Posts

நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய - தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி

Image
நீலகண்டப் பறவையைத் தேடி - ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல. அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமான்டிக் உணர்ச்சிப் பெருக்கு. குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் இவை எல்லாவற்றையும் காண்கிறோம்.  பத்தாண்டு கால உழைப்பில் உருவான இந்நாவலின் முன்னுரையில் மேற்கண்ட குறிப்பு உள்ளது.  வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை நீலகண்டப் பறவையைத் தேடி. அவ்வூரின் இயற்கை, ஆறுகள், ஏரிகள், மக்கள் என விவரித்துச் செல்கிறது நாவல். காதல், காமம், பசி, அன்பு, துரோகம் என அனைத்து உணர்வுகளையும் தொட்டுச் செல்லும் நாவல் இது.  கிராமத்தில் பெரிய மனிதரான மகேந்திர நாத்துக்கு மூன்று ஆண் பிள்ளைகள். செல்வாக்கான குடும்பம் கூட, அவர்களை ஊர் மக்கள் டாகுர் என அழைக்கிறார்கள். மூத்த பிள்ளையான மணீந்திரநாத் ஆங்கிலேயப் பெண்ணை காதலிக்கிறார். காதலை தந்தை எதிர்க்க, வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. காதல் கைகூடாத ஏக்கத்தால் அவர் மனந...

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா. பாலுசாமி

Image
அர்ச்சுனன் தபசு எனப்படும் சிற்பத்தொகை மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. இதனை பகீரதன் தவம் என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகளை மறு ஆய்வு செய்து இந்நூலை சா.பாலுசாமி அவர்கள் எழுதியுள்ளார்.  கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகையை மகாபாரத கதைகளில் சொல்லப்பட்டது போல அமைந்துள்ளது, அதில் உள்ள மிருகங்கள், பறவைகள், மரங்கள் என யாவும் இமய மலைத் தொடர்களில் உள்ளவையே என்றும் நிறுவுகிறார் பாலுசாமி. மேலும் அவர் இமய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பல்லாண்டுகள் முயற்சிக்கு பின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது. கின்னர, கிம்புருடர்கள், நாக இணையர், கங்கையில் குளிப்பவர்கள், முனிவர்கள் என ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விளக்குகிறார். இது பகீரதன் தவம் அல்ல அவர் மறுக்க ஒரு பெரிய காரணத்தைச் சுட்டுகிறார். அதாவது, சிற்பத்தில் காட்டுவது கங்கை நதி என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வது. பகீரதன் தவம் செய்ததே கங்கை நதி பூமியில் இறங்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அவன் தவம் செய்யும்போதே கங்கை நதி பாய்ந்து கொண்டுள்ளது. மற்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், இது முதல் தவறு ...

பருவம் - எஸ்.எல். பைரப்பா

Image
எஸ்.எல். பைரப்பா கன்னடத்தில் எழுதிய நாவலை பாவண்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் ஆசிரியர் பைரப்பா அவர்கள், குரு தேசம், விராடம், இமயம் மற்றும் பாரதப் போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தே இந்நாவலை எழுதியுள்ளார் அவர். வியாசரின் மகாபாரதம், பல அறிஞர்களின் நூல்கள் என ஆய்வு செய்து பல்லாண்டுகள் உழைத்தே பருவம் நாவலாக வெளிவந்துள்ளது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் பைரப்பா. ஒவ்வொருவரின் நினைவுகள் வழியாகவே நாவலைக் கொண்டு செல்கிறார் பைரப்பா. போர் தொடங்கும்போது ஆரம்பிக்கும் இந்நாவல், அந்த நினைவுகள் மூலம் பழைய கதைகள் கூறப்படுகிறது. தெரிந்த பாரதம், கதை மாந்தர்கள் என ஏற்கனவே நாம் அறிந்த கதைதான். ஆனால் அதை இந்நாவலில் சொன்ன முறை மிகவும் வித்தியாசமானது.  மகாபாரதத்தில் பீஷ்மர், பீமன், அர்ஜுனன், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் எதையும் செய்து முடிப்பவர்களாக, கிருஷ்ணன் தெய்வத்துக்கு நிகராக வைத்து போற்றப்படுவார்கள். ஆனால் பருவத்தில் அவர்களும் மனிதர்களாகவே காட்டப்படுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டோ அத்தனையும் அவர்களு...

மானக்கேடு - ஜெ.எம்.கூட்ஸி : தமிழில் - ஷஹிதா

Image
உறவினர் ஒருவருக்கு இன்னொருவருடன் நிலப் பிரச்சினை வந்தது. அவர் அதை விற்றுவிடலாம் அல்லது அவருடன் சமாதானமாகி போய்விடலாம். அப்படி சமாதானம் செய்துகொண்டால் உறவினர் சில அடிகளை இழக்க நேரிடும். உறவினர் கடைசி வரை அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. 'என்ன ஆனாலும் சரி, நான் தோற்க மாட்டேன். ஓரடி கூட நான் இழக்க தயாராயில்லை' என்றார்.  உண்மையில் இது என் நிலம், எனக்கானது என்பது சுயநலம் போன்று தோன்றினாலும் நம் வாழ்வுக்கு பிடிப்பாக அந்த சுயநலமே அமைகிறது. ஒரு அடியில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் அது அவரவர் நிலம். நாவலில் லூசி இதையே சொல்கிறாள். என்ன நடந்தாலும் சரி நான் இங்கேயே இருப்பேன், இது என் துண்டு நிலம் என்கிறாள்.  இரண்டு திருமணம் ஆகி, இருவரையும் விவகாரத்து செய்துள்ள டேவிட்க்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகிறது. தனிமையில் வாழும் அவர், தமது இச்சைகளை பாலியல் தொழிலாளிகளுடன் போக்கி கொள்கிறார். அதுவும் ஒரே பெண் தொடர்ந்து அவருக்கு வருகிறாள். அவளை அளவுக்கு அதிகமாக அவர் விரும்புகிறார். அப்பெண் ஒரு நீண்ட விடுமுறையில் செல்கிறார். அவளின் நிறுவனம் அவள் பற்றிய தக...

கொற்றவை - கொடுங்கோளூர் கண்ணகி

Image
கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம்.  திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர் களுடன் துணைக்குச் செல்கிறார்.  கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி.  மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே...

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

Image
கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன்.  மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது.  மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி.  சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

பதேர் பாஞ்சாலி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்

Image
'மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று பதேர் பாஞ்சாலியைக் குறிப்பிடலாம். அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப்படுத்திவிடவும் முடியும். இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காண முடியும். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சூழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று வகைப்படுத்துவது பொருந்தும்.' என இந்நாவலின் முன்னுரையில் சுகுமாரன் சொல்கிறார் சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி படம் இந்நாவலை கொண்டே எடுக்கப்பட்டது. நாவலை அதன் அழகு குன்றாமல் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருப்பார் ராய். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் கிராமமே நிச்சிந்தாபுரம். ஹரிஹரனும், மனைவி சர்வஜெயா என சிறு குடும்பம். புரோகிதம் செய்வதால் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடக்கிறது. அப்பு, துர்கா என இரு பிள்ளைகள். பக்கத்து வீட்டில் தூரத்து சொந்தமான வயதான அத்தை பாட்டியும் இவர்களுடன் இருக்கிறார்.  துர்கா வீட்டிலேயே இருப்பதில்லை. கிராமத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கிறாள். க...