Posts

எப்படி சொல்வது...

Image
எல்லாவற்றையும் சொல்லி விட முடிகின்றது.. சொந்தங்கள் ஆசையாக கட்டிய வீடு பிறந்த மண் வெளியில் வைத்திருந்த ரோஜா செடி கருப்பு பூனை குட்டி சேகரித்த புத்தகங்கள் குமிழ் போட்ட கதவு என எல்லாமே வந்து போகும் நடுநிசியில் அயல் நாட்டுக்கு வந்து அகதியாய் தவிப்பதை எப்படி சொல்வது ? "ஏப்பா.. இங்கே வந்தோம்" என கேட்கும் மகளிடம்....... (புகைப்படம் என் கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் எடுத்தது)

அய்யோ.. ஆப்பிள்... !!

Image
ஆப்பிள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது நிறைய சத்துக்கள் நிறைந்த பழம். எல்லா பழ கடைகளிலும் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பார்த்தாலே மின்னுகிறது. விலையை கேட்டால் நூறு ரூபாய்க்கு மேலே சொல்லுகிறார்கள். சரி, அப்போ நமக்கு எங்கே தெரியுது, 'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்று. வாங்கி கொண்டு வந்து கழுவி அப்படியே சாப்பிடுகிறோம், நல்ல பெரிய கடையில் வாங்கியது வேறு !. நானும் இத்தனை நாளாக இப்படித்தான் அப்படியே தோலோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். தோலில்தான் சத்து அதிகம் அல்லவா !! உமர் பாருக் என்பவர் எழுதிய "உடலின் மொழி" என்கிற புத்தகத்தில், ஆப்பிள் கெடாமல் இருக்க சில ராசயனங்களில் முக்கி எடுத்தும், மின்னுவதற்கு மெழுகும் பூசுகிறார்கள் என்று சொல்லி இருந்தார். வீட்டில் இருந்த ஒரு ஆப்பிள் மின்னுகிறதே என நினைத்து கொண்டு, கத்தி எடுத்து சுரண்டினேன், வந்தது தோல் அல்ல.. மெழுகு !! அது மெழுகா அல்லது வேறு எதாவது பொருளா எனத் தெரியவில்லை.. ஆனால் அழுக்கு போல வந்து கொண்டே இருந்தது.. வெள்ளையாக... அப்பொழுது போட்டோவும் எடுத்தேன்... நீங்களும் பாருங்கள்.. உடல் நலத்துக்காக சாப்பிடும் பழங்களிலும் இவ...

அவினாசி - தேர் திருவிழா

Image

ரெயினீஸ் ஐயர் தெரு

நீங்கள் குடியிருக்கும் தெருவில் எத்தனை பேர் உங்களுக்கு பழக்கம் ?. எல்லாரிடமும் நிறைய பழக்கம் வேண்டாம் , ஒரு புன்னகையை பகிர நேரம் இருக்கிறதா ?. எதிர் வீடு மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் தெரியுமா ?. நேரம் இல்லாமை ஒரு புறம் இருந்தாலும் , நாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் இருந்தது போல இருக்க முடிவதில்லை . டிவி , சீரியல் என எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அவர்களுக்கு நேரம் போவது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம்தான் . எங்கள் கிராமத்தில் மழை பெய்தால் வீதிக்கு புது மண் வரும் , அந்த மழை ஈரத்து மண்ணில் மெத்து மெத்தென பாதம் படிய நடப்பது ஒரு சுகம் . சிமெண்டும் , தாரும் கலந்த இந்த பெரு நகரங்களில் மழை பெய்தால் சாக்கடை மண்ணும் , பாலிதீன் பைகளும் தான் தெருவில் விரவி இருக்கின்றன . வண்ணநிலவன் அவர்கள் எழுதியுள்ள ' ரெயினீஸ் ஐயர் தெரு ' நாவலில் வரும் தெருவில் மொத்தம் ஆறே வீடுகள் தான் இருக்கின்றன . ஒவ்வொரு வீட்டிலும் வித விதமான மனிதர்கள் , அவர்களின் ஆசைகள் , ஏக்கங்கள் , நோய்கள் , துக்கங்கள் ...

நான் கிளிக்கிய போட்டோஸ்...

Image
அவினாசி - சிவளாபுரி அம்மன் கோவில்

தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

ப . சிங்காரம் அவர்கள் எழுதிய " புயலிலே ஒரு தோணி " நாவலை படித்து முடித்து விட்டு , இப்பொழுது திரும்பவும் வாசிக்க தொடங்கி உள்ளேன் . நாவலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு கவிதைக்கு உரிய அழகுடன் உள்ளன . இப்பொழுது நாவல் முழுவதும் நான் சொல்ல போவதில்லை . எனக்கு பிடித்த சில பத்திகளையும் , சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . ஓர் உரையாடலில் ; " எனது நண்பர் ஒரு கதை சொன்னார் . வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி . நீ அதை தெரிந்து கொள்வது அவசியம் . சுருக்கமாக சொல்கிறேன் . எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்கும் முன் , மணியகாரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கி கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது . மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று , ' விரசாய் அடிச்சு விடுங்கையா , வேலைக்கு போகணும் , நேரமாகுது ' என்று முறையிட்டு , முதுகை திருப்பி காட்டி கொண்டிருந்தனர் . சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக , அவரவர் சக்தி...

அரசு இயந்திரங்கள்

பிறப்பு சான்றிதழ் , சாதி சான்றிதழ் , ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை . நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன . ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது . அங்கே நடந்தவை இங்கு : - நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை . நேரம் 10:15 - இன்னொரு அலுவலர் வந்தார் . இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார் . - ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க , ' எத்தன தடவ சொல்லுறது ... இன்னும் ஒரு வாரம் கழித்து வா .. ' என்றார் . - ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார் . சரி , நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன் . ஒரு பத்து நிமிடம் கழித்து , அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார் . அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு , கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும...