Thursday, April 23, 2015

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கைக்குத்தல் அரிசி !

நாம் வழக்கமாக கடைகளில் வாங்கும் வெள்ளை நிற அரிசி நன்றாக பாலிஷ் செய்யப்பட்டு தீட்டப்பட்ட அரிசி ஆகும். அரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தீட்டப்பட்டு, பளீரென்ற வெண்மை நிறத்தில் நாம் உண்பது வெறும் மாவுப்பொருளை மட்டுமே. நாம் மெல்லவும் மென்மையாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட நேர்கிறது. மேலும் உடம்பில் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது தீட்டப்பட்ட அரிசி(Polished Rice).



தீட்டப்படாத அரிசியே கைக்குத்தல் அரிசி. கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து, பி விட்டமின்கள், செலனியம், மாங்கனீஸ், உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன. அரிசியின் முனைகளில் இரண்டு சக்தி வாய்ந்த டையாஸ்டேஸ் மற்றும் பெப்டேஸ் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இருக்காது.

கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம். அதைச் சமைத்து உண்ணும் பொழுது இயற்கையாகவே, நாம் அதை நன்றாக மென்றுதான் உண்ண முடியும். எனவே, எளிதில் உமிழ்நீருடன் கலந்து செரிமானம் ஆகும்.



* ஆரோக்கியமான எலும்பு மற்றும் நரம்புமண்டலத்தை உருவாக்கும் 
* நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் 
* மலச்சிக்கலைப் போக்கும் 
* தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது 
* உடல் எடையைப் பராமரிக்கிறது 
* இதய நோய் அபாயம் குறைகிறது
* ஆஸ்துமா மற்றும் பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்கிறது

1 comment:

  1. வணக்கம்
    யாவரும்அறிய வேண்டிய குறிப்பு பகிர்வுக்குநன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete