மௌனியின் படைப்புகள் - புத்தகம் வாங்கி ஏறக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கும். இதற்கிடையில் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.
நேரடியான கதை சொல்லலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. குறைந்த கதைகளே எழுதியிருந்த போதிலும், புதுமைப்பித்தன் இவருடைய எழுத்துக்களைப் பாராட்டி இருக்கிறார்.
இரண்டு மூன்று முறை படித்த போதும், சில பத்திகள் ஒன்றும் புரியாமல் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். ஆனால், மற்ற நாவல்களைப் போல மௌனியின் எழுத்துக்களை அவ்வளவு எளிதாக கடந்து போக முடிவதில்லை. நினைவில் ஆழ்ந்து அப்படியே சில நாட்கள் தூங்கி இருக்கிறேன்.

சில வரிகளை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை. திரும்ப எத்தனை முறை படித்தாலும், புதியது போலவே இருக்கிறது.
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?
குடும்பம் ஒரு இயந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நின்று போவதில்லை. அதற்கு பிரதி பாகம் தானாகவே உருவாகி விடும்.
வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி.
போன்ற வாக்கியங்கள் கவித்துவம் மிக்கவை. அவரின் எழுத்துக்களில் சொல் புதிது, பொருள் புதிது. மீண்டும் படிக்க வேண்டும்.
அவரின் எழுத்துக்களை முழுதும் படிக்காமல், நானோவெனில்(!) இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
[நானோவெனில், அவனோவெனில் - என அவரின் கதைகளில் வருகிறது.]