நீண்ட கால சாதனை: இன்னும் பெய்து கொண்டிருப்பது, உயிர்களை வாழ வைப்பது.

சோகம்: முன்காலம் போல் மும்மாரி எல்லாம் பொழிய முடியாமல், குறைவாக பெய்வது. (இதற்கே மக்கள் 'வரலாறு காணாத மழை, வீட்டில் வெள்ளம்' என்று செய்தியில் சொல்லுகிறார்கள்).

பிடித்த குறள் : விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

**********************************

நன்றி: மழைப் படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.


19 comments:

  1. ஃஃஃஃவெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால்ஃஃஃஃ

    அட அட அட என்ன ஒரு அருமையான ரசனை....

    ReplyDelete
  2. மழையின் தற்குறிப்பு நன்று. பயோடேட்டா ?!! ;-)

    ReplyDelete
  3. எங்கே பார்த்தாலும் மழை .. இங்கேயுமா..

    பயோடேட்டா நல்லாதானிருக்கு

    ReplyDelete
  4. //ம.தி.சுதா said...

    அட அட அட என்ன ஒரு அருமையான ரசனை....
    //

    நன்றி சகோதரா.

    ReplyDelete
  5. //RVS said...

    மழையின் தற்குறிப்பு நன்று. பயோடேட்டா ?!! ;-)
    //

    அண்ணா, தெரியாமா இங்க்லீஷ்ல இல்ல ஆங்கிலத்தில(!) பேர் வெச்சிட்டேன். இனி தற்குறிப்புன்னே பதிவிடுகிறேன்.

    நன்றி RVS அண்ணா.

    ReplyDelete
  6. //வெறும்பய said...

    எங்கே பார்த்தாலும் மழை .. இங்கேயுமா..

    பயோடேட்டா நல்லாதானிருக்கு
    //

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. //வெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால்.//

    இங்க நல்ல மழை , இனி திட்ட முடியாது :))

    ReplyDelete
  8. பிடித்த இடம்: என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை எழுதும் கவிஞர்களின் மனம்.


    ....அழகு. அருமை. உண்மை.

    ReplyDelete
  9. மழையின் தற்குறிப்பு அனைத்தும் அருமை..அய்யனின் குறளான...விசும்பின் துளி விழாமையால் வரும் வினையை இங்கு நன்றாகவே உணர்ந்து வருகிறோம்...

    ( நல்ல மழை நம் மாநிலத்தில் பெய்யும் செய்தி மனதை குளிராக்குகிறது...)

    ReplyDelete
  10. பயோடேட்டா சூப்பர்..

    ReplyDelete
  11. அருமை. சில நேரம் தொந்தரவு எனினும் மழை அவசியம் வேண்டும் தான்

    ReplyDelete
  12. மழை எப்போதும் அழகு, இப்போது "பயோடேட்டா" விலும் :)

    ReplyDelete
  13. அருமை நண்பா..வார்த்தைகளில் மழை பெய்கிறது!

    ReplyDelete
  14. @nis
    நன்றி நண்பரே

    @சித்ரா
    நன்றி சித்ரா அக்கா.

    @பத்மநாபன்
    தங்கள் பாராட்டுக்கு நன்றிங்க.
    மழை இல்லாவிடில், சிறு புல் கூட தலை காட்டாது என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம். :)

    @பாபு
    நன்றிங்க பாபு

    ReplyDelete
  15. //மோகன் குமார் said...

    அருமை. சில நேரம் தொந்தரவு எனினும் மழை அவசியம் வேண்டும் தான்
    //

    ஆமாங்க நண்பரே. மழை இல்லை என்றால் எதுவுமே இல்லை.

    ReplyDelete
  16. //Balaji saravana said...

    மழை எப்போதும் அழகு, இப்போது "பயோடேட்டா" விலும் :)
    //
    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  17. //padaipali said...

    அருமை நண்பா..வார்த்தைகளில் மழை பெய்கிறது!
    //

    நன்றிங்க படைப்பாளி நண்பரே.

    ReplyDelete
  18. This is beautiful..congrats elango..

    ReplyDelete
  19. //ஷஹி said...

    This is beautiful..congrats elango..
    //

    நன்றிங்க ஷஹி.

    ReplyDelete