Posts

பெண்ணும் எழுத்தும்

' தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன். ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை ' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்...

எனது டைரியிலிருந்து..

Image
ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை டைரியில் எழுதி வைத்திருந்தேன். அதிலும் ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் தான் அதிகம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்; இருந்தவை .. தொலைந்தவை .. - கல்யாண்ஜி (ஆனந்த விகடன்) கார்த்திகை ராத்திரி ஏற்றின கடைசி விளக்கை வைத்துத் திரும்புமுன் அணைந்து விடுகிறது முதல் விளக்குகளுள் ஒன்று. எரிகிறபோது பார்க்காமல் எப்போதுமே அணைந்த பிறகுதான் அதைச் சற்று அதிகம் பார்க்கிறோம். எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தைவிட அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக. ******************************** வலி - ஜி.ஆர்.விஜய் (ஆனந்த விகடன்) விழுங்கிய மீன் தொண்டையில் குத்துகையில் உணர்கிறேன் தூண்டிலின் ரணம். ******************************** வானம் மட்டும் இருக்கிறது - பா.சத்தியமோகன் (ஆ.வி. கற்றதும் பெற்றதும் பகுதியில் - சுஜாதா குறிப்பிட்டது) ஆமாம் ஆமாம் நீ பேசும் ஒவ்வொன்றும் வரிக்கு வரி நிஜம் முற்றுப்புள்ளி உள்ளிட்ட அனைத்தும் ஏற்கத் தயார் அனைத்துக்கும் ஆமாம். சங்கிலியால் கட்டப்பட்டது யானையென்றாலே தப்புதல் கடினமாச்சே சங்கிலியால் கட்டுண்ட டம்ளர் தப்பு...

டிப்ஸ்

Image
உணவகத்தில் உண்டு முடித்ததும் பில்லைக் கொண்டுவந்து வைத்து பணத்துக்கு காத்திருந்தான் சர்வர் 'பணம் நானே கொடுத்துக்கிறேன்' என எழுந்து திரும்பி நடந்த என் முதுகில் வழிந்து கொண்டிருக்கிறது முன்பின் தெரியாத அவனின் வன்மப் பார்வையும், கோபமும். படம் : இணையத்திலிருந்து , நன்றி .

அசடன் (இடியட்)

Image
பியாதோர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ள நாவலான 'இடியட்'டை பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த மாத இறுதி அல்லது வரும் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அறுநூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை, முன் வெளியீட்டுத் திட்ட விலையாக ரூபாய் முன்னூற்றி ஐம்பதுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம். இந்நாவல் பற்றி சுசீலா அவர்கள் தம் பதிவொன்றில் இப்படி கூறியுள்ளார்: மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு மனிதனை இனம் காண நேரும்போது ஏற்படும் கரைகாணா மானுட வேதனைகளையும்,உள்ளச் சிதைவுகளையும் இந்நாவலின் மூலம் கண்டடைய முனைந்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இப் புத்தகத்துக்கு முந்தைய மொழி பெயர்ப்பான குற்றமும் தண்டனையும் பற்றிய எனது பதிவு: குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) சுசீலா அவர்களின் பதிவு : அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம் இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு... புத்தகம் முன்பதிவு செய்ய: Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai. விலை;ரூ.600.00 முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00 கூரியர் செலவு;ரூ;75.00 ஏப்ரல்...

சார்லி சாப்ளின்

Image
இன்று Google-ன் முதல் பக்கத்தில், சாப்ளினின் பிறந்த தினத்தை நினைவு படுத்தியிருந்தார்கள். அவரவர் பிரச்சினைகளில் மூழ்கி விழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன கலைகள். காலங்கள் தாண்டியும் கலைகள் வாழ்வதற்கு கலைஞர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். மற்றவரைச் சிரிக்க வைத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு அவன் கோமாளி வேசம் உட்பட என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. தனது காயங்களை மறைத்து அல்லது மறந்து தான் அவர்கள் கலையை வெளிப்படுத்துகிறார்கள். காலங்கள் பல கடந்தும் நம்மை சிரிப்பில் ஆழ்த்தும் அந்த மகா கலைஞனை இந்நாளில் நினைவு கூறுவோம். அவரின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்: சிட்டி லைட்ஸ் சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times) தி சர்க்கஸ் (The Circus) ஒரு வீடியோ:

மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில் இப்படித்தான் இருந்தது மக்களால் மக்களுக்கு மக்களாட்சி.. ஒரு நாள் சாரை சாரையாக வந்தார்கள் வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை உங்கள் காலடியில் கிடப்பேன் என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள் வழக்கம் போல் ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள் வெற்றி பெற்றவர்கள் அவரவர் முடிந்ததை அவரவருக்குத் தேவையான வரை கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்.. நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள் தேர்தல் நாள் அறிவித்தவுடன் திரும்பவும் அந்த நாள் வந்தது இந்த தடவை குத்தகை யார் கைக்கு போகுமென்பது எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்... சொல்ல மறந்து விட்டேன் பாடப் புத்தகத்தில் இப்படித்தான் இருக்கிறது மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....

அன்னா ஹசாரே

Image
அரசியல்வாதிகளின் ஊழலைத் தடுக்க திரு. அன்னா ஹசாரே அவர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஊழல் பெருகி வரும் இந்தச் சூழலில் இவர்களைப் போன்றோரின் போராட்டங்கள் நமக்கு நிச்சயம் தேவை. காந்தியவாதியான இவர், "அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறியிருக்கிறார். அவருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம். நன்றி: தினமலர் செய்திகள் : ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய காந்தியவாதி : நாட்டுக்காக உயிர் விட தயார் என்கிறார் ஊழலை எதிர்க்கும் காந்தியவாதி உண்ணாவிரதத்திற்கு அபார ஆதரவு