Posts

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4 இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள். இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர். இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம். செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது. இதில் எது உண்மை.. ?? எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக...

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம் எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்) துல்லிய நீர்ப்பரப்பில் துறவிபோல் வந்தமர்ந்து மெல்லிய தன் உடலை மேற்பரப்பில் பிரதியாக்கி தண்ணீரில் தவம் செய்யும்.. பார்ப்பதற்கு பரவசம்தான் மீனுக்குத்தானே தெரியும் கொக்கின் குரூரம். ============================================ துபாய் இ. இசாக் (ஆனந்த விகடன்) கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சி எனக்குள். ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளோடு காத்திருக்கிறேன் நெடுநேரமாக. வீடு நுழைந்த முகம் கண்டு தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்கையில் 'யாரும்மா.. இவங்க?' என்கிறாள் மழலை மொழியில் என் மகள். ============================================ வதை ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்) திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கையில்.. சின்ன வயதில் வீட்டுத் தொழுவத்தில் தெருநாய் ஈன்ற குட்டிகளை கோணிப்பையில் திணித்து ஊருக்கு வெளியே கள்ளிக்காட்டில் கொண்டுபோய் விட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ============================================ கவனம் சே. சதாசிவம் (ஆனந்த விகடன்) நகரும் தார்ச்சாலை இருபக்க மரங்கள் பசுமையான வயல்வெளிகள் முப்பரி...

என் கேமராவின் சிறைக்குள்..

Image
நாங்க எப்பவுமே அழகுதான் ( இடம் : மேட்டுப்பாளையம் ) எங்களப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ரசிக்கிற உலகம் ( இடம் : மேட்டுப்பாளையம் ) நாங்க இருக்கிற இடம் எப்பவும் இப்படி பசுமையா இருக்கும் ( இடம் : ஏற்காடு ) நாங்களும் பசுமைக்கு காரணம் ( இடம் : ஏற்காடு ) எவ்வ்ளோ உசரம் !! (இடம்: அவினாசி பெரிய கோவில்) வருசம் ஒரு தடவதான் இப்படி. (இடம்: அவினாசி தெப்ப தேர் திருவிழா) நாங்க எப்பவும் இப்படித்தான் , சிரிச்சுக்கிட்டே இருப்போம் . படங்கள் அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.

ஜோசியம்

Image
" எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க " எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர் . அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது . ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும் . சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம் . கணீரென்ற குரல் , வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது . கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார் . நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான் . பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும் . மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார் . அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் . பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள் . ஒரு சிலர் , பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள் . எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள் . உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி , அவரை ...

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 4

Image
அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! படம் : இணையத்தில் இருந்து . நன்றி

எனது டைரியிலிருந்து - 2

குறையொன்றுமில்லை சு.வெங்குட்டுவன் (ஆனந்த விகடன்) வழக்கம்போல் இம்முறையும் வானம் பொய்த்திருக்கும் இருக்கும் தண்ணிக்கு வெச்சுள்ள கத்தரியில் இலைச்சுருட்டை விழுந்திருக்கும் நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு தபால்கார்டில் வந்து சேரும் காதுகுத்தும் பிள்ளைக்கு தோடு போடவேண்டுமென இளைய தங்கை சொல்லிப்போவாள் முகங்கண்ட மறுகணமே அம்மாவென குரலெழுப்பும் காளைகளை விற்றுவிட்டு ஊர் திரும்புவாய் நீ விரும்பிய பெண் தான் விரும்பும் புருசனுடன் பஸ் ஸ்டாண்டில் எதிர்ப்படுவாள் திரும்பி நிற்கும் உன்னிடத்தே வலிய வந்து உரையாடி சௌக்கியமா எனக் கேட்பாள் நல்ல சௌக்கியம் என்று சொல். ****************************** ****************************** ********** பாலபாரதி ஆனந்த விகடன் ஜிலீர் ஆசிரியராகும் கனவு உடைந்து நொறுங்கியது அரசு மது பாட்டில்களை அடுக்கி வைக்கும் வேலையில்... ****************************** ****************************** ********** மறதி கற்புக்கரசி கண்ணகி, சீதை நளாயினி பெயரெல்லாம் நினைவில் நிற்கிறது கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியை பெயர்தான் மறந்துவிட்டது ****************************** ****************************** ****...

ஓர் இளம் விஞ்ஞானி

Image
போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம். கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி. நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான். (தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்) "இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள...