காட்டுச் செடி
காக்கை திருடி வைத்திருக்கும் வடையோ
அதைப் பறிக்க நினைத்த நரியோ
அல்ல
மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக் கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்
*************************
நீர்ப்பயம்
நாய் கடிக்காது பார்த்துக்கொள்
அதிலும் வெறிநாய் கடித்தால்
பேராபத்து
அந்த வெறிநாய் போலே
ஊளையிட்டுத் திரிவாய்
தண்ணீர் அருந்த இயலாது
தொண்டை நரம்புகள் தெறிக்கும்
அப்புறம் தண்ணீரைக் கண்டாலே
அலறித் துடிப்பாய்
மரணத்தில்தான் உனக்கு விடுதலை
ஆகவே
நாய்க்கு வரும் நோய்பற்றிக்
கவலை கொள்
நாய் பற்றிக் கவலை கொள்
*************************
புல்வெளியில் ஒரு கல்
புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித்
தத்திய காட்சி, அழிந்து
புல்வெளிமீது ஒரு கல் இப்போது.
மனிதச் சிறுவன் ஒருவனால்
அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட
கல்லாயிருக்கலாம் அது.
இப்போது புல்வெளி இதயம்
வெகுவாய்த் துடிக்கிறது
கூடுதல் மென்மையால்
கூடுதல் அழகால்.
*************************
கவிஞர் தேவதேவன் அவர்களின் 'புல் வெளியில் ஒரு கல்' கவிதைத் தொகுப்பிலிருந்து.
எல்லாமே மனதைத் தொடும் வார்த்தைகள் கதம்பம்
ReplyDeleteரசித்தேன்... கவனித்தேன்... மகிழ்ந்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
//PARITHI MUTHURASAN said...
ReplyDeleteஎல்லாமே மனதைத் தொடும் வார்த்தைகள் கதம்பம்
//
நன்றிங்க..
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteரசித்தேன்... கவனித்தேன்... மகிழ்ந்தேன்...
வாழ்த்துக்கள்...
//
நன்றிங்க..