Posts

பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான். -- ஜகதா கல்யாணமாகிய புது மணப்பெண். கணவன் வீட்டில் இருக்கிறாள். கல்யாணம் முடிந்ததும், கணவன் உடனே வெளியூரில் வேலைக்குச் சேர்கிறான். வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும், தன் புதுக்கணவனுக்குச் சொல்ல கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே பாற்கடல்.  நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழும் குடும்பம். கூட்டு வாழ்வுக்கே உரித்தான மன வருத்தங்கள், சிறு சிறு சலசலப்புகள் இந்தக் குடும்பத்திலும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஜகதாவின் மாமியார் தாங்கிப்பிடிக்கிறார். எல்லாக் குடும்பத்திலும் அப்படி ஒருவர் உண்டுதானே.  எதையாவது தெரிந்துகொண்டால் அதை எங்காவது எழுதிவைத்து விடும் பழக்கம் கொண்டவள் ஜகதா. "படித்த பெண் வேறு. அதனால் புருசனுக்கு கடிதம் எழுதுகிறாள்" என்று அவளைச் சொல்லுகிறார்கள். தன் அம்மா வந்ததை, தீபாவளிக்கு அழைத்ததை, புது அம்மாவான மாமியார் பேசுவதை, குடும்ப அங்கத்தினர்களை,  அவளின் ஏக்கத்தை, கண்ணீரை, ஒருநாள் மா...

நிழலின் தனிமை - தேவிபாரதி

Image
மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது. - சுகுமாரன்  -- ஏதோ ஒரு நேரத்தில் சில வஞ்சினங்களை உரைத்திருப்போம் நாம். அது பணப்பிரச்சினை, காதல் தோல்வி எனப் பல காரணங்களால் வந்திருக்கலாம். காலங்கள் போகப்போக அவற்றை நாம் மறந்திருப்போம். சில மனிதர்கள் எப்பொழுதும் அதை மறப்பதில்லை. இறக்கும் வரையிலும் அந்த வஞ்சினத்தை நிறைவேற்ற முடியாமல் உள்ளம் தகிக்கும் கையாலாகாத மனிதர்கள் அதிகம். நினைத்துப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் விடையாய் இருப்பது மரணம் மட்டுமே.  மின்மயானத்தில் ஒலிக்கப்படும் பாடலில் இந்த வரிகள் உள்ளது. மரணத்தினால் சில கோபங்கள் தீரும். மரணத்தினால் சில சாபங்கள் தீரும்.  -- நாவலின் கதாநாயகன் அரசுப்பள்ளியில் பணியாளர். ஒரு ஊருக்கு மாற்றலாகப் போகும்போது கருணாகரன் எனும் மனிதரைச் சந்திக்க நேர்கிறது. பல வருடங்களாக கருணாகரனைப் பழி தீர்க்க காத்திருக்கிறான்.  கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வரும் கருணாகரன், பணப்பிரச்சினையில் நாயகனின் தமக்கை சாரதாவை பள்ளி...

வண்ணதாசன்

Image
அப்பா ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த, இரண்டு வாழைக் கிழங்குகளை வீட்டின் கொல்லையில் நட்டு வளர்த்துவருகிறோம். ஒன்று செவ்வாழை, இன்னொன்று தேன்வாழை. இரண்டிலுமே அவ்வப்போது பழைய பட்டைகளை உரிக்கும்போது, உள்ளே இருக்கும் புது பட்டையின் பசுமை கலந்த அந்த மினுமினுப்பு, கை விரல்களை வைத்து நீவினால் மெலிதாக வரும் ஒலி என எப்போதும் அஃதோர் ஆச்சரியம். அதிலும் நெடுநெடுவென வளர்ந்திருக்கும். செவ்வாழையின் செம்மை நிறமும், வனப்பும் கண்களை விட்டு அகலாதவை. வண்ணதாசன் ஒரு கதையில் வாழை மரத்தின் மினுமினுப்பை எழுதியிருப்பார். நாம் பார்த்த அதே அரச, ஆல் இலைகள்தான். அதே வாழை மரம்தான். அதே மரத்தின் நிழல்தான். அதே பவள மல்லி, பன்னீர் பூக்கள்தான். அதே மனிதர்கள்தான். அதே உலகுதான். ஆனால், அவரின் வார்த்தைகளில் வெளிப்படும்பொழுது, நாம் பார்க்க மறந்ததை, நாம் உணர மறுத்ததை.. அதுவல்ல இது என்று சொல்கிறார். 'சின்னத்தேர் என்ன, பெரிய தேர் என்ன.. எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தானே ரதவீதி இருக்கிறது' - ரதவீதி எனும் கதையில் அவர் சொல்லும்பொழுது, சிறிதென்ன, பெரிதென்ன.. எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்த உலகம் இருக்கிற...

அஞ்சலை - கண்மணி குணசேகரன்

Image
'இப்படியும் ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து துயரம் நேருமா?' என்று அஞ்சலை நாவலைப் படிக்கும்போது நமக்குத் தோன்றலாம். ஆனால், ஒரு கிராமத்தில், பொருளாதாரப் பின்புலம் இல்லாத குடும்பங்களில் நடக்க கூடியதுதான் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது அஞ்சலை போன்ற பெண்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அஞ்சலையைப் போன்றவர்கள் விழுந்து எழுந்து கண்ணீர்விட்டு ஈரமேறிய மண்ணைக் கொண்டது நம் கிராமங்கள்.  கார்குடல் கிராமத்தில், இரண்டு அக்காக்கள் மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவள் அஞ்சலை. மூத்தவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அடுத்தது அஞ்சலை தான். காடு தோட்டத்துக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் அஞ்சலைக்கு, கல்யாணம் முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறாள் அம்மா பாக்கியம். மூத்த அக்காள் கல்யாணி தன் கொழுந்தனாருக்கு அஞ்சலையைக் கேட்கிறாள். அம்மா மறுத்துவிடுகிறாள்.  இரண்டாவது அக்காவின் கணவன் மணக்கொல்லை என்னும் ஊரிலிருந்து ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவருகிறான். அஞ்சலையை இரண்டாம் தாரமாக கேட்டும் கொடுக்காத காரணத்தால் கோபத்திலிருக்கும் அக்கா கணவன், மாப்பிள்ளையை மாற்றிக் காட்டிவிடுக...

வீட்டுத் தோட்டத்தில் மிளகு

Image
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன்' என்றார். அவரின் சொந்த ஊர் வால்பாறை. சொன்னவாறே நான்கு மிளகு குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தார். அந்த நான்கில் மூன்று குச்சிகள் பட்டுப் போக, ஒன்று மட்டும் எப்படியோ தழைந்து, பக்கத்தில் இருந்த பலாவைப் பற்றிக்கொண்டது. நீண்ட நாட்கள் கழித்து, இப்பொழுது பூத்திருக்கிறது. இதில் மிளகு காய்க்குமா, இல்லையா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.

நான்கு இட்டலிகள்

உலகத்துக் கவலைகளில் மூழ்கியிருந்தேன் நான். நான்கு இட்டலிகளை வட்டிலில் வைத்து 'தின்று இளைப்பாற்றுங்கள் நன்கு செரிக்கும்' என்கிறாள் அரசி. செரிப்பது மனமா, வயிறா எனக் குழம்புகிற அரசனாய் நான்.

அன்பே கடவுள்

Image
தல்ஸ்தோயின் சிறுகதை. கடவுள் ஒரு தேவதை செய்த தவறால், அத்தேவதைக்குச் சாபம் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார். கூடவே, பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து மூன்று கேள்விகளுக்கு விடைகள் கண்டறிந்தால், மீண்டும் தன்னிடம் வந்து சேரலாம் என்கிறார் கடவுள். அந்த மூன்று கேள்விகள்; 1. மனிதனிடம் குடிகொண்டிருப்பது எது? 2. மனிதனுக்குக் கொடுக்கப்படாதது எது? 3. மனிதன் எதனால் வாழ்கின்றான்? தேவதை கண்டுபிடித்த பதில்கள்; 1. அன்பு 2. வரப்போவதை அறியக்கூடிய அறிவு 3. தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மனிதன் வாழவில்லை; பிறரிடம் அன்பு செலுத்துவதன் மூலமே அவன் வாழ்கிறான். அன்பே கடவுள். (Leo Tolstoy)