Posts

ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும் இந்நாட்டு மன்னர்களாய் வீதிக்கு கவுன்சிலர் வார்டுக்கு மெம்பெர் நகரத்துக்கு தலைவர் மாநகரத்துக்கு மேயர் தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க ஓட்டுப் போட்டவன் ஓட்டுப் போட்ட தினம் மட்டும் மன்னன்.

காப்பாத்திக்கோ

Image
கோவிலில் 'பையனக் காப்பாத்து' 'குழந்தைகளக் காப்பாத்து' என்று பாட்டி வேண்டிக் கொண்டிருக்க, குழந்தையோ கடவுளைப் பார்த்து 'உன்னையக் காப்பாத்திக்கோ' எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. (மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)

நட்பின் இலக்கணம்

Image
நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ============== அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக் கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும் மையன் மாலையாங் கையறு பிணையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை எனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே. -- பிசிராந்தையார் பொருள்: ======== அன்னச் சேவலே, அன்னச் சேவலே போரில் வென்று, யானை மீதேறி ஊர்க்கோலம் வரும் மன்னனின் முகம்போல மலைமடிப்பில் முழுமதி ஒளிரும் இந்த அழகிய இரவில் நான் மட்டும் துயருற்று இருக்கிறேன். நீ குமரிக் கடலில் இருந்து அயிரை பிடித்து உண்டு வடக்குமல...

பட்டு, மயில் மற்றும் ஏற்காடு

Image
பட்டாம் பூச்சி தவிர அனைத்து படங்களும் ஏற்காட்டில் எடுத்தவை. பட்டாம் பூச்சியை படம் பிடித்தது வீட்டில். (படங்களை கிளிக் செய்து பார்க்கவும்)

எனது டைரியிலிருந்து - 4

ஈரம் படிந்த வீடு ============== எப்படி விடுபட்டேன்.. நான் மட்டும்! ஒரு சொல், ஒரு ஜாடை ஒரு முகக்குறி காட்டியிருந்தால் அந்த இரவில் நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு.. தொப்பூழ் கொடி சுவாசம் தந்த தாயே நீ மாரடைத்து இறந்த அந்த சுவாச கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா தகர மயானம் முன் குவிந்த விராட்டிப் படுக்கையில் நீ இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல் மூத்தவனுக்கு குறி. அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த உன் வலது கரத்தில் குறடு நுழைத்து வெட்டியா வளையலோ அடுத்தவனுக்கு. மகளே உனக்கு என்னம்மா வேண்டுமென்ற அப்பாவிடம் கொடிக்கம்பியில் காயும் உன் நைந்த உள் பாவாடை காட்டி அழுகிறேன் பெருங்குரலில்.. - பா. சத்தியமோகன் (ஆனந்த விகடன்)

இரு கப் டீ

போன வாரம் புதிய தலைமுறை இதழில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதும் 'மனிதர் தேவர் நரகர்' தொடரில் தனது நண்பர் தோழர் சோமு என்பவரைப் பற்றி எழுதியிருந்தார். கல்லூரி வேலை, பொதுப் பணித் துறை வேலை என தான் வேலை செய்த இடங்களில் மலிந்து கிடந்த ஊழல்களை வெறுத்து வெளியே வந்தவர் அவர். ஒரு நாள் சோமு மற்றும் சோமுவின் மனைவி ஆகியோரிடம் பிரபஞ்சன் பேசியிருந்ததை கட்டுரையின் ஓரிடத்தில் பகிர்ந்திருந்தார். ======================= 'நான் சொல்றேன் காம்ரேட். நான் சினேகத்தைக் கேட்டேன். இவர், ஒரு டீக்குத்தான் என்னிடம் காசு இருக்கு. உங்ககிட்ட சில்லறை இருந்தா வாங்க. டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னார்' 'சாப்பிட்டீங்களா' ' எங்களுக்கு முன்னால இரு கப் டீ. எங்க இரண்டு பேரின் வாழ்க்கையும் போல. அதை எப்படியும் குடிக்கலாம். ஆடிக்கொண்டோ, பாடிக்கொண்டோ குடிக்கலாம். ஆனால் டீ சிந்திடக்கூடாது. ஏன்னா, மறுமுறை டீ கிடைக்காது . அப்புறம் மூன்று வருசத்துக்குப் பிறகுதான், என் காதலை அவர்ட்ட சொன்னேன்' ======================= நாம் பார்க்க அல்லது படிக்கத் தவறிய மனிதர்கள் நம் பக்கத்து வீடுகளில் கூட இருக்...

சிக்னல்

Image
சிக்னல் சிக்னலில் நகர்ந்து கொண்டிருக்கின்றன வாகனங்கள் கைக்குட்டை, சாக்ஸ், பூ மற்றும் இன்னபிற விற்கும் சிறுவர்களின் கல்வியும் அவர்களின் பால்ய சந்தோசங்களும் அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து. நகராமல் அப்படியே இருக்கிறது. *************** ஆம்புலன்ஸ் மனிதம் மறந்து விட்டதன் அடையாளமாய் அவசர வண்டிக்கு வழிவிடச் சொல்லி காவலர் ஓடிவருகிறார். *************** சுதந்திரம் ஊரெல்லாம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அன்றும் வாட்ச்மேன் தாத்தா கொடியேற்றி காலையில் கொடுத்த சாக்லேட்டோடு வேலைக்கு வந்தார். படம்: இணையத்தில் இருந்து - நன்றி.