ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும்
கொஞ்சம் பொட்டுக் கடலையும்
கொண்டு வந்து
தின்னத் தந்துவிட்டு
'என்கிட்டே வேறென்ன இருக்கு'
என்று தள்ளாமையில்
புலம்பிக் கொண்டிருக்கும்
பாட்டிக் கிழவியிடம்,
இது
அமிழ்தினும் அமிழ்து
என்பதைச் சொல்ல
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
குறிப்பு:
இப்பதிவில் இருக்கும் படம்,
பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி.
**************
உண்மையான உணர்வுகள்!
ReplyDeleteஅது அமிழ்தினும் இனிதுதான்!
கொஞ்சமும் தெவிட்டாத தெள்ளமுது !!!! ;-) ;-)
ReplyDeleteவரிகள் மிக அருமை..
ReplyDeleteTouching!
ReplyDeleteஏழைகள் வீட்டில் தினமும் நடப்பவை ;(((
ReplyDelete@எஸ்.கே
ReplyDeleteநன்றிங்க எஸ்.கே
@RVS
//கொஞ்சமும் தெவிட்டாத தெள்ளமுது !!!! ;-) ;-) //
ஆமாங்க அண்ணா :) நன்றி.
@பதிவுலகில் பாபு
நன்றிங்க பாபு.
@Chitra
நன்றிங்க சித்ரா அக்கா.
@nis
//ஏழைகள் வீட்டில் தினமும் நடப்பவை ;(((//
ஏழையாக இருந்தாலும் இருப்பதை பகிர்ந்து உண்ண வயதோ, மனமோ தடையில்லை.
நன்றி நண்பரே.
அன்பினும் அமிழ்துண்டோ?
ReplyDeleteஅருமை இளங்கோ :)
//Balaji saravana said...
ReplyDeleteஅன்பினும் அமிழ்துண்டோ?
அருமை இளங்கோ :)
//
நன்றி நண்பரே.
அருமையான வரிகள்
ReplyDelete//THOPPITHOPPI said...
ReplyDeleteஅருமையான வரிகள்
//
நன்றி நண்பரே.
அருமையான கவிதைக்க அருமையான படம் வாழத்துக்கள் சகோதரம்...
ReplyDelete//ம.தி.சுதா said...
ReplyDeleteஅருமையான கவிதைக்க அருமையான படம் வாழத்துக்கள் சகோதரம்...
//
நன்றி சகோதரம்.
எனது பாட்டியை நினைவு படுத்தி விட்டீர்கள்..
ReplyDelete//சாமக்கோடங்கி said...
ReplyDeleteஎனது பாட்டியை நினைவு படுத்தி விட்டீர்கள்..
//
எல்லாப் பாட்டிகளும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
நன்றி பிரகாஷ்.
வார்த்தைகள் எதுக்கு இளங்கோ? பாட்டி கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுத்தா போச்சு!
ReplyDelete//ஷஹி said...
ReplyDeleteவார்த்தைகள் எதுக்கு இளங்கோ? பாட்டி கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுத்தா போச்சு!
//
ஆமாங்க, நல்ல யோசனை. :)
நன்றிங்க.