சாதிகள் பெண் கொடுமைகள் படித்தவர்கள் செய்யும் சூது வேடிக்கை மனிதர்கள் என்று நிறைந்து கிடக்கும் எமது காணி நிலங்களில் உனது அக்கினிக் குஞ்சுகளை தேடிக் கொண்டிருக்கிறோம் பாரதி ஒருநாள் அகப்பட்டு அவைகளை வெந்து தணிப்போம் என்ற தாகத்தோடு.
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள். ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :) என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல...
பாரதியின் கவிகளில் வரும் உச்ச வார்த்தைகளை கொண்டு கவியமைத்தது அழகு- பாரதியின் இனிய பிறந்த நாள் நினவு...
ReplyDelete//ஒருநாள் அகப்பட்டு
ReplyDeleteஅவைகளை வெந்து தணிப்போம்
என்ற தாகத்தோடு.//
அருமை.
பாரதிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteசமூக பிரச்சனையை தீர்க்க ஆவலை ஏற்படுத்தும் வரிகள்
ReplyDeleteசரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. நல்ல வரிகள்.
ReplyDeleteஅப்புறம் இளங்கோ.. உங்கள் அனுமதியின்றி விழுதுகளில் எடுக்கப் பட்ட புகைப்படங்களை என்னுடைய பதிவில் பிரசுரிக்க இருக்கிறேன்(இனிமேல் தான்). மன்னிக்கவும்.
பாரதிக்கு கவிமாலை நன்றாக இருந்து.
ReplyDeleteபாரதியின் வார்த்தைகளை பொருக்கி எடுத்து போட்டு அவனுக்கே ஒரு கவிதை... ஆஹா.. அற்புதம்.. ;-)
(நல்ல லாஜிக்)
//பத்மநாபன் said...
ReplyDeleteபாரதியின் கவிகளில் வரும் உச்ச வார்த்தைகளை கொண்டு கவியமைத்தது அழகு- பாரதியின் இனிய பிறந்த நாள் நினவு...
//
நன்றிங்க அண்ணா.
//அன்பரசன் said...
ReplyDelete//ஒருநாள் அகப்பட்டு
அவைகளை வெந்து தணிப்போம்
என்ற தாகத்தோடு.//
அருமை.
//
நன்றிங்க நண்பரே.
//nis said...
ReplyDeleteபாரதிக்கு வாழ்த்துகள்
//
நன்றிங்க நண்பரே.
//ஆமினா said...
ReplyDeleteசமூக பிரச்சனையை தீர்க்க ஆவலை ஏற்படுத்தும் வரிகள்
//
பாரதியின் ஒவ்வொரு எழுத்தும் நமக்குள் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும்.
நன்றிங்க.
//சாமக்கோடங்கி said...
ReplyDeleteசரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. நல்ல வரிகள்.
அப்புறம் இளங்கோ.. உங்கள் அனுமதியின்றி விழுதுகளில் எடுக்கப் பட்ட புகைப்படங்களை என்னுடைய பதிவில் பிரசுரிக்க இருக்கிறேன்(இனிமேல் தான்). மன்னிக்கவும்.
//
நன்றிங்க பிரகாஷ்.
அப்புறம் புகைப்படங்களை இடுவதற்கு அனுமதி எல்லாம் கேட்க வேண்டாங்க. தாராளமாக பயன் படுத்துங்கள்.
//RVS said...
ReplyDeleteபாரதிக்கு கவிமாலை நன்றாக இருந்து.
பாரதியின் வார்த்தைகளை பொருக்கி எடுத்து போட்டு அவனுக்கே ஒரு கவிதை... ஆஹா.. அற்புதம்.. ;-)
(நல்ல லாஜிக்)
//
பாரதிக்கு நம்மால் கவி மாலை போட முடியுமா அண்ணா, என்னால் முடிந்தது வார்த்தைகளைத் தொகுத்து இருக்கிறேன்.
நன்றிங்க அண்ணா.
நீங்கள் பாரதியின் பாடல்களைத் தொகுத்து வழங்கியது நன்றாக இருந்தது.
great poem Elango..congrats
ReplyDelete//ஷஹி said...
ReplyDeletegreat poem Elango..congrats
//
நன்றிங்க ஷஹி
////உனது அக்கினிக் குஞ்சுகளை
ReplyDeleteதேடிக் கொண்டிருக்கிறோம் ////
மிக மிக ஒரு அருமையான உவமிப்புடன் கூடிய கவிதை..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
பாரதிக்கு எம் வீர வணக்கங்கள்..
ReplyDelete