குப்பையும் நானும்

கவிதை எழுதலாம்
என்றேன்
என்ன கவிதை எனக் கேட்டாய்
உன் பெயர் என்றேன்
என் பெயர்
குப்பை எனச் சொன்னாய்
'உன் பெயர்
குப்பைதான்
என்னைக் கசக்கி எறிந்து
உன்னுடனே
என்னையும்
குப்பையாக்கி விட்டாயல்லவா' என்றேன்
சிரித்துக்கொண்டே
தூரம் விட்டு தூரம் நகர்ந்து
காற்றோடு
கலந்து போனாய்
அன்று பெய்த மழை நாளில் !

Comments

  1. hi man,
    kalyana aasai venthalea kavithai vanthidumnu theriyum pa. nice.....

    ReplyDelete
  2. அவர்களைத் தானே கரம் பிடித்துள்ளீர்கள்..?

    ReplyDelete
  3. இது கல்யாணம் செய்வதற்கு முன்னால் எழுதியது !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை