Posts

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - பஷீர்

Image
செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ஆனைக்காரரோட பொன்னு மவளாக்கும்' என்கிறார்.  குஞ்ஞுதாச்சும்மாவின் கணவர் வட்டனடிமை ஊரில் பெரிய மனிதர். பள்ளிவாசலின் காரியக்காரர். ஊரில் பெரிய பணக்காரர். பள்ளிவாசலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, வட்டனடிமை தலைவராக இருப்பது பிடிக்காமல் வழக்கு தொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவரின் சகோதரிகளும் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆக இரண்டு வழக்குகள். இரண்டையும் நடத்த செலவு செய்கிறார். கையில் இருந்த பணம் மற்றும் நகைகளை இழக்கிறார். இரண்டு வழக்குகளிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. பின்னர் இப்பொழுது இருக்கும் வீட்டையும் இழந்து, சிறு தோட்டத்துடன் கூடிய சின்ன வீட்டுக்கு குடிவருகிறார்கள்.  வட்டனடிமை சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துகிறார். முன்னர் எப்பொழுதும் அவர்கள் வீட்டுக்க...

நாலுகெட்டு - எம்.டி. வாசுதேவன் நாயர்

Image
பழைய பெருமைகள் உள்ள வடக்கு வீடு, முன்பு 64 பேருக்கு மேலிருந்த பெரிய குடும்பமாக இருந்தது. பின்னர் பங்கு பிரித்ததில் காரணவர் பெரிய மாமா மற்றும் அவரின் அக்கா குடும்பம் என இப்போது வடக்குப்பாடு இல்லத்தில் இருக்கிறார்கள். எட்டு கட்டு வீடாக இருந்து இப்போது நாலு கெட்டு வீடாக சுருங்கி விட்டது.  சகோதரன் சகோதரிகளுடன் அந்த வீட்டில் பிறந்தவள் பாருக்குட்டி. எங்கேயும் போகாமல் பொத்தி பொத்தி வளர்ந்த அவள், கோந்துன்னி நாயருடன் காதல் கொள்கிறாள். 'எனக்கு நாலுகெட்டு வீடோ, பெரிய நிலமோ இல்லை. ஆனால் உன்னை காப்பாத்துவேன். உனக்கு நம்பிக்கை இருக்கா?' எனக் கேட்க பாருக்குட்டியும் நம்புகிறேன் எனச் சொல்லி கல்யாணம் செய்துகொள்கிறாள். ஒரே ஊர் என்றாலும்  திருமணத்துக்குப் பின்னர் பிறந்த வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லை பாருக்குட்டிக்கு.  வடக்கு வீீட்டில் உள்ளவர்கள், பாருக்குட்டிக்கு புலை(இறந்து விட்டவளாக கருதி செய்யும் சடங்கு) செய்து விடுகிறார்கள்.  சிறு நிலமும், ஒரு வீடும் உள்ள கோந்துன்னியின் மனையில் குடும்பம் நடக்கிறது. பின்னர் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அப்புண்ணி என்று பெயர் வைக்கிறார்கள். அப்புண்ணி கைக...

பேய்ச்சி - ம.நவீன்

Image
பேய்ச்சி நாவல் பற்றி ஜெயமோகன் தளம் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் படித்த பொழுதே வாங்க நினைத்தேன். வாங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். நாவல் மீதான தடையை அறிந்த பின்னர் உடனடியாக இந்நாவலை வாங்க முடிவு செய்து பனுவல் தளத்தில் வாங்கினேன். புத்தகம் வந்து சேர்ந்து படித்தும் விட்டேன். எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் சிறுகதைகளை இணையத்தில் படித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் சந்திப்பில் அவரைப் பார்த்திருந்தாலும் பேசியதில்லை. பேய்ச்சி நாவலில் அவரின் எழுத்து நம்மை உள்ளே இழுத்துக்கொள்கிறது. மூன்று நான்கு தலைமுறை மக்கள் நாவலில் வந்துபோகிறார்கள்.  ரப்பர் தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள், அங்கே அவர்களின் வாழ்க்கை, தம் சொந்த நிலமான தமிழகத்தை விட்டு இங்கே வந்து பின்னர் இதுவே சொந்த மண் என்று நினைக்கும் மக்கள், பக்கத்தில் இருப்பவர்களே சொந்த பந்தங்கள் என விரிகிறது நாவல். ரப்பர் தோட்டங்களில் மரங்கள் வேரோடு  தோண்டப்பட்டு, செம்பனை மரங்கள் நடும்பொழுது ஏற்படும் வேலை இழப்புகள், தோட்டத்தில் இருந்து பிரிய வேண்டிய நேரம் என புலம்பெயர் மக்களின் வாழ்வை பேசும் நாவல்,. ஜப்பான், பிரிட்டிஷ் என மாறி வரும் ஆட்சிகள், சீனர்...

சிற்பம் தொன்மம் - செந்தீ நடராசன்

Image
சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள்.  கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம்,  இந்தக் கோவிலில் உள்ளது என்று சொல்லிச் செல்வதில்லை. அந்தச் சிலைக்குரிய புராணக் கதைகள், மற்ற இடங்களில் உள்ள அது போன்ற சிலைகள், அச்சிலை பற்றி சிற்ப புத்தகங்களில் சொல்லியுள்ள அம்சங்கள் என விளக்குகிறார் செந்தீ நடராசன் அவர்கள்.  அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்றால் நேராக மூலவரை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவோம். ஆனால் பிரகாரகங்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை நாம் உற்று நோக்குவதில்லை. உண்மையான கலை அங்கே இருப்பதை நாம் அறிவதில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், சண்டேசருக்கு அருள்புரியும் சிற்பத்தைச் சிலர், அந்தச் சிவனே ராஜராஜனுக்கு முடிசூட்டினார் என மாற்றிப் புரிந்து கொள்ளக்கூடும். கோவில்களில் உள்ள சிற்பங்கள் விநாயகர், கிருஷ்ணன், அனும...

இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன் சென்

Image
க்ஷிதி மோகன் சென் சமஸ்கிருத வல்லுநர். தாகூரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். தாகூரின் அழைப்பை ஏற்று சாந்தி நிகேதனில் சேர்ந்து பணியாற்றி பங்களிப்புச் செய்தவர் சென். ஒரு ஆய்வாளராக அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இந்து மதம், அதன் ஞானத் தொடர்ச்சி பற்றி நூல்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் புராணக்கதைகளை விவரிப்பதாக உள்ளது. எனவே, இந்து ஞானம் பற்றிய அறிமுகமாக சிறு நூலை வங்காள மொழியில் எழுதுகிறார். அதை ஆங்கிலத்தில் அவரின் பேரன் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மிகச் சிறிய நூலாக இருந்தாலும், அதற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிச் செல்கிறார் சென். சில இடங்களில் விரிவாக சொல்லிக்கொண்டு அடுத்த பகுதிக்கு செல்கிறார். ஒரு சிறந்த அறிமுகப் புத்தகம் இந்நூல். மூன்று பகுதிகளாக இந்நூல் உள்ளது.  இந்து மத தோற்றம், வேதங்கள், பழக்க வழக்கம், உபநிடதங்கள், ஆறு தரிசனங்கள், வங்காள பால்கள்(baul) மற்றும் சைவ சித்தாந்தம் போன்ற மற்றைய போக்குகள், தற்கால அறிஞர்கள் பங்களிப்பு என்று விளக்குகிறார் சென். இந்நூலின் மூன்றாம் பகுதியில் முக்கியமான உபநிடத ...

ஏணிப் படிகள் - தகழி சிவசங்கரன் பிள்ளை

Image
'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி. அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார். கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் மேல் பதவியான தலைமை காரியதரிசி பதவியில் இருப்பவர். அவருடைய மனைவி கார்த்தியாயினி. பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பெண். எந்த அலங்காரமும் இல்லாத எளிமையான கிராமத்து பெண்.   திருவாங்கூர் சமஸ்தானத்தில்  அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் அவர் இருந்தபொழுது, அவளை பெற்றோர் சொன்னதால் கல்யாணம் செய்துகொள்கிறார் கேசவ பிள்ளை. ஆனால் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து தங்கம்மாளிடம் பழகுகிறார். அவளைப் பயன்படுத்தி பெரிய பதவியை அடைகிறார். ஊரில் கல்யாணம் செய்த மனைவி, இங்கே தங்கம்மாள் என குழப்ப நிலையில் இருக்கும்பொழுது தங்கம்மாளை விட்டு பிரிய நேர்கிறது.  கணவன் சொல்லை மறுக்காத கார்த்தியாயினி, எதையும் மறுத...

மாடித் தோட்டம்

Image
இடமும் சொந்த வீடும் உள்ளவர்கள் இயன்ற அளவு கீரை, காய்கறிகள் போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். மாடி இருப்பவர்கள் மாடித்தோட்டம் போட முயற்சிக்கலாம். எல்லா வகையான காய்கறிகளையும் நாம் மாடியில் பயிரிட முடியும். கீரைகள் குறைந்த நாட்களில் விளைந்து பயன் தருபவை. முதன் முதலாக தோட்டம் போட முயல்பவர்கள் கீரையிலிருந்து ஆரம்பிக்கலாம். பெரும்பாலும் நாம் கடைகளில் தான் கீரை, காய்கறிகள் வாங்குகிறோம். தோட்டம் போட்டாலும் நாம் கடைக்குப் போகத்தான் வேண்டும். ஆனால், இரண்டு கொத்து கருவேப்பிலை வாங்க ஒரு  கட்டு கீரை வாங்க என அடிக்கடி போக வேண்டியதில்லை. இரண்டு கத்தரி காய்த்தாலும் அது நாம் விளைவித்தவை. எந்த மருந்தும் அடிக்காமல் வளர்ந்தது. ஆர்கானிக் என்று அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்காமல் நம் வீட்டிலேயே இயற்கை உணவுகளை பெறமுடியும். முயன்று பாருங்கள்.