'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஆக்காட்டி..' பாடல், ஓர்
அற்புதம். படம் வெளியாகும் முன்னரே, நண்பன் ஒருவன் திரும்ப திரும்ப
கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு ஒப்பாரி போல இருக்கும் இந்தப் பாட்டை அவன்
அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க,
'இந்தப் பாட்டை நல்லாக் கேளு.. அந்த வார்த்தைகளோட..' என்றான். பிறகு தான்
நாங்கள் அந்தப் பாட்டை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தோம். பாடல் முடிந்தவுடன்,
அதிலும் குறிப்பாக 'வலை என்ன பெருங் கனமா?' என்று முடியும்போது மனதை
உலுக்க ஆரம்பித்து விட்டது.
'வலியும் வேதனையும் வலையோடு போயிருச்சு..' என்று இந்தப் பாடல் முடியும்போதெல்லாம் ஒரு புதிய நம்பிக்கை உதிக்கும் மனதில். திரையில் இந்தப் பாடலும், காட்சிகளும் இடம் பெறவில்லை.
ஒரு குருவி, தன் குஞ்சுகளுக்கு இரை தேடிப் போகும்போது, வலையில் மாட்டிக் கொண்டு விடுகிறது. அதிலிருந்து தப்பித்து வெளிவருவதை நடித்துக் காட்டுவார்கள் படத்தில்.

இது குருவிகளின் கதை மட்டும் அல்ல, நாள்தோறும்
அல்லல் படும் மனிதர்கள் பற்றியும் தான். இங்கு போராடாமல் எதுவுமே
கிடைப்பதில்லை, உயிர் வாழ்தல் கூட.
உண்மையில் மிக அருமையான பாடல் ... நன்றி
ReplyDeleteSuperb Street play. படம் பார்த்த போது இவ்வளவு நுணுக்கமாக வார்த்தைகளை கவனிக்கத் தவறியிருக்கிறேன். வாழ்வியல்...
ReplyDeleteசெம்மலர் பத்திரிகியின் ஆசிரியரான எஸ்.ஏ.பெருமால அவர்கள் குணசெகரன் மாணவராயிருந்த போது அவருக்கு சொன்ன பாட்டுஇது! பெருமாளுக்கு அவருடையா பாட்டி பாடிக்காண்பிப்பாராம் ! படத்தில்மிக அருமையாக அமைந்து உள்ளது ! ஆனால் அநியாயமாக குணசெகரன் தடை வாங்கி அந்த பாடல் இடம் பெராமல் போயிற்று ! ---காஸ்யபன்
ReplyDelete@என் ராஜபாட்டை : ராஜா
ReplyDeleteநன்றிங்க
@ezhil
ReplyDeleteநன்றிங்க
@kashyapan
ReplyDeleteதாங்கள் சொன்ன தகவல்கள், நான் இதற்க்கு முன் அறிந்திராதவை.
அந்த பாடல் படத்தில் இடம் பெறாமல் போனதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் இருந்தேன்
நன்றிங்க