Popular posts from this blog
சிறு துளிகள் (23/11/2010)
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
பேரும் பெயரும்...
பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள். ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :) என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல...





அழகிய படங்கள் தம்பி இளங்கோ... 90களில் நான்கு வருடம் பைகாராவில் தான் பணிபுரிந்தேன்... பைகாரா அருவி ஒரு காலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் இருக்கும் ..பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஇந்த Falls-ல் குளிக்க முடியாது இல்ல? ஊட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச பல முறை சென்ற ஊர் !
ReplyDelete@பத்மநாபன்
ReplyDeleteஒருநாள், இரண்டு நாள் போய் வந்ததற்கே அந்த இடங்களை இன்னும் மறக்க முடியவில்லை. நீங்கள் நான்கு வருடம் அங்கே கண் குளிரப் பர்ர்த்து இருக்கிறீர்கள். மனிதன் இன்னும் மிச்சம் வைத்திருக்கிற சில இடங்கள் இருக்கிறது இல்லையா?
நன்றிகள் அண்ணா..
@மோகன் குமார்
ReplyDelete"இங்க குளிக்க கூடாது" அப்படின்னு எழுதி வெச்சிருந்தாங்க. அப்படியும் ஒரு சிலர் ஓரமா குளிச்சுட்டுத்தான் இருந்தாங்க. கொஞ்சம் ஏமாந்தால் வழுக்கி விடக் கூடிய இடங்கள் அதிகமாக இருக்கும்.
நன்றிங்க.
குளிக்க முடியாததற்கு காரணம் ஒன்று கடும் குளிர் இரண்டு நீங்கள் சொன்ன பாறைகள்... குளிக்கவிடாமல் இருப்பது நல்லது. கொடுமை அவ்வளவு உயரத்திலும் இரசாயன கழிவுகளை கலந்து விடுகிறார்கள்... அந்த கொடுமை ஓய்ந்திருக்கும் என நம்புகிறேன்...
ReplyDelete@பத்மநாபன்
ReplyDeleteநீங்கள் சொன்னது உண்மை, நான் குளிரை மறந்து விட்டேன் :)
இருக்கும் கொஞ்ச நஞ்சம் இயற்கையையும் அழித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.
நன்றி