காற்றே இல்லை எனச்
சொல்லும் இதே மனிதன் தான்
வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு
வீட்டைச் சுற்றிலும்
குரோட்டன்ஸ் வைத்தவன்..
ஆற்றில் நீர் இல்லாததை
'பச்.. தண்ணியே இல்லை'
எனக்கடந்து போகும்
இதே மனிதர்கள்தான்
மக்கவியலாத பொருளையும்,
கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்..
நீர் இல்லாதபோது,
நிறைய மணல் அள்ளலாம் எனச்
சிலர் சந்தோசப் படுகிறார்கள்..
ஆற்று நீரை
அப்படியே குடிக்காதீர்கள்
அதில் கழிவுகள் இருக்கிறது
என்று சொல்கிறார்கள்..
உழைத்து மூப்பேறிய
மூத்த தலைமுறை விவசாயியின்
ஒடுங்கிய வயிறு
போலான பள்ளங்களோடு
ஆறு அத்தனையையும்
கவனித்துக் கொண்டிருக்கிறது..
சொல்லும் இதே மனிதன் தான்
வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு
வீட்டைச் சுற்றிலும்
குரோட்டன்ஸ் வைத்தவன்..
ஆற்றில் நீர் இல்லாததை
'பச்.. தண்ணியே இல்லை'
எனக்கடந்து போகும்
இதே மனிதர்கள்தான்
மக்கவியலாத பொருளையும்,
கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்..
நீர் இல்லாதபோது,
நிறைய மணல் அள்ளலாம் எனச்
சிலர் சந்தோசப் படுகிறார்கள்..
ஆற்று நீரை
அப்படியே குடிக்காதீர்கள்
அதில் கழிவுகள் இருக்கிறது
என்று சொல்கிறார்கள்..
உழைத்து மூப்பேறிய
மூத்த தலைமுறை விவசாயியின்
ஒடுங்கிய வயிறு
போலான பள்ளங்களோடு
ஆறு அத்தனையையும்
கவனித்துக் கொண்டிருக்கிறது..
அருமை...!
ReplyDelete//ஆறு அத்தனையையும்
கவனித்துக் கொண்டிருக்கிறது..//
ஆற்றைத்தான் யாரும் கவனிக்கவில்லை ...!
சோறுபோட்ட ஆறு இன்று நாறிப்போய் கிடக்கின்றது தாறுமாறாக ...!
கவனிக்கட்டும். நம்மை பழி தீர்க்கும் நாள் வந்துவிட்டது
ReplyDeleteஎல்லாவற்றிக்கும் ஒரு நாள் எதிர்வினை உண்டு...!
ReplyDelete