Posts

சின்னஞ்சிறு துளிகள் (31/10/2010)

விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் ஒருவர் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ முறையாக எந்தப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இன்னும் கொடுமை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த நரகத்தைப் பற்றி. பசங்கள் கூட பரவாயில்லை, கொஞ்சம் பெரிய பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. எவ்வளவோ இலவசங்களை அள்ளி வழங்கும் அரசுகள் கொஞ்சம் கவனித்தால் நமது செல்வங்கள், பள்ளியில் ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி விடுவார்கள். ******************************** தன்னை பாதித்த சம்பவமாக ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில்; "ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியனாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலி கூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக...

தலைவர்கள் வருகிறார்கள்..

Image
தேர்தலுக்கும் இடைத் தேர்தலுக்கும் வெள்ளம் வந்தாலும் தீ வைத்துக் கொண்டாலும் கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும் உதவிகள் வழங்கவும் கடைகள் திறப்பிற்கும் எங்கள் தலைவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள் நோயுற்றிருக்கும் நோயாளியை பார்க்க வருவது போன்றும் மீதியுள்ள நாட்களை மறந்தும்.... ! { இது ஒரு மீள் பதிந்த பதிவு :) } நன்றி: புகைப்படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு. --------------------------------------------------

நாடும், மக்களும் என்ன செய்வர்..

Image
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் . இவர்கள் இப்படித்தான் , அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம் . அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம் . இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னந் தனியாக ஒரு வெளிநாட்டில் போய் நான் இறங்கியபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது . இரண்டு பேருடன் நான் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் . கூட இருந்த ஒரு பிரெஞ்ச் நண்பனும் , ஜெர்மன் தோழியும் சகலமும் சொல்லிக் கொடுத்தார்கள் . அடுப்பு பற்ற வைப்பது முதல் வீட்டைப் பூட்டுவது வரை ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள் . சரியாக சொல்லப் போனால் மொழியோ , நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை . சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான் , எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது . ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமான பண்பாடுகள் . இங்கே இருப்பதை அங்கேயும் , அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும் ?. நாடுகளின் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் ஒரு சில நோக்கங்களோடு இருக்க...

ஒரு நாளிதழின் முன்பக்கம்

Image
பெரும் விளம்பரங்கள் அரசியலாளர்களின் அறிக்கைகள் நடிகர்களின் விவாகரத்துச் செய்திகள் காதற் கொலைகள் போலிகளின் தரிசனங்கள் என முன்பக்கம் நிரம்பிய ஒரு நாளிதழில் ஒரு விவசாயியின் தற்கொலைச் செய்தி அவனின் மரணக் குழி போலவும் அவனின் வறுமை போலவும் எங்கோ ஒரு மூலையில் சிறு கட்டத்துக்குள்..

கவிதை எழுதாத நாள்

Image
துரோகத்தைச் சந்திக்காத நட்பை உணராத புன்னகை உதிர்க்காத புதியவை கற்காத காதலிக்கத் தோன்றாத குழந்தை முகம் பார்க்காத பூக்களின் வாசம் முகராத வெயிலின் தீண்டல் அறியாத காற்றின் உயிர் காணாத நாட்களெல்லாம் கவிதை எழுதாத நாளாகவே முடிகிறது ! படம் : இணையத்திலிருந்து - நன்றி. ================================

எல்லாம் யோசிக்கும் வேளையில்...

Image
புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எல்லாக் கதைகளையும் படமாக எடுத்து விட்டார்கள், ஒரு கதையும் கிடைப்பதில்லை எனப் பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 1984 வருடத்தில் ந.முருகேசபாண்டியன் என்பவர் ப.சிங்காரம் அவர்களை நேர்கொண்டு பேசியுள்ளார். புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் இவர்களின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ள சிலவற்றை இங்கே தருகிறேன்; "புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க.. இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விசயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாப் பார்க்க மாட்டாங்க.. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவாலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். நாவல் எழுதறப்போ தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போன...

பதேர் பாஞ்சாலி

Image
சின்ன வயதில் ஞாயிற்றுக் கிழமைகள் மாலையில் மட்டும் தமிழ் படம் போடுவார்கள். ஒரு சில வீடுகளில் மட்டும்தான் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தார்கள். அதுவும் ரொம்ப தூரம் தள்ளி உள்ள வீட்டுக்குச் சென்றுதான் பார்க்க முடியும். சில ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் வேற்று மொழிப் படங்களைப் போடுவார்கள். அதில் தமிழ்ப் படங்களும் ஒவ்வொரு நாள் வரும். தமிழ் படம் போடுவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில்தான் 'பதேர் பாஞ்சாலியைத்' திரையிட்டார்கள். அந்தச் சின்ன வயதில் கருப்பு வெள்ளையில், மொழி புரியாத படமாக இருந்த இப்படத்தில் ஒரு சில காட்சிகள் கடந்த பின்னர் பிடிக்காமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். ஒரு கிராமத்தில் நடக்கும் கதைதான் பதேர் பாஞ்சாலி. மேல் மாடத்தில் இருந்து துளசியை வணங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி, அவளின் தோட்டத்திலிருந்து ஒரு சிறுமி கொய்யாவைப் பறித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கத்துகிறாள். அந்தச் சிறுமிதான் துர்கா. எதிரே ஒரு பெண்(ஜெயா) வருவதைக் கண்ட துர்கா ஒளிந்து கொண்டு, அவள் போனதும் வீட்டுக்குப் போகிறாள். வீட்டுக்கு வந்த துர்கா கொய்யாவை ஒரு பாத்திரத்தில் போ...