Thursday, January 10, 2013

கற்கள்

இவன் வயிற்றில் இருந்தபோது
ஒருநாள் 
நாட்டு ஓடு போட்ட கூரையின் மேல்
சடசடவென கல்மாரி விழுந்தது... 

நடந்து பழகியவன்
ஒருநாள் கல் தடுக்கி
விழுந்த காயத்திற்கு
நான்தான் மருந்து போட்டு விட்டேன்...

கல்லைத் தூக்கி வீசியதில்
பக்கத்துக்கு வீட்டு பையனின்
மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததில்
பையனின் அம்மாவுடன்
ஜென்மப் பகை வந்தது...

தள்ளாத வயதில்
முதியோர் இல்லத்தில்
தவிக்க விட்டுப் போனவன்
அவன்

அவனே
ஒரு பாறாங் கல்லோ
என்று இப்பொழுது நினைக்கிறேன்....




3 comments:

  1. அவன் மனத்துடன் அதிக தொடர்புகொண்ட
    பொருள் நினைவுக்கு வருவது சரிதானே
    மனம் க்வர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. முதியோரின் இயல்பான ஏமாற்றம்...வித்தியாசமான பதிவு. தொடர்புடைய பொருளில் கல் புதிது.

    ReplyDelete
  3. க்ருவில் உதித்த நாள்லிருந்து அவனுடன் தொடர்புடைய கல் - அவனையே பாறாங்க்ல்லாக நினைக்க வைக்கிறதா ? தள்ளாத வயது - முதியோர் இல்லம் - தாய் படும் பாடு - மகனின் மனது பாறாங்கல் ஆகிவிட்டது. கவிதை நன்று இளங்கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete