Wednesday, November 17, 2010

சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ


இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அந்தச் செய்தியின் சுட்டி:
சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை.

நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.


16 comments:

  1. ரொம்பக் கொடுமைங்க..

    ReplyDelete
  2. சத்து உணவை சாப்பிடுவதற்குள், ஏற்கனவே உள்ள சத்து இல்லாமல் போய்விடும் ;((

    ReplyDelete
  3. வளர்ந்துவரும் மாணவப் பருவங்களை இப்படி "சத்துணவுக்காக" நடத்தும் செயல் மிகவும் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் வேதனையாகவும் உள்ளது,

    தமிழகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. சத்துணவு சாப்டரத்துக்கு செத்து சுண்ணாம்பா போகனும் போலருக்கு.. பாவம் குழந்தைகள்... கொடிது கொடிது இளமையில் வறுமை.. :-( ;-(

    ReplyDelete
  5. வெளிச்சம் போட்டதிட்க்கு நன்றி

    ReplyDelete
  6. இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்க தேர்தல் வரும்

    ReplyDelete
  7. //பதிவுலகில் பாபு said...

    ரொம்பக் கொடுமைங்க..
    //

    ஆமாங்க பாபு.

    ReplyDelete
  8. //nis said...

    சத்து உணவை சாப்பிடுவதற்குள், ஏற்கனவே உள்ள சத்து இல்லாமல் போய்விடும் ;((

    //

    ஆமாங்க, நடந்து போயிட்டு திரும்பி வர்றதுக்கே சத்துணவு சரியாப் போயிரும். அப்புறம் சத்து எங்க இருக்கும்?.

    ReplyDelete
  9. //மாணவன் said...

    வளர்ந்துவரும் மாணவப் பருவங்களை இப்படி "சத்துணவுக்காக" நடத்தும் செயல் மிகவும் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் வேதனையாகவும் உள்ளது,

    தமிழகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
    //

    ஏழைக் குழந்தைகள் என்றால் ஒரு கிலோ மீட்டர் என்ன, இன்னும் நிறைய நடக்கச் சொல்வார்கள்.

    நன்றிங்க மாணவன்.

    ReplyDelete
  10. //RVS said...

    சத்துணவு சாப்டரத்துக்கு செத்து சுண்ணாம்பா போகனும் போலருக்கு.. பாவம் குழந்தைகள்... கொடிது கொடிது இளமையில் வறுமை.. :-( ;-(
    //

    ஆமாம் அண்ணா.
    நம் தலைவர்கள் எப்பொழுது நிதி ஒதுக்குவார்கள் எனத் தெரியவில்லை. பார்க்கலாம்.

    ReplyDelete
  11. //மகாதேவன்-V.K said...

    வெளிச்சம் போட்டதிட்க்கு நன்றி
    //

    வருகைக்கு நன்றிங்க மகாதேவன்-V.K

    ReplyDelete
  12. //THOPPITHOPPI said...

    இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்க தேர்தல் வரும்
    //

    தேர்தல் வந்தாலும் மக்களுக்குத்தான் இலவசம் கொடுப்பாங்க.

    இந்தக் குழந்தைகளுக்கு ஒண்ணும் தர மாட்டாங்க.

    வருகைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  13. நானும் கவிதை சொல்வேன்..

    இவர்களைப் பார்த்து
    காரிதுப்பினால்
    அது என்
    எச்சிலுக்கு
    அவமானம்...!!! - வக்கில்லா அரசியலாளர்கள்.

    ReplyDelete
  14. THOPPITHOPPI said...

    இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்க தேர்தல் வரும்
    //

    மக்கள் செய்கையில் காட்டுவார்களா...???

    ReplyDelete
  15. //சாமக்கோடங்கி said...

    நானும் கவிதை சொல்வேன்..

    இவர்களைப் பார்த்து
    காரிதுப்பினால்
    அது என்
    எச்சிலுக்கு
    அவமானம்...!!! - வக்கில்லா அரசியலாளர்கள்.
    //

    ஆஹா.. கவிதையில கலக்குறிங்க கோடங்கி. :)

    ReplyDelete
  16. //சாமக்கோடங்கி said...

    மக்கள் செய்கையில் காட்டுவார்களா...???
    //

    மக்களுக்குத்தான் எல்லாமும் மறந்துடும்.

    கொஞ்சம் இலவசம் சேர்த்துட்டா போச்சு.

    ReplyDelete