Friday, November 26, 2010

பெருமூச்சு















மேள சத்தங்கள்
ஜொலிக்கும் மேடைகள்
ஆயத்த சிரிப்புகள்
உருட்டப்படும் பாத்திரங்கள்
மணக்கும் உணவுகள்
பரபரக்கும் மனிதர்கள்
விளையாடும் குழந்தைகள்
என நிறைந்து கிடக்கும்
திருமண மண்டபத்தின் வாசலை,
வீதியில் கடக்கும்
யாரேனும் ஒருவரின்
பெருமூச்சு
நிரப்பி விட்டுச் செல்கிறது.

படம் : இணையத்திலிருந்து : நன்றி.

************************

18 comments:

  1. அடி தூள் இளங்கோ. ;-)

    ReplyDelete
  2. ஃஃஃஃஃவீதியில் கடக்கும்
    யாரேனும் ஒருவரின்
    பெருமூச்சுஃஃஃஃஃ

    கதை அப்படிப் போகுதோ (இல்லை கவிதை..)


    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    http://mathisutha.blogspot.com/

    ReplyDelete
  3. வீதியில் கடக்கும்
    யாரேனும் ஒருவரின்
    பெருமூச்சு
    நிரப்பி விட்டுச் செல்கிறது.


    .....Subtle ஆக நல்லா சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  4. அந்தப் பெருமூச்சு:
    மணமாகா கன்னியரின்
    தந்தையுடையதோ?
    மணப்பெண்ணின் முன்னாள்
    காதலனதோ?
    வெகு நாளாய் அடுப்பெரியா
    குடும்பஸ்தனதோ?
    விருந்துக்கு அழைக்கப்படாத
    உறவினனதோ?

    ReplyDelete
  5. கடைசி வரியில் கட்டிவைத்திருக்கும் உண்மை அறைகிறது..
    நல்லா இருக்கு இளங்கோ

    ReplyDelete
  6. @RVS
    நன்றி ஆர்விஎஸ் அண்ணா. :)

    ReplyDelete
  7. @ம.தி.சுதா
    //கதை அப்படிப் போகுதோ (இல்லை கவிதை..)//
    :)
    நன்றிங்க ம.தி.சுதா.

    ReplyDelete
  8. //Chitra said...

    .....Subtle ஆக நல்லா சொல்லிட்டீங்க.
    //

    நன்றி சித்ரா அக்கா.

    ReplyDelete
  9. //ஷஹி said...

    அந்தப் பெருமூச்சு:
    மணமாகா கன்னியரின்
    தந்தையுடையதோ?
    மணப்பெண்ணின் முன்னாள்
    காதலனதோ?
    வெகு நாளாய் அடுப்பெரியா
    குடும்பஸ்தனதோ?
    விருந்துக்கு அழைக்கப்படாத
    உறவினனதோ?
    //

    இவர்களில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். :)
    நன்றிங்க ஷஹி.

    ReplyDelete
  10. //Balaji saravana said...

    கடைசி வரியில் கட்டிவைத்திருக்கும் உண்மை அறைகிறது..
    //

    நன்றிங்க பாலாஜி.

    ReplyDelete
  11. @எஸ்.கே
    நன்றிங்க எஸ்.கே

    @nis
    நன்றிங்க nis.

    @முரளி
    நன்றிங்க முரளி.

    ReplyDelete
  12. ஒரு சிங்கம் பசியாரும்போது
    அங்கே ஒரு மான்குட்டி அனாதையாகிறது..

    ஒரு முத்து வேலையில் எடுக்கப் படும்போது,
    அங்கே ஒரு சிற்பி இறக்கிறது,

    இப்போது புரிகிறதா இயற்கையின் நியதி..??

    நமது ஒவ்வொரு சிரிப்பின் இதே நேரத்தில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு ஒப்பாரி கேட்டுக் கொண்டு தான் இருக்கும்.

    நியூட்டன் விதிப்படி..
    ஒவ்வொரு சிறப்புக்கும் அதற்கு இணையான ஆனால் எதிரான ஒரு ஒப்பாரி இருக்கும்..

    அந்தப் பெருமூச்சு அந்த இளம் தம்பதிகளைப் பாதிக்காமல் இருந்தால் சரி..

    ReplyDelete
  13. நல்லா இருக்கு.

    ஆமா எத்தனை பெருமூச்சுகளோ....

    ReplyDelete
  14. @சாமக்கோடங்கி

    பிரகாஷ், நான் எழுதியதை விட சிறப்பாக எழுதி உள்ளீர்கள் பின்னூட்டத்தில்.

    அந்தப் பெருமூச்சு ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடே, மற்றவர்களை அது ஒன்றும் செய்து என்றே தான் நினைக்கிறேன்.

    நன்றி நண்பா.

    ReplyDelete
  15. @மாதேவி
    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete