விழுதுகள் மையத்தில்...
இந்த வாரம் ஒரு மாலை வேளையில், எங்கள் விழுதுகள் அமைப்பினால் நடக்கும் ஒரு மையத்துக்குச் சென்றிருந்தேன். வாரமொரு முறை நடக்கும் பிரார்த்தனையில், தெரிந்தவர்கள் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுக்காக வேண்டுவது வழக்கம். இந்த வாரம், ஒவ்வொரு மாணாவராகத் தங்கள் பாட்டி, தாத்தா, அம்மா என உடல் நிலை சரியில்லாதவர்கள் பெயர்களைச் சொன்னார்கள்.
அதில் ஒரு மாணவன், "சார்.. என்னோட அக்காவுக்கு கையில காயம் சார்.." என்றான்.
"ஏன்.. என்னாச்சு".. என்றோம்.
"கையில் அரிவாள் பட்டிருசுங்க சார்.." என்றான்.
"அருவாளா? கையில எப்படி பட்டுச்சு"
கொஞ்சம் தயங்கி "சார்.. வீட்ல அம்மாவுக்கும். அப்பாவுக்கும் சண்டை சார். அப்பா, அருவாளா எடுத்துட்டு அம்மாவா அடிக்க வர, அக்கா நடுவுல பூந்து கையில காயம் ஆயிருச்சு சார்.." என்று எங்கள் கண்களையே பார்த்தான்.
வேறு ஒன்றும் பேச இயலாதவராய், "சரிப்பா.. உங்க அக்கா பேரச் சொல்லு" என்றோம்.
பெரிய குடும்பமோ (உதாரணதுக்கு நடிகர் விஜயகுமார் பேரன்), அல்லது இந்த மாதிரி ஒரு கிராமத்துக் குடும்பமோ பெற்றோர்களின் சண்டையில் மாட்டிக் கொண்டு துன்புறுவது குழந்தைகளே. பெற்றோர்கள் சண்டையால் வளரும் குழந்தைகள், என்ன விதமான மனத் துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னும் ஒரு மாணவன், "பாப்பா" பாட்டில் பாரதி சொன்னது போல, உயிர்கள் அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னது போல சொன்னான்.
"சார்.. எங்க வீட்டு நாய் செத்துப் போச்சு சார்.. பேரு ஜிம்மி.. எழுதிக்குங்க சார்" என்றான்.
தமிழக மீனவர்கள்
ஏதோ தமிழக மீனவர்கள் பற்றி இப்பொழுதுதான் கரிசனம் வந்தது போல எல்லாத் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஒன்றும் காரணமில்லை, வரும் தேர்தல் தான் மூல காரணம். கூட்டணி பிரித்துக் கொண்டு திரும்பவும் ஓட்டுக் கேட்டு வர வேண்டுமல்லவா, அது வரைக்கும் தாக்குதலை நிறுத்தி வைக்க சொல்லி இருந்தாலும் இருப்பார்கள். தன்னைக் கட்டு மரம் என்று கூறிக் கொள்ளும் தலைவர் டெல்லியில் கூட்டணி பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். கொஞ்சம் கண் வைத்தால், கட்டு மரமே வாழ்க்கையாக கொண்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட மாட்டார்கள்.
விலைவாசி
கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சிறிதளவாவது தப்பித்துக் கொள்ளலாம். ஒரு துணிக்கடை அல்லது பலசரக்குக் கடை ஊழியரோ வாங்கும் சம்பளம் ஐந்தாயிரத்துக்கும் குறைவே. இதில் வீட்டு வாடகை, காய்கறிகள், மருத்துவச் செலவு என செலவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?.
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.. என்றுதான் பாடத் தோன்றுகிறது.
சில குறுஞ்செய்திகள்:
ஒரு காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் நேரம் இருந்தது. இப்போது, எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது, நேரம் தான் இல்லை.
**********
ஓர் ஏழை ஒரு மீனைப் பிடித்தான். ஆனால் அவனின் மனைவியால் அதைச் சமைக்க முடியவில்லை. ஏனெனில், விலை வாசியால் மின்சாரம், சமையல் வாயு, எண்ணெய் வீட்டில் இல்லை. எனவே, மீனை மீண்டும் ஏழை மீண்டும் நீரில் விட, திடீரென மீன் கத்தியது. "உயிர் காக்கும் திட்டங்கள் தந்த முதல்வருக்கு நன்றி." :)
**********
நம்பிக்கையின் உச்சம்:
ஒரு ஏரோனாடிக் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களையும் ஒரு விமானத்தில் உட்கார வைத்தார்கள். விமானம் கிளம்பப் போகும் சமயம், "இந்த விமானம் நமது கல்லூரி மாணவர்கள் தயாரித்தது" எனச் சொல்ல அனைவரும் தலை தெறிக்க வெளியே ஓடினார்கள். ஒருவர் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருக்க, அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "எங்கள் மாணவர்கள் தயாரித்தது என்றால், இது ஓடாது" என்றாரே பார்க்கலாம். :)

விழுதுகள் அமைப்பிற்கு வாழ்த்துகள்... பிரார்த்தனையின் பலமே தனி..
ReplyDeleteமீனவர்களின் உயிர்காப்பை அரசியலில் அமுக்கிவிடாமல் தீர்வை எட்ட வேண்டும்....
விலைவாசி ராக்கெட் போல போய்க்கொண்டிருக்கிறது...தேவையில்லாத இலவசங்களை தவிர்த்து...தேவையான பொருள் விலைக்குறைப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
மீனவனுக்கு பாதுகாப்பில்லை..மீனுக்கு அரசின் உயிர்காப்பு திட்டம்....
கடைசியில் தன மாணவர்கள் மேல் அந்தப் பேராசிரியர் வைத்த நம்பிக்கை அபாரம்!!! குட் இளங்கோ... ;-)
ReplyDeleteஅருமையான தகவல்...விழுதுகள் ஆழமானவை. குறும் செய்திகள் அசத்தல்.வாழ்த்துக்கள்
ReplyDeleteநம்பிக்கையின் உச்சம்:
ReplyDeleteஒரு ஏரோனாடிக் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களையும் ஒரு விமானத்தில் உட்கார வைத்தார்கள். விமானம் கிளம்பப் போகும் சமயம், "இந்த விமானம் நமது கல்லூரி மாணவர்கள் தயாரித்தது" எனச் சொல்ல அனைவரும் தலை தெறிக்க வெளியே ஓடினார்கள். ஒருவர் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருக்க, அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "எங்கள் மாணவர்கள் தயாரித்தது என்றால், இது ஓடாது" என்றாரே பார்க்கலாம். :)
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... செம!
I join the prayer.
ReplyDelete//நம்பிக்கையின் உச்சம் //
ReplyDeleteசிரிப்பின் உச்சம்! :)
//உயிர் காக்கும் திட்டங்கள் தந்த முதல்வருக்கு நன்றி //
மக்கள் உயிர் அவரோட ----க்கு சமானம்ன்னு நினைச்சுக்கிட்டிருக்கார்
arumai Elango...keep going
ReplyDelete@பத்மநாபன்
ReplyDelete//மீனவர்களின் உயிர்காப்பை அரசியலில் அமுக்கிவிடாமல் தீர்வை எட்ட வேண்டும்....//
ஆம் அண்ணா.
நன்றிகள்
@RVS
ReplyDeleteஅவர் குரு, ஆகவே மாணவர்களைப் பற்றி தெரியும் :)
ரசித்ததற்கு நன்றி அண்ணா.
@மதுரை சரவணன்
ReplyDeleteநன்றிகள் நண்பரே.
@Chitra
ReplyDeleteநன்றிங்க சித்ரா அக்கா.
@Rathnavel
ReplyDeleteபிரார்த்தனை செய்யும் தங்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே.
@Balaji saravana
ReplyDeleteநன்றிங்க பாலாஜி.
@ஷஹி
ReplyDeleteநன்றிங்க ஷஹி.
குறுஞ்செய்தி Awesome.........
ReplyDeleteவிழுதுகள் மூலம் நீங்கள் செய்யும் நற் செயல்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டும்
ReplyDelete@Gnana Prakash
ReplyDeleteThanks Gnanam..
@மோகன் குமார்
ReplyDeleteநன்றிங்க.
அரசுப் பள்ளிகளுக்கு உதவிடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்.