விடுமுறை தினங்களில்
முகச்சவரமோ அல்லது முடி பின்னலோ தேவையில்லை
சூடான சமையலை
உள்ளே திணிக்கும் அவசரம் இல்லை
பறக்கும் சாலைகளில்
கசங்கிச் செல்ல வேண்டியதில்லை
சுடு டப்பா உணவு
மதியத்துக்கு தேவையில்லை...
எல்லாவற்றையும் விட
அலுவலகத்தில்
உள்ளே குமைந்து கொண்டு
வெளியே செயற்கையாக
புன்னகைக்க வேண்டியதில்லை...
படம்: இணையத்தில் இருந்து.. நன்றி...
வேற வழி இல்லையே.. சில விஷயங்கள சகிச்சுக்கிட்டுதான் போக வேண்டியிருக்குது..
ReplyDelete// எல்லாவற்றையும் விட
ReplyDeleteஅலுவலகத்தில்
உள்ளே குமைந்து கொண்டு
வெளியே செயற்கையாக
புன்னகைக்க வேண்டியதில்லை... //
எல்லாமே செயற்கையாக மாறிக் கொண்டு இருக்கும் காலத்தில்... புன்னகையும் செயற்கையாக மாறுவதில் வினோதம் ஒன்றுமில்லையோ? # டவுட்டுதான்
@Balaji saravana
ReplyDeleteஆமாங்க நண்பரே, சகித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு வேலை தேட வேண்டியதுதான்.. :)
நன்றிங்க
@இராகவன் நைஜிரியா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
சில இடங்களில் நம்மால் போலியாகத்தான் சிரிக்க முடிகிறது.
:-)
ReplyDelete//உள்ளே குமைந்து கொண்டு
ReplyDeleteவெளியே செயற்கையாக
புன்னகைக்க வேண்டியதில்லை...//
சூப்பர்!
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
(ச்சும்மா கேட்டேன்!) :-)
விடுமுறை எப்பவும் சொர்க்கத்தில் கழிக்கும் நாள் போலவே உணருவேன்!!!
ReplyDeleteகவிதை அருமை
@Chitra
ReplyDeleteநன்றிங்க.
@ஜீ...
ReplyDeleteநன்றிங்க ஜீ..
கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்க.. :)
@ஆமினா
ReplyDeleteநன்றிங்க..
லீவ் அப்படின்னாலே சொர்க்கம் தானுங்க..
நச்
ReplyDelete@அரசன்
ReplyDeleteநன்றிங்க..
ஒரு குடும்பமா ஆபிசில் வேலை பார்த்தால் வாய் விட்டு சிரித்து மகிழலாம். நோய் விட்டுப் போகும். நான் விடுமுறை தினத்தில் கூட சவரம் செய்கிறேன் elango. ;-)
ReplyDelete@RVS
ReplyDeleteஆமாங்க அண்ணா, நல்லாதான் இருக்குது.
ஆனா நம்ம லெவல்ல இருக்குற பணியாளர்கள் அலுவலகத்தில் நல்லாப் பழகுவாங்க.
ஆனா, கொஞ்சம் பெரிய போஸ்ட்ல இருக்குறவங்க எப்பவும் ஜென்ம விரோதி தானே பழகுறாங்க.. :)
//நான் விடுமுறை தினத்தில் கூட சவரம் செய்கிறேன்//
ஒருவேளை, அன்னைக்கும் ஆபீஸ் இருக்குன்னு சொல்லிட்டு வெளியே போவீங்களா இருக்கும் RVS அண்ணா !! :)
அப்டி போடு அருவாளை... ;-)
ReplyDelete