Posts

கொற்றவை - கொடுங்கோளூர் கண்ணகி

Image
கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம்.  திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர் களுடன் துணைக்குச் செல்கிறார்.  கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி.  மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே...

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

Image
கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன்.  மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது.  மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி.  சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

பதேர் பாஞ்சாலி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்

Image
'மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று பதேர் பாஞ்சாலியைக் குறிப்பிடலாம். அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப்படுத்திவிடவும் முடியும். இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காண முடியும். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சூழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று வகைப்படுத்துவது பொருந்தும்.' என இந்நாவலின் முன்னுரையில் சுகுமாரன் சொல்கிறார் சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி படம் இந்நாவலை கொண்டே எடுக்கப்பட்டது. நாவலை அதன் அழகு குன்றாமல் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருப்பார் ராய். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் கிராமமே நிச்சிந்தாபுரம். ஹரிஹரனும், மனைவி சர்வஜெயா என சிறு குடும்பம். புரோகிதம் செய்வதால் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடக்கிறது. அப்பு, துர்கா என இரு பிள்ளைகள். பக்கத்து வீட்டில் தூரத்து சொந்தமான வயதான அத்தை பாட்டியும் இவர்களுடன் இருக்கிறார்.  துர்கா வீட்டிலேயே இருப்பதில்லை. கிராமத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கிறாள். க...

தமிழகக் கோபுரக்கலை மரபு - குடவாயில் பாலசுப்ரமணியன்

Image
தமிழகத்தில் கோபுரக்கலை வரலாற்றை பெருங் கோவில்களான தில்லை, மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற கோவில்களின் கோபுரங்களை ஆராய்ந்து முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் விளக்குகிறார்.  கோபுரங்கள் பற்றி விளக்கும் இந்நூல் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. அவையாவன;  கோபுரத்தின் தோற்றம், கட்டடக் கலை வளர்ந்த திறம், இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள கலைகள் மற்றும் கோபுரப்பதிவுகளில் வரலாற்று வெ ளிப்பாடு ஆகும்.  கோபுரம் என்ற சொல்லுக்கு பொருளைச் சொல்லி, கோவிலின் நுழைவு வாயில் கோபுரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை விளக்குகிறது இப்புத்தகம். அனலின் வடிவமாகவே கோபுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோபுரம் நிலைத்து நிற்க, சரியான இடம் தேர்வு, கற்கள் தேர்வு, அவற்றை அடுக்கிய முறை என பல காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர்.  கோபுரத்தின் பகுதிகளான நிலைக்கால் முதல் சிகரம் வரை ஒவ்வொன்றுக்கும் உரிய மரபு பெயர்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று நிலைகளில் ஆரம்பித...

படையல் - ஜெயமோகன்

Image
மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தை களமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு படையல். மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து படையெடுப்பு நடத்திய காலம். நாயக்கர் ஆட்சி சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்த போரின் விளைவாக அதிகாரத்தை கைப்பற்ற போராட்டம், அதிக  வரி என மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். இந்தத் தொகுப்பில் ஜெயமோகன் ஆறு கதைகளை எழுதியுள்ளார்.  கந்தர்வன்  மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அரசோ வரியை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. விளைச்சல் இல்லாத காலத்தில் வரியை எப்படி கொடுப்பது எனத் தெரியாமல் மக்கள் திணறுகிறார்கள். மன்னனிடம் சொல்லலாம் என்றால் சுத்தியிருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் மன்னன் அருகில் நெருங்க விடவே இல்லை. ஓலை கொண்டு செல்லும் நபர்களைத் தண்டித்தும், சில ஆட்களை கொன்றும் விடுகிறார்கள்.  மிகுந்த பக்தியுள்ள நாயக்க மன்னன் நல்லவன் தான். குறைகளை சொன்னால் வரியைக் குறைப்பான். ஆனால் அவனைச் சந்திக்க சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. எனவே ஊர்த் தலைவர்கள் சேர்ந்து மன்னன் முன்னால் யாராவது கையில் ஓ...

திருடன் மணியன்பிள்ளை - ஒரு திருடனின் சுயசரிதை

Image
களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும் . கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும். வழி தவறிப்போக இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இந்தத் தோல்விகளின் குமுறல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கிறார் பிள்ளை சிறுவயதில் தந்தையை இழக்கிறார் பிள்ளை. உறவினர்கள் மணியன் பிள்ளை குடும்பத்துக்கு தர வேண்டிய சொத்தில் ஏமாற்றுகிறார்கள்.  ஒரு சிறு வீட்டை மட்டுமே ஒதுக்கித் தருகிறார்கள். அம்மா மற்றும் சகோதரிகளுடன் அந்த வீட்டில் வறுமையும் வாழ்கிறது. தந்தை இருக்கும் வரையில் பசி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த பிள்ளை, பசியால் வாடுகிறார். அதுவும் பதின் வயதில் இருக்கும் அவருக்கு, வீட்டில் உணவு என்பது கால் வயிறு நிறையும் அளவுக்கே கிடைக்கிறது.  முதன் முதலில் தான் திருட்டுக்கு எப்படி வந்தேன் எனச் சொல்கிறார் பிள்ளை. சொந்தத்தில் ஒரு அத்தை முறையுள்ள பெண், பக்க...

தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

Image
சிறு குடும்பம் சந்திக்கும் சிக்கல்களில் பெரும்பாலும் ஊர் என்ன சொல்லும், பங்காளிகள் என்ன சொல்லுவார்கள் என்று செய்யும் செலவுகள்தான். பழக்க வழக்கம், பாரம்பரியம் என்கிற பெயரில் ஒவ்வொரு விழாவுக்கும் செய்யும் செலவுக்கு பெரிய தொகையை எடுத்து வைக்க வேண்டும். இன்று இலைமறை, காய்மறையாக இருக்கும் வரதட்சணை அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய செலவை இழுத்து வைத்துள்ளது.  தலைமுறைகள் நாவலில் திரவியத்துக்கு, இரண்டு அக்கா மற்றும் ஒரு தங்கை. ஆக மூன்று பெண்கள். பெண்கள் சமைந்த கொஞ்ச நாளிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உள்ள குடும்பம். பெரிய அக்கா உண்ணாமலையை கட்டி கொடுத்ததிலேயே செலவு அதிகமாகி விட, அடுத்த பெண் நாகம்மைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறார் அப்பா நாகருப்பிள்ளை. குடும்பத்துக்கு அவரின் ஒரு வருமானம் மட்டுமே, அதுவும் விவசாயத்தில் வருவது.  சொந்த ஊரிலேயே நாகம்மைக்கு ஒரு வரன் வருகிறது, மாப்பிள்ளையின் பெயர் செவந்த பெருமாள். கொஞ்சம் குறைவாக கொடுத்தாலும் போதும் என்று முதலில் சொல்லும் மாப்பிள்ளையின் அம்மா, பின்னர் ஒவ்வொன்றாக வரதட்சிணை கேட்கிறாள். கடனை வாங்கி அவர்கள...