Wednesday, February 27, 2013

நமது மாணவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் 'நீயா, நானா' - மாணவர்கள் - களப் பணியாளர்கள் என்ற நிகழ்ச்சி பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய தளத்தில் (அசடுகளும் மகாஅசடுகளும்) எழுதியிருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். மாணவர்களைப் பார்த்து அவர்களின் சிரிப்பும், அந்தப் பார்வையும்..  இவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்ற பேச்சும்... . கொடுமை.

மாணவர்களுக்கு இந்தச் சமூகம் பற்றிய பிரக்ஞை இல்லை என்றால் அது யார் குற்றம்?

மாணவர்களுக்கு, இந்த உலகம் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால், நாம் அதற்காக என்ன முயற்சி செய்தோம்?.

அரசியலும், கல்வியும் பணத்தின் பிடியில் இருக்கும் போது, அதற்காக நாம் என்ன செய்தோம்?

நாம் என்ன கற்றுக் கொடுத்தோமோ, அது தானே இங்கே இருக்கிறது. அவர்களின் தடுமாற்றத்தைப் பார்த்து நாமே சிரிப்பது, அவர்கள் நமது அடுத்த தலைமுறை, நம் குழந்தைகள் என்பது நமக்குத் தெரியாமல் போனதேன்.

4 comments:

  1. ஒருப் பக்கச்சார்பான நிகழ்ச்சி, மாணவ சமூகம் அந்தளவு முட்டாள் இல்லை, ஒரு சில கல்லூரிகளில் இருந்து ஒரு சில பேக்குகளைக் காட்டி ஒட்டு மொத்த மாணவர் சமூகத்தை இழிவாக்கிய நீயா நானாவுக்கு எனது கண்டனங்கள். மாணவ சமூகத்தின் குறைகளுக்கு சமூகப் பொறுப்பற்ற சென்ற தலைமுறையே காரணம், அதனையும் தாண்டி பல புத்திமான்கள் இன்றைய மாணவர் சமூக்கத்தில் உள்ளனர் என்பதையும் மறக்கக் கூடாது.

    ReplyDelete
  2. இன்றைய கல்வி 'நல்ல தொழில்' என்பது அவர்களுக்கு தெரியாது போலே...

    அவர்கள் வெட்கி தலை குனிய வேண்டியது... ...ம்...என்னா அகம்பாவம்...!

    ReplyDelete
  3. @இக்பால் செல்வன்
    @திண்டுக்கல் தனபாலன்
    நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  4. தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

    ReplyDelete