சாக்கடை

நிலவில் நீர்
இருக்கலாம் என அறிய
ஒரு செயற்கைக்கோள் !

கண்டம் விட்டு கண்டம்
பாயும்
கணைகள் !

எத்தனையோ வசதிகள்
அறிவியலால்
கண்டோம் !

எப்போது தூக்கி
விட போகிறோம்

சாக்கடையில் இறங்கி
முழங் கால் சேற்றில் பதிய
சுத்தம் செய்யும்
மக்களை..

கைக்குட்டை பொத்தி
எட்டி நடை போட்டு
மூக்கோடு வாசனையை
மறைக்க நினைக்கும்
நமக்கு

அறிவியல் ஒரு வரம்தான் !

Comments

  1. அறிவியல் சாதனைகள் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் வரமாக இருக்கிறது. கீழ் தட்டு மக்களுக்காக அறிவியலை பயன்படுத்த இங்கே யாரும் முன்வருவதில்லை.. அந்த வேதனையில் உதித்த கவிதை இது...

    ReplyDelete
  2. சமூகச் சிந்தனை மிக்க எழுத்து..

    ReplyDelete
  3. தங்கள் பாராட்டுக்கு நன்றி ஷஹி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்