Posts

வீடிலிகள்

Image
அன்றும் அப்படிதான் அந்த ஆள் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு, வீதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவன் என்று சொல்வது தப்பு, ஏனெனில் அந்த ஆளுக்கு ஐம்பது வயசுக்கு மேலிருக்கும். இந்த மேன்சனுக்கு வந்த இந்த ஒரு வருட காலத்தில், இது போன்ற வயதானவர்கள் தங்கி நான் பார்த்ததில்லை. கல்லூரி செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் என வெளியூரிலிருந்து வந்து தங்கி இருப்பவர்களின் வயதைப் பார்த்தால் முப்பதுக்குள்தான் இருக்கும். இருவர் தங்கிக் கொள்ளும் அறையில் நாங்கள் தங்கி இருந்தோம். முப்பது ரூம்கள் இருக்கும் இந்த மேன்சனில், நாங்கள் இருந்தது இரண்டாவது தளத்தில் வலப்புறம். காலையில் போய்விட்டு இரவு வரும்பொழுது யாரையும் கவனிக்க முடியாது என்றாலும், இந்த புது ஆள் தினமும் காலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் பால்கனியில் நின்றும், நடந்தும் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் மேன்சனில் தங்கி இருப்போரின், சொந்தமாகவோ, அப்பா அல்லது மாமாவாகவோ இருந்து, ஏதோ வேலையாக கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், ரொம்ப நாள் கண்ணில் தட்டுப் பட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள...

சினிமா : 12 ஆங்ரி மென் (12 Angry men )

Image
வழக்கமான படங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது இந்தப் படம். மற்ற படங்களைப் போல் அல்லாமல், ஒரே அறையில் கதை ஆரம்பித்து அதே அறையில் முடிகிறது. கதை என்றும் சொல்வதற்கு இல்லை, 12 மனிதர்கள் படம் நெடுகிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள்?. ஒரு சிறுவன், தனது தந்தையைக் கொலை செய்து விட்டதாக,  நீதிமன்றத்தில் இருக்கிறான். இந்த வழக்கில் நீதிபதியைத் தவிர, பொது மக்களிலிருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களும் அந்த வழக்கில் நீதிபதியாக இருப்பார்கள். அப்படி இந்த வழக்கில் 12 பேர் நீதி மன்றத்தில் இருக்கிறார்கள். தலைமை நீதிபதி அவர்களிடம் வழக்கைப் பற்றிக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை அவர்கள் அனைவரும் கூடிப் பேசி சொல்லுமாறு கூறுகிறார். இது ஒரு கொலை சம்பந்தப்பட்டது என்றும், அதேபோல ஒருவனின் வாழக்கை பற்றியது என்றும் கூறும் அவர், சரியான காரணங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என ஒரு அறைக்கு அனுப்பி விடுகிறார். உள்ளே சென்றதும், அனைவரும் இருக்கையில் அமர்ந்து, வழக்கைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தச் சிறுவன், "குற்றம் செய்தவனா, இல்லையா" என்பதைத் ...

வயிற்றுப் பசி

பசி பொறுக்காமல் நீங்கள் திருடியது உண்டா? பசி தாங்காமல் குப்பையில் இருந்து கிடைத்ததை உண்டு வாழ்ந்தது உண்டா? ஒருவேளை சோற்றுக்காக காத்துக் கிடந்தது உண்டா? அ.முத்துலிங்கம் அவர்களின் இந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன். புளிக்கவைத்த அப்பம் கதையில் இருந்து சில வரிகள்: "இரவு பகலாக எங்களை விரட்டியது பசிதான். இந்த நாட்களில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாங்கள் ஒளித்து வாழ்ந்த காட்டில் ஒரு தேன்சிட்டும் வசித்தது. சாம்பல் வண்ணத்தில், மென்சிவப்பு தொண்டை கொண்டது. அதன் அலகு அதன் உடம்பிலும் நீளமாக இருக்கும். எந்நேரமும் வேகமாக சிறகசைத்து பறந்து தேன் குடிக்கும். ஒரு நாளைக்கு அதன் எடையளவு தேனை உண்டே ஆகவேண்டும். அல்லது உயிர் தரிக்காது. ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் அது பறந்து தேடுவதைப் பார்க்க எனக்கு திகிலாக இருக்கும். அதன் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் பாடுபட்டது. எங்களில் யார் முதல் இறக்கக்கூடும் என நினைப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் அது உயிருடன் இருக்கிறதா என்று பார்ப்பேன். நான் முதலில் இறந்து அது என் உடலை பார்ப்பத...

நிலம்

Image
எவ்வளவோ மல்லுக்கட்டிப் பார்த்தாச்சு இந்த முக்கால் ஏக்கர் நெலத்தோட ஒரு வருசம் வெள்ளாமை வருது அடுத்த வருசம் நட்டம் இப்படித்தான் ரொம்ப வருசம் பொழப்பு ஓடுது. ரொம்ப வருசமா ஊட்ல சோறு, துணிமணி எல்லாம் அளவோடுதான். பாட்டன் வெச்சுட்டுப் போன சொத்து ரோட்டுக்குப் பக்கமா இருந்தது நல்லதாப் போச்சு.. பிளாட் போட வித்தாச்சு போன மாசம்.. நெலத்த வித்து வந்த காசு தர்ற வட்டில இப்போ மூணு வேளையும் சுடு சோறுதான் ஊட்ல.!

அசடன் (இடியட்) நாவல்

Image
பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இடியட் நாவலை, எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள் மொழிபெயர்த்து, மதுரை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. முன் வெளியீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்த எனக்கு உடுமலை.காம் வழியாக இந்தப் புத்தகம் போன வாரம் என் கைக்கு கிடைத்தது. எம்.ஏ. சுசீலா அவர்களின் முந்தைய மொழிபெயர்ப்பான, குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றிய எனது பதிவை இந்தத் தளத்தில் எழுதி இருந்தேன். அந்தப் பதிவை, அசடன் நாவலின் பின் பகுதியில் அச்சிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனது எழுத்தை அச்சில் பார்ப்பது இதுவே முதல் முறை, அதுவும் எனக்குத் தெரியாமலே. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தகம் என் கைக்கு கிடைக்கும் முன்னர், புத்தகத்தில் எனது பதிவு வெளியான செய்தியைத் தெரிவித்து, வாழ்த்திய சஹிதா அக்காவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். சுசீலா அம்மாவுக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள். அசடன் நாவலைப் படிக்கத் தொடங்கி, நூறு பக்கங்களை கடந்து விட்டேன். முழுவதும் படித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அசடன் நாவலைப் பற்றிய ஜெயமோகன் அவர்களின் கட்டுரைகள். அசடனும் ஞானியும் அசடன் அசடன் நாவலைப் பற்றி...

பூமணி - விருது விழா

Image
இந்த வருடத்தின் 'விஷ்ணுபுரம்' விருது எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு, சென்ற ஞாயிறு அன்று கோவையில் வழங்கப்பட்டது. கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது 'இப்படி எழுதி இருக்குலாம்' என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் 'அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்'. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள். நிகழ்ச்சியை 'காக்கைச் சிறகினிலே' பாடலோடு ஒரு சிறு பெண் ஆரம்பித்து வைத்தார். எப்பொழுதும் நான் ரசிக்கும் பாட்டு, அழகாக பாடி விழாவைத் தொடங்கி வைத்த அப்பெண்ணுக்கு எனது வாழத்துக்கள். கோவை ஞானி அவர்கள் விழாத் தலைமை உரையாற்றினார். பூமணிக்கும், அவருக்கும் உள்ள நட்பையும், பூமணி அவர்கள் எழுதி வெளியாகப் போகும், 'அஞ்ஞாடி' நாவலைப் பற்றி குறிப்பிட்டார். இயக்குனர் இமையம் பாரதிராஜாவை பேச அழைத்த செல்வேந்திரன், பூமணி அவர்களின் நாவல் வெளியான வருடங்களில், பாரதிராஜா அவர்களின் படங்கள் வெளிவந்ததை சுட்டிக் காட்டி, இதற்க...

குறும்படம் - LOVEFIELD

Image