Posts

நூலகம் தேவையா?

Image
நூலகம் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் என்றுதான் நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அது பொழுது போக்கு இடம் இல்லை, அறிவு பொதிந்து கிடக்கும் இடம் என்பதை ஆள்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?. நூலகம் தேவையா என்று கேட்டால், தேவை என்பது தான் என் நிலைப்பாடு. மருத்துவமனைகள் முக்கியமும் கூட, ஆனால் பரந்து கிடக்கும் சென்னை மாநகரில் அதற்கு ஓரிடம் கூடவா சிக்கவில்லை. போன அரசு கட்டிய நூலகம் என்பதற்காக, நூலகத்தை இடம் மாற்றும் முடிவு சரியானதல்ல. இந்த நூலகத்தை விட, பெரிய நூலகம் மற்றும் வசதிகள் கொண்ட ஓர் இடத்துக்கு மாற்றினால் பரவாயில்லை. மருத்துவமனையாகவே மாற்றினாலும், அதற்கு தகுந்தது போல இருக்குமா எனத் தெரியவில்லை. புதிதாக கட்டும்பொழுது தேவைகளை அறிந்து கட்ட முடியும். எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்? எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

அரசுப் பள்ளிகளில் ஓர் ஆச்சரியப் பள்ளி

Image
மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, ராமம்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. பிராங்க்ளின் என்பவர் பற்றி புதிய தலைமுறை வார இதழ், ஈரோடு கதிர் அவர்களின் வலைத் தளம் மற்றும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு என பல முறை அந்தப் பள்ளியை பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் நேரில் செல்ல முடியவில்லை. போன சனிக்கிழமை அன்று, சாமக்கோடாங்கி பிரகாஷ் தான் அங்கு செல்லவிருப்பதால், 'வருகிறீர்களா' என்று கேட்டார். என்னால் அன்றும் செல்ல இயலவில்லை. நண்பன் கமலக்கண்ணன் செல்வதாக கூறினான். நண்பர்கள் அங்கு சென்று வந்ததை பிரகாஷ் தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார். ஒரு அரசாங்கம் செய்ய முடியாத ஒரு செயலை, அந்த ஊர் மக்களும் அந்த ஆசிரியரும் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கங்கள். திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு நல்லார் ஒருவர் பள்ளியின் வலைத்தளம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும் இந்நாட்டு மன்னர்களாய் வீதிக்கு கவுன்சிலர் வார்டுக்கு மெம்பெர் நகரத்துக்கு தலைவர் மாநகரத்துக்கு மேயர் தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க ஓட்டுப் போட்டவன் ஓட்டுப் போட்ட தினம் மட்டும் மன்னன்.

காப்பாத்திக்கோ

Image
கோவிலில் 'பையனக் காப்பாத்து' 'குழந்தைகளக் காப்பாத்து' என்று பாட்டி வேண்டிக் கொண்டிருக்க, குழந்தையோ கடவுளைப் பார்த்து 'உன்னையக் காப்பாத்திக்கோ' எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. (மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)

நட்பின் இலக்கணம்

Image
நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ============== அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக் கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும் மையன் மாலையாங் கையறு பிணையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை எனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே. -- பிசிராந்தையார் பொருள்: ======== அன்னச் சேவலே, அன்னச் சேவலே போரில் வென்று, யானை மீதேறி ஊர்க்கோலம் வரும் மன்னனின் முகம்போல மலைமடிப்பில் முழுமதி ஒளிரும் இந்த அழகிய இரவில் நான் மட்டும் துயருற்று இருக்கிறேன். நீ குமரிக் கடலில் இருந்து அயிரை பிடித்து உண்டு வடக்குமல...

பட்டு, மயில் மற்றும் ஏற்காடு

Image
பட்டாம் பூச்சி தவிர அனைத்து படங்களும் ஏற்காட்டில் எடுத்தவை. பட்டாம் பூச்சியை படம் பிடித்தது வீட்டில். (படங்களை கிளிக் செய்து பார்க்கவும்)

எனது டைரியிலிருந்து - 4

ஈரம் படிந்த வீடு ============== எப்படி விடுபட்டேன்.. நான் மட்டும்! ஒரு சொல், ஒரு ஜாடை ஒரு முகக்குறி காட்டியிருந்தால் அந்த இரவில் நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு.. தொப்பூழ் கொடி சுவாசம் தந்த தாயே நீ மாரடைத்து இறந்த அந்த சுவாச கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா தகர மயானம் முன் குவிந்த விராட்டிப் படுக்கையில் நீ இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல் மூத்தவனுக்கு குறி. அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த உன் வலது கரத்தில் குறடு நுழைத்து வெட்டியா வளையலோ அடுத்தவனுக்கு. மகளே உனக்கு என்னம்மா வேண்டுமென்ற அப்பாவிடம் கொடிக்கம்பியில் காயும் உன் நைந்த உள் பாவாடை காட்டி அழுகிறேன் பெருங்குரலில்.. - பா. சத்தியமோகன் (ஆனந்த விகடன்)