அடுப்பு கரி

உஸ்.. உஸ் என
ஊதாங்குழலில்
அடுப்பு விறகை
ஊதிய சுப்பக்காளுக்கு அவசரம்
எட்டு மணிக்கு
பக்கத்து ஊட்டு டிவி பொட்டியில்
நாடகம் பார்க்க

பவுடர் பூசிய
பொம்பளைகள் அழுததை
பாத்து இவளும் அழுது
மூக்கை சிந்தி
முந்தானியில் தொடைகரப்பதான்
பார்த்தாள்
மூஞ்சியில்
அப்பியிருந்த அடுப்பு கரியை !

Comments

  1. கலக்குறீங்க போங்க...

    ReplyDelete
  2. தினமும் அழுது வடியும் சீரியல்களை பார்க்கும் நம் பெண்கள், அதனால் ஏற்படும் மன ரீதியான பிரச்சினைகளை எண்ணி பார்ப்பதில்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை