அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோருடைய கனவுகளும் இந்த வருடம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
(மேலே உள்ள புகைப்படம் நான் முன்பு எடுத்தது, வாழ்த்து சொல்ல தேடிக் கண்டுபிடித்தேன் :) ) .
ஊழல் தலைவர்கள்
உங்களிடம் ஒருவர், 'நீங்கள் ஊழல் செய்கிறீர்கள்' என்று சொன்னால், என்ன சொல்லுவீர்கள். 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்கள். இதற்கும் மேலாக நீங்கள் ஊழல் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை பட்டியலிடுவீர்கள். அதை விடுத்து, 'எனக்கு முன்னால் இருந்தவன் ஒருவன். அவன் செய்யாததையா நான் செய்து விட்டேன், அவன் என்ன செத்தா போனான்?' என்று கேட்பீர்களா?. எங்க கிராமத்துல அடிக்கடி சொல்லுவார்கள் 'ஏண்டா.. அவன் கெணத்துல உளுந்தானா.. நீயும்மா போய் உழுவே?'. ஆக எல்லாத் தலைவர்களும் தப்பித்து விட்டு கடைசியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை கிணத்துக்குள் தள்ளி விட்டுதான் போவார்கள்.
சுனாமி
இந்த வருடமும் சுனாமி தினம் வந்து போனது. மீண்டும் ஒருமுறை வந்தால் தடுக்க நம்மிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிதியை மட்டும் ஒதுக்கிவிட்டு என்ன செய்து கொண்டிருகிறார்கள் எனத் தெரியவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
விலைவாசி
இது வரை வெங்காயம் தான் விலை ஏறுகிறது என்றார்கள். இன்று தக்காளி கிலோ அறுபது ரூபாய். இப்படியே போனால் எல்லாக் காய்கறிகளும் நூறு ரூபாய்க்கு மேல்தான் கிடைக்கும் போல. விலை ஏறுவது போல, சம்பளமும் ஏறாதே. வாடகை, பள்ளி கட்டணம் எனக் கட்டி விட்டு மீதி இருக்கும் காசில் எங்கே போய் காய்கறிகள் வாங்க. சரி, வெங்காயம், காய்கறிகள் போடாத சமையல் செய்ய பழகிக் கொள்ள வேண்டியதுதான். காய்கறிகள் விலை ஏறினால், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பொருட்களும் விலை ஏறும். சரி, அப்படிதான் நாம் கொடுக்கும் காசு, விவசாயிகளின் கைகளுக்கு போனாலாவது பரவாயில்லை. அத்தனையும் இடைத் தரகர்கள் கைகளில்.
இந்த வருடப் பொங்கல் இனிக்காது போல இருக்கிறது.
விருது, பேட்டி
மூன்றாம் கோணம் தளத்தில் என்னைப் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் படிக்க பேட்டி. மூன்றாம் கோண நண்பர்களுக்கு என் நன்றிகள்.
இந்த வருடம் எனக்கு விருது கொடுத்த "ஆஹா பக்கங்கள்" திரு. எம் அப்துல் காதர் அவர்களுக்கு என் நன்றிகள்.
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கள்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் .. Elango.........
ReplyDeleteHappy new year!
ReplyDeleteNice photo!! :-)
வாழ்த்து படம் அருமை...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசெய்திகளில் உள்ள எதிர் மறைகள் எல்லாம் இவ்வாண்டோடு ஒழிந்து வரும் ஆண்டு நேர்மறையாக
நல் வாழ்த்துக்கள்...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteபுதுவருட வாழ்த்துக்களும்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் இளங்கோ! :)
ReplyDeleteஅப்பாடா..ஒரு வழியா லிங்க் குடுத்துட்டீங்களா இளங்கோ? நானும் 2 நாளா யோசிச்சுக்கிட்டே இருந்தேன்...புத்தாண்டு பெரிய நிறைவுகளைத்தர வாழ்த்துக்கள்..
ReplyDeleteபடம் அருமையாக உள்ளது..
ReplyDeleteதங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
@Gnana Prakash
ReplyDeleteநன்றி ஞானம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ஜீ...
ReplyDeleteநன்றிங்க நண்பரே
Wish you happy new year..
@பத்மநாபன்
ReplyDeleteநன்றிங்க அண்ணா.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
@பிரஷா
ReplyDeleteநன்றிங்க நண்பரே.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@Balaji saravana
ReplyDeleteநன்றி நண்பரே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ஷஹி
ReplyDeleteகொஞ்சம் வேலை இருந்தது அதனால் தாமதம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ம.தி.சுதா
ReplyDeleteநன்றி சகோதரரே.
புது வருட நல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)
ReplyDelete@RVS
ReplyDeleteநன்றிங்க அண்ணா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@ஜீ..
ReplyDeleteநன்றி நண்பரே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்..