Posts

அரசு இயந்திரங்கள்

பிறப்பு சான்றிதழ் , சாதி சான்றிதழ் , ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை . நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன . ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது . அங்கே நடந்தவை இங்கு : - நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை . நேரம் 10:15 - இன்னொரு அலுவலர் வந்தார் . இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார் . - ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க , ' எத்தன தடவ சொல்லுறது ... இன்னும் ஒரு வாரம் கழித்து வா .. ' என்றார் . - ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார் . சரி , நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன் . ஒரு பத்து நிமிடம் கழித்து , அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார் . அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு , கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும...

தண்ணீர்.. தண்ணீர்..

தண்ணீர்.. இது இல்லையென்றால் உயிர்களின் வாழ்வு அவ்வளவுதான். திருவள்ளுவர் கூட மழை இல்லையெனில், பசும் புல் கூட தலை நீட்டலரிது என்கிறார். காடுகளை அழித்து, மரங்களை வெட்டி சாம்பல் ஆக்கிவிட்டோம். வெய்யில் எரிக்கிறது என்று புலம்புகிறோம். இளநீர் குடித்தும், தர்பூசணி சாப்பிட்டும் தாகம் தணிக்கிறோம். காட்டில் உள்ள விலங்குகள் என்ன செய்யும். ஒருவேளை கால போக்கில் கடல் நீரில் இருந்து பெற்று கொள்வீர்கள். நம் நாட்டு விலங்குகள் தண்ணி இல்லாமல் மடிய வேண்டுமா?. வெளிநாட்டு தோழி பேசும்பொழுது சொன்னது "எனக்கு இந்தியாவை பிடிக்கும். அங்குதான் யானைகளும், குரங்குகளும் நிறைய உள்ளன" என்றாள். அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே ?. அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது. நம்மால் முடிந்த சிலவற்றை செய்யலாம். - முடிந்த அளவு நீரை குறைவாக பயன்படுத்துங்கள். முழுவதும் குழாயை திறந்து விட்டு வீணாவதை தடுங்கள். - குழாயில் நீர் வீணாவது தெரிந்தால் நன்றாக அடைத்து விடுங்கள். - தோட்டம் செடிக...

சாமியாரும்.. விடியோவும்...

மற்றவர்களுக்கு தெரியாமல் தப்பு செய்து , அது வெளியே தெரிய வந்தால் அவன் குற்றவாளி . அப்படி அந்த வீடியோ வெளியிடபடாமல் இருந்திருந்தால் ... வழக்கம் போல நித்தி ஆசி அளித்து கொண்டும் , நோய்களை தீர்த்து கொண்டும் இருந்திருப்பான் ... கும்ப மேளாவில் எல்லாரும் அவன் காலடியில் குப்புற விழுந்து கிடப்பார்கள் ... பணம் கொட்டி கொண்டு இருந்திருக்கும் ... எல்லாம் மாறி விட்டது ஒரு இரவில் . அன்று வீட்டுக்கு போனதும் சொன்னார்கள் . நித்தியானந்தம் மாட்டி கொண்டார் , மற்ற சாமியார்கள் எப்பொழுது என தெரியவில்லை என்றார்கள் . முதல் நாள் அளவாக காட்டியவர்கள் , அடுத்த நாள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை .. முழுவதும் ஒளி ஒலியுடன் பரப்பினார்கள் .. அதுவும் முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை ... பெண்கள் குழந்தைகளுடன் இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பாவம் . சரி இப்படியாவது பாலியல் கல்வி வளரட்டும் என நினைத்தார்களா ?. பாலியல் கல்வி தமிழ் பண்பாட்டுக்கு இழுக்கு எனக் கூறும் வேதாந்திகள் , இந்த காட்சிகளும் தமிழ் பண்பாட்டுக்கு இழுக்கு என்பதை உணரவில்லையா ?....

ஓர் பிரார்த்தனை..

" ஆண்டவா ! என்னால் எதையெல்லாம் மாற்ற முடியுமோ, அவற்றை மாற்ற கூடிய வல்லமையை எனக்கு கொடு. என்னால் எவற்றை எல்லாம் மாற்ற முடியாதோ அவற்றை அறிந்து கொள்கிற சக்தியை எனக்கு கொடு. என்னால் மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை - இவை இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்கிற பக்குவத்தை எனக்கு கொடு. " - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகத்திலிருந்து...

ஜெயமோகன் - கோவை வாசகர் சந்திப்பு

Image
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடந்த 23/01/2010 அன்று கோவையில் நடைபெற்ற அவருடைய வாசகர் சந்திப்புக்கு வந்திருந்தார். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனை தவிர தெரிந்த முகம் எதுவும் இல்லை. ஆதலால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு கவனித்தேன். எதாவது பிரச்சினை என்றால் ஓடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் ஓரமான இருக்கை. சிறிது நேரம் கழித்து என்னை சுற்றியும் இருக்கையை போட்டு விட்டார்கள். கூட்டம் முடியாமல் நம்மை வெளியே விட மாட்டார்கள் என மனதிற்குள் பயம். நாம்தான் முகத்தில் எதையும் காட்டி கொள்ள மாட்டோமே !. சிறிது நேரம் கழித்து நாஞ்சில், ஜெயமோகன் என மேடைக்கு வந்தார்கள். வரவேற்பு முடிந்தவுடன், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்வி கேட்டவர்கள் கேட்ட தொனியை பார்த்த பொழுது, 'ரூம் போட்டு யோசிச்சு இருப்பங்களோ' என தோன்றியது. இந்த கூட்டத்தில்தான் முதன் முதலாக கோவை ஞானி அவர்களை பார்த்தேன். இதுவரைக்கும் அவரை நான் பார்த்ததில்லை. ஒரு சில கேள்விகளின் பதில்கள் புரிந்தன. சில கேள்விகளும், பதில்களும் புரியவில்லை. இது எனக்கு மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். மார்க்சியம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. நெறைய படிக்க வ...

கூண்டுக் கிளி

கரும் பச்சை அடர்ந்த மதில்சுவரின் கடைசியில் கூண்டுக் கிளியோடிருந்தார் ஜோஸ்யர்... வெளிவந்த கிளி எனக்கு எடுத்த சீட்டில் கண்ணனும் ராதையும்... ஜோஸ்யரின் பேச்சில் நானும் கிளியும் மயங்கி இருந்தோம்.. கேட்டுவிட்டு நடக்கலானோம் கிளி உள்ளேயும் நான் வெளியேயும் கண்ணன்களையும், ராதைகளையும் தேடி... நமக்கு கூட வாய்க்க கூடும்.. கூண்டுக் கிளிக்கு ?

நான் கிளிக்கிய போட்டோஸ்...

Image