சென்னை,
திருப்பூர் போன்ற நகரங்களில் காலை நேரங்களில் (உங்களுக்கு நேரமிருந்தால்
!) சாலைகளை உற்றுப் பாருங்கள். வேகமாக மக்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
கொஞ்சம் தாமதித்தால் முதலாளிகள் அல்லது மேலாளர்களிடம் திட்டு கிடைக்கும்.
எனவே அந்த தாமதம் தவிர்க்க பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும், சென்னை
போன்ற ஊர்களில் மின்சார ரயில்களிலும் மக்கள் பறந்து கொண்டே இருக்கிறார்கள்.
அதுவும் காலையும், மாலையும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மக்கள் அடித்துக் கொண்டு ஓடும் பொழுது நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் தானாகவே வரும். ஒரு நாளில் இது முடிந்து விடப் போவதில்லை, தினமும் உணவு வேண்டும். அப்படி அரக்கப் பறக்க ஓடும் மனிதனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பட்டினியில் கிடக்க கூடும். நோய் தீர மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இவன் (இவள்) மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். கூடுதலான வீட்டு வாடகை கொடுக்க சிரமப் பட்டுக் கொண்டிருக்கலாம். ஆசையாக குழந்தை கேட்ட தின்பண்டமோ அல்லது துணியோ வாங்க ஓடிக் கொண்டிருக்கலாம். ஆக, இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேலை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம். ஒரு நாள் கூலி இல்லையெனில், பிரச்சினைகள் அப்படியே இருக்கும்.
1936 ல் வெளிவந்த படம் மாடர்ன் டைம்ஸ். வேலைக்குப் போகும் ஒருவனைப் பற்றிய படம். முதல் காட்சியில் கூட்டமாக ஓடும் வெண் பன்றிக் கூட்டத்தைக் காண்பித்து, அப்படியே சப்வே-ல் திமிறிக் கொண்டு வரும் மக்கள் கூட்டம் திரையில் வருகிறது. வயிற்றுக்கு இரை வேண்டுமெனில் பன்றியாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் ஓடித்தானே தீர வேண்டும்.
பெரிய பெரிய இயந்திரங்கள் நிறைந்த ஒரு தொழிற்சாலையில் சாப்ளின் வேலை செய்து கொண்டிருக்கிறார். இரண்டு கையிலும் இரண்டு ஸ்பேனர்களைப் பிடித்துக் கொண்டு, கை ஓயாமல் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால், வேலை முடிந்த பிறகும் அவரது கைகள் அதே நிலையில் ஆடிக் கொண்டிருக்கின்றன. வெளியே வரும் சாப்ளின், சாலையில் போகும் பெண்ணின் சட்டைப் பட்டனைத் திருக்க முற்பட அவள் அங்கே வரும் காவலனிடம் புகார் செய்கிறாள். திரும்பவும் தொழிற்சாலைக்குள் வந்து சாப்ளின் ரகளை செய்ய அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
ஒரு பெண் கப்பலில் இருந்து வாழை பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு தன் வீடு நோக்கி விரைகிறாள். அங்கே தனது இரு சிறிய சகோதரிகளுடன் அதை சாப்பிடுகிறாள். வேலை இல்லாமல் வரும் அவள் அப்பாவும் சாப்பிட ஏதுமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பழத்தைச் சாப்பிடுகிறார். கொஞ்ச நாள் கழித்து, அவள் அப்பாவும் இறந்து விட மூவரையும் காப்பகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். தனது சகோதரிகளை அங்கே விட்டு விட்டு அப்பெண் மட்டும் தப்பித்து விடுகிறாள்.
மருத்துவமனையில் இருந்து திரும்பும் சாப்ளின், வேலை தேட முயல்கிறார். போராட்டம் காரணமாக தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. ஒரு சாலைத் திருப்பத்தில், லாரி ஒன்று திரும்ப அதன் பினனால் பாதுகாப்புக்காக கட்டியிருந்த சிவப்புக் கொடி கீழே விழுகிறது. அதைப் பார்க்கும் சாப்ளின் அதை எடுத்துக் கொண்டு ஓட்டுனரிடம் கொடுக்க லாரியின் பினனால் ஓடுகிறார். ஆனால் அவர்க்குப் பின்னால் போராட்டக் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. அதை அறியாமல் இவர் முன்னால் நடக்க, இவரைத் தலைவன் என்றெண்ணி போலீஸ் கைது செய்ய, சிறை செல்ல நேர்கிறது.
சிறையில் கைதிகள் தப்பிக்க முயற்சி செய்வதை சாப்ளின் முறியடிக்கிறார். எனவே அவரை சீக்கிரமாக விடுதலை செய்கிறார்கள். கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து 'இதன் மூலம் நீ எளிதாக வேலையில் சேர்ந்து கொள்ளலாம்' என்கிறார் சிறை அதிகாரி. வெளியே வந்தால் வேலை இல்லை. சிறையில் இருந்தாலாவது உணவு கிடைக்கும். என்ன செய்வதெனத் தெரியாமல் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
சிறை அதிகாரி கொடுத்த கடிதத்தைக் காண்பித்து ஒரு கப்பல் கட்டும் இடத்தில் ஒரு வேலைக்குச் சேர்கிறார். சேர்ந்த முதல் நாளே, ஒருவன் ஒரு கட்டை வேண்டும் என்று கேட்க, கட்டையைத் தேடும் நம்ம ஆள் கட்டிக் கொண்டிருந்த ஒரு கப்பலின் அடியில் முட்டுக் கொடுத்திருந்த கட்டையைப் பிடுங்க, கப்பல் கடலில் பாய்கிறது. பிறகென்ன, அங்கே இருந்தும் வெளியேறுகிறார்.
காப்பகத்திலிருந்து தப்பிய பெண் ஒரு பேக்கரியில், பசியால் ஒரு பிரட் பாக்கெட்டைத் திருடிக் கொண்டு ஓடுகிறாள். எதிரே வரும் சாப்ளின் மீது மோதி விழுகிறாள். அப்பெண் திருடுவதைப் பார்த்த இன்னொரு பெண்மணி, அதைக் கடைக்காரனிடம் சொல்ல போலீஸ் அங்கே வருகிறது. போலீசிடம் நான்தான் திருடினேன் என்று சாப்ளின் கூற அவரை அழைத்துச் செல்கிறது. அங்கே வந்த பெண்மணி 'இவன் இல்லை.. திருடியது ஒரு பெண்' எனச் சொல்ல, அவரை விட்டு விட்டு திரும்ப அப்பெண்ணைத் துரத்துகிறார்கள்.
இன்னொரு கடையில் காசில்லாமல் உணவு அருந்தும் சாப்ளினை போலீஸ் பிடிக்கிறது. போலீஸ் வண்டியில் வரும்பொழுது, அப்பெண்ணும் பிடிபட்டு வண்டியில் ஏற்றப் படுகிறாள். போகும் வழியில் இருவரும் தப்பித்து விடுகின்றனர்.
ஒரு கடையில் இரவு வாட்ச்மேன் வேலை காலியாக இருப்பதை அறிந்து அங்கே சேர்கிறார் சாப்ளின். அன்று இரவு அப்பெண்ணும் அங்கே தங்குகிறாள். இரவு அந்தக் கடைக்கு திருடர்கள் வருகின்றனர். பார்த்தால் அவர்கள் சாப்ளினின் பழைய பாக்டரியில் வேலை செய்தவர்கள். இப்பொழுது பசியால் இங்கே வந்தோம் எனப் பேசிக்கொண்டு, மது வகைகளை குடித்து போதையில் தூங்கி விடுகிறார் சாப்ளின்.
மறுநாள் காலை துணிகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சாப்ளினை போலீஸ் அள்ளிக் கொண்டு செல்கிறது. அப்பெண் தப்பி விடுகிறாள். மீண்டும் பத்து நாட்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வர, அங்கே அப்பெண் அவரை ஒரு சிறிய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறாள். பழைய மர வகைகளை கொண்டு கட்டிய சின்ன குடிசை அது.
அடுத்த நாள் காலையில் பேகடரி திறப்பதை அறிந்து காலையில் வேலைக்கு சேருகிறார். மதியம் உணவு முடிந்து திரும்பவும் ஸ்டிரைக் ஆரம்பிக்க தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். வெளியே வரும் சாப்ளின் ஒரு கல்லைத் தெரியாமல் மிதித்து விட அங்கே நின்று கொண்டிருந்த போலிசின் மீது பட, திரும்பவும் ஒருவாரம் சிறை வாசம்.
சிறை வாசம் முடிந்ததும் வெளியே வரும் சாப்ளினை வரவேற்று தான் புதிதாக வேலையில் சேர்ந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவளுக்கு நடனம் ஆடும் வேலை. சாப்ளினுக்கு பாடத் தெரியும் என்று சேர்த்து விடுகிறாள். அன்று சாப்ளின் பாடி முடித்து, அப்பெண் ஆட வரும்பொழுது காப்பக அதிகாரிகள் அவளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள்.
ஒரு சாலையின் ஓரத்தில் இருவரும் ஒரு சிறிய மூட்டை முடிச்சோடு அமர்ந்து கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள். அப்பெண் "முயற்சி செய்வதால் என்ன பலனை கண்டோம்?" என அழ ஆரம்பிக்க, "செத்துப் போவோம் என்று ஒரு நாளும் எண்ணாதே. நாம் இன்னும் நிறைய தூரம் செல்வோம்" என்று தேற்றுகிறார். இருவரும் சந்தோசத்துடன் ஒரு நீண்ட பாதையில் நடக்க ஆரம்பிக்க, படம் முடிகிறது.
நெகிழ வைத்தவை:
ஒரு வேலையைச் செய்து கொண்டே இருக்கும் பொழுது ஏற்படும் நோய்கள் அதிகம். படத்தின் முதலில் சாப்ளின் கை நிற்க முடியாமல் ஆடிக் கொண்டே இருக்கும். அங்காடித் தெருப் படத்தில் கூட ஒரு நோயாளி நின்று கொண்டே வேலை செய்ததால் ஏற்படும் நோயைப் பற்றி சொல்லுவார்கள்.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முதலாளிகள் ஒன்று போலதான் இருக்கிறார்கள். சாப்பிடும் நேரத்தைக் குறைக்க வலியுறுத்தும் நிறுவனங்கள் ஏராளம். இப்படத்தில் கூட, சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்பதால் ஒரு இயந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நல்ல வேளை, அது படத்திலேயே வெற்றி அடையவில்லை.
பசியால், கப்பலில் வைத்திருக்கும் பழங்களை அப்பெண் திருடும் பொழுது, அவள் திருடுவதற்கு இந்தச் சமூகம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
பலசரக்கு கடையில் தன் நண்பனைப் பார்த்தவர்கள் "நாங்கள் திருடர்கள் இல்லை.. எங்களுக்கு பசியாக இருக்கிறது".. என்பார்கள். பசி மட்டும் தானே மனிதனுக்கு கொடிய நோயாக இருக்கிறது.
சாப்ளினும் அப்பெண்ணும் தங்களின் கனவு இல்லம் பற்றி கனவு காண்பார்கள். அதில் அழகான வீட்டுக்கு உள்ளேயே ஆப்பிளும், திராட்சைப் பழங்களும் சன்னலில் காய்த்திருக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பசு பாலை கறந்து கொடுத்து விட்டுச் செல்கிறது.
இறுதியாக, இந்த மாடர்ன் யுகத்தில் நிறைய பேக்டரிகள், நிறைய உணவுகள், நிறைய பொருள்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாருக்கும் வேலை கிடைப்பதும், பசி ஆறுவதும் எவ்வளவு கடினமாக உள்ளது. ஒரு வேளை காட்டுக்கு உள்ளேயே ஆதி வாசிகளாக இருந்திருந்தால் கூட காயோ, கனியோ கிடைத்திருக்கும். காட்டை அழித்து நாட்டை உருவாக்கி, நவீன உலகம் என்கிறோம். மாடர்ன் உலகத்தில் இன்னும் அனைவருக்கும் உணவுதான் கிடைக்கவில்லை.

அண்ணா ..! அருமையானதொரு பகிர்வு அண்ணா ...!
ReplyDeleteசிறுவயதில் சார்லி சாப்ளின் படங்களை பார்த்திருக்கிறேன் . கோமாளித்தனம் பண்றதுனாலேயே அவரை பிடிக்கும் . ஆனால் அந்த கோமாளித்தனங்களுக்குள் இவ்வளவு அரத்தங்கள் இருக்குமேனே சமீபகாலங்களில் தெரிந்துகொண்டேன் . உங்களது இந்த பதிவு , சாப்ளின் படங்களை தேடிப்பிடித்து பார்க்க தூண்டுகிறது .
//வேலை முடிந்த பிறகும் அவரது கைகள் அதே நிலையில் ஆடிக் கொண்டிருக்கின்றன.//
உண்மைதான் . நிறைய முறை உணர்ந்திருக்கிறேன். எந்த ஒரு வேலையும் அதிகபட்சம் ஐந்து வருடங்களில் போரடித்துவிடுகிறது . ஐந்து வருடங்களுக்கு மேல தொடர்ந்து செய்யும் எந்த ஒரு வேலையும் இயந்திரத்தனமாகவே இருந்துவிடுகிறது . அதேசமயம் இயந்திரத்தனத்திலிருந்து விட்டு விடுபட்டு வெளிவர தைரியமில்லை . நீங்கள் சொல்வதைபோல தினமும் சாப்பிடவேண்டுமே , நல்ல வீடு வேண்டுமே , இன்னும் நிறைய வேண்டுமேக்களுக்ககாவே இதயம் மறித்து இயந்திரங்களாகவே இயங்கி கொண்டிருக்கிறோம் .
:)
ReplyDelete@ஜீவன்சுப்பு
ReplyDeleteநன்றிங்க ஜீவன்சுப்பு..