Posts

பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

Image
மாணவன் பாலாஜியின் அறிவியல் ஆர்வத்தையும், அவனின் முயற்சியால் கண்டுபிடித்த சில கருவிகளைப் பற்றியும் ' ஓர் இளம் விஞ்ஞானி ' என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். ஆனந்த விகடனின் என் விகடனில் வெளியான வலையோசையில் பாலாஜியைப் பற்றிய இந்தப் பதிவும் இடம் பிடித்திருந்தது. ஆனந்த விகடனில் வெளியான செய்தியை பாலாஜியுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இந்த வாரத்தில் சோலார் உதவியுடன் இயங்கும் கார் ஒன்றை இப்பொழுது செய்திருப்பதாகவும், அவசியம் அதைப் பார்க்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். எனவே, நாங்கள் போன ஞாயிறு அன்று பாலாஜியின் வீட்டுக்குச் சென்றோம். சின்ன கார் பொம்மையில் ஏற்கனவே இருந்த பேட்டரியைக் கழட்டிவிட்டு, சோலார் பேனல் பொருத்தி, சூரிய ஒளியுடன் இயங்குமாறு மாற்றியுள்ளான் பாலாஜி. அவன் கையில் இருந்த ரிமோட்டில் கார் அங்குமிங்கும் அழகாகத் திரும்பியது. சின்ன குழந்தைகள் உட்காரும் கார் என்பதால் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு காரை ஒட்டினர். மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் இப்பொழுது, மாற்று சக்திகளை பயன்படுத்தும் பாலாஜியின் திறமை வியக்க வைக்கிறது. பாலாஜியின் அனைத்து முயற்சிகளுக...

அவசியம் தேவை - டெர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance)

Image
பெரும்பாலும் நாம் எடுக்கும் பாலிசிகள் மற்றவர்கள் சொல்லி எடுத்ததாகவே இருக்கும். அதிலும், நமது நண்பர்களோ, உறவினர்களோ இன்சூரன்ஸ் முகவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் சொன்னதுக்காகவே பாலிசி எடுத்து விடுவோம். பாலிசியில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் பார்க்கப் போவதில்லை. டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி மட்டும் பார்ப்போம். இன்சூரன்ஸ் என்பது முதலீடு அல்ல என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். நம் ஆட்கள் முதலில் கேட்கும் கேள்வி, "இத்தனை ரூபாய் நான் பிரீமியம் கட்டினால் எனக்கு இத்தனை வருடங்கள் கழித்து எவ்வளவு கிடைக்கும்" என்பது. நானும் முதலில் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதாவது பணம் திரும்ப வரும் நோக்கில், இரண்டு மூன்று பாலிசிகளும் எடுத்திருக்கிறேன். இந்த வகையான பாலிசிகளில் பணம் கடைசியில் திரும்ப வரும். ஆனால் இழப்பீடு(Coverage) மிகவும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஐம்பது ஆயிரம் பிரீமியம் என்றால் ஐந்து லட்சத்துக்குள் தான் இழப்பீடு இருக்கும். பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த இழப்பீடு(ஐந்து லட்சம்) கிடைக்கும்....

ஆனந்த விகடன் - வலையோசையில் எனது வலைப்பதிவு..

Image
ஆனந்த விகடனின் (23/05/2012)  'என் விகடன்' கோவை இணைப்பில் எனது வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது. விகடனில் என் எழுத்து வருவது இதுவே முதல் முறை. விகடனுக்கு என் நன்றிகள். நண்பர்களுக்கு எனதன்பு நன்றிகள்.

புதுமைப்பித்தன்

Image
பல வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். புத்தக அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது இந்தப் புத்தகம் அகப்பட்டது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அந்தத் தொகுப்பில் பதினாறு கதைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதுவரைக்கும் நான் படித்திராத ஒரு சொல்லாட்சியுடன், நகைச்சுவை உணர்வுடன், சிந்திக்க வைக்கும் போக்குடன் கதைகளை எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். அன்றுமுதல் புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேட்டாலே அவரின் கதைகள் மனதில் வந்து போயின. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்ந்த அவரின் கதைகள் ஜீவன் உள்ளவை. 'என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது.. பிறகு நான் எடுத்தாளும் விசயங்கள்; பலர் வெறுப்பது, விரும்புவது..' என்று ஒருமுறை எழுதியிருக்கிறார். அவரின் இயற்பெயர் விருத்தாசலம். புதிய வகையில் சிந்திக்க கூடிய கதைகளாக எழுதியிருக்கும் புதுமைப்பித்தன் அவர்களின் சில கதைகளைப் பற்றிச் சில வரிகள்.          ...

சினிமா: தி பர்சுட் ஆப் ஹேப்பிநெஸ் (The Pursuit of Happyness)

Image
யாருக்குமே மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. வேலை முதற்கொண்டு முட்டி மோதி தான் மேலே வர வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் நாம் தேடியதை விட, வேண்டுவதை விட அதிகமாக கிடைத்து விடலாம். அது அதிர்ஷ்டம் தான். பெரும்பாலும் நாம் தேடுவது கிடைப்பதில்லை. ஆனால் அதை அடையும் வரை நாம் விடுவதில்லை. தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி என்று சொல்வார்கள். மேலே முளைத்து வரத் துடிக்கும் விதைகளைப் போலவே தானே மனிதர்களும். இந்தப் படத்தில்தான் வில் ஸ்மித் என்னும் மாபெரும் கலைஞனின் நடிப்பைப் பார்த்தேன். அழும் இடத்தில் நம்மையும் அழ வைக்கும் நடிகன். தனது தோல்விகளை முகத்தில் தேக்கி வைத்துக்கொண்டு, வெற்றிக்காக தவமிருக்கும் மனிதர்களை திரையில் கொண்டுவந்திருப்பார் ஸ்மித். ஸ்மித்தின் மகன் 'ஜேடன் ஸ்மித்' தான் படத்திலும் வில் ஸ்மித்தின் மகன். இதே பையன்தான் 'The Karate kid' படத்திலும் கலக்கியிருப்பான் மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் ஏன் கிடைப்பதில்லை?.  'Happiness'  என்பதுதான் சரியான ஸ்பெல்லிங். ஆனால், 'Happyness' என்று ஒரு சுவற்றில் எழுதியிருக்க கதையின...

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

Image
எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அரசமரத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் பிள்ளையாரும் அம்மனும் குடியிருந்தார்கள். ஊருக்குள் வருவோரை வரவேற்கும் விதமாக ஊரின் தொடக்கத்திலேயே இருந்தது. காக்கைகள் குருவிகள் என எப்போதும் நிறைந்து இருக்கும். சிறு சிறு பழங்களாக உதிர்ந்து கீழே கிடக்கும். இவ்வளவு பெரிய ஆலமரத்தின் விதை இவ்வளவு சிறிதா என நினைத்து வியந்த காலங்கள் அவை. ஒருநாள், ஊரைக் கூட்டி மரத்தை வெட்டுவதென்று தீர்மானித்தார்கள். சில நாட்களிலேயே மரம் வெட்டப்பட்டு விட்டது. மரம் வெட்டியதற்கு அவர்கள் சொன்ன காரணம், மரத்தின் வேர் பக்கத்திலுள்ள வீடுகளின் சுவர்களை தாக்குகின்றனவாம். இது நடந்து பதினைத்து வருடங்களுக்கு மேலிருக்கும். இப்பொழுது அதே இடத்தில், ஒரு அரசமரக் கன்றையும் ஒரு வேப்ப மரக் கன்றையும் நட்டி தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஒருவேளை அவ்வளவு பெரிய மரத்தை வெட்டியதற்கு, இப்பொழுது வளர்க்கிறார்களோ என்னமோ. ஒவ்வொரு முறை நெடுஞ்சாலை அகலம் செய்யும்போதெல்லாம் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த அத்தனை புளிய மரங்களும் இன்று வெட்டப்பட்டு விட்டன. தினமும்...

சித்திரை மழையில்

Image
வழக்கமாக வைகாசி பாதிக்கு மேல்தான் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த வருடம் சித்திரை மாதத்திலேயே பெய்ய தொடங்கிவிட்டது. நான்கு நாட்களாக மழையில் ஊரே பசுமை போர்த்தியது போல இருக்கிறது. வாடிகிடந்த செடி கொடிகள் எல்லாம் மழையில் தளிரத் தொடங்கியிருக்கிறது. மழையால் வெயில் ஓடிபோய் ஒளிந்து கொண்டது போல, நிலம் சில்லென்று இருக்கிறது.  வண்ணநிலவன் நாவலில் இப்படிச் சொல்கிறார்; "மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது" -- ஆம் மழை கடவுள், மழையை நேரில் பார்க்கும்போது சில நேரங்களில் நாமும் கடவுள் தன்மை பெற்று விடலாம். மழை பெய்து ஓய்ந்த நேரம் எடுத்த படங்கள் இவை;