குழந்தைகள், இப்பொழுது குழந்தைகள் இல்லை
பள்ளியில் இடம் வேண்டி
ஆறு மாத குழந்தைக்கு
விடிய விடிய வரிசையில் நிற்கிறோம் ஆறு மாத குழந்தைக்கு
ஆறு மணிக்கு எழுந்து
படிப்பது பாலர் வகுப்பு என்றாலும்
அரை மணி நேரம் பயணம் செய்து
அவ்வபொழுது இயற்கை உபாதைகளை அடக்கி
நேரத்துக்கு செல்
வாரத்தில் ஒருநாள் மட்டும் மாலை ஓய்ந்து வா
டியூசன் போ.. அங்கும் படி
சனி, ஞாயிறும் டியூசன் இருக்கும்.
கொஞ்சம் நேரம் கிடைத்தால்
டி.வி பார்
கராத்தே, இசை, நடன வகுப்புகளில் சேர்..
பெரியவர்கள் போலவே
உங்களுக்கும் நேரமில்லை
குழந்தைகளே..
எல்.கே.ஜி பிள்ளைகளையும் ட்யூஷன் என்ற பெயரில் கொடுமைப் படுத்தும் பெற்றோர்களை சிறையில் அடைக்க ஒரு சட்டம் வேணும்.
ReplyDeleteஉண்மை... உண்மை...
ReplyDeleteஆம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடாது
ReplyDeleteநாமும் குழம்பி அவர்களையும் குழப்பிக் கொண்டுள்ளோம்
மனம் கவர்ந்த பதிவு, வாழ்த்துக்கள்
நண்பர்களுக்கு எனதன்பு நன்றிகள்...
ReplyDeleteரெடியாகிட்டோம்....பதிவர் சந்திப்பு சென்னைக்கு
ReplyDeletehttp://www.kovaineram.com/2013/07/blog-post_31.html