Saturday, June 25, 2011

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4

இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள்.

இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர்.

இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள்

செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம்.
செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது.

இதில் எது உண்மை.. ??
எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது.


ஈரோடு மாவட்ட ஆட்சியர்

நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முட்டி மோதி, இரவு முழுவதும் காத்திருந்து அப்ளிகேசன் வாங்கி, எல்.கே.ஜி படிப்புக்கு முப்பது நாப்பது ஆயிரம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையை, அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அரசுப் பணிகளில் பணியாற்றும் பலரும் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொண்டிருக்க, தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த ஈரோடு கலெக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அரசுப் பள்ளிகளின் தரமும் நாம் அறிந்ததே. கலெக்டரின் குழந்தை தங்கள் பள்ளியில் படிக்கிறது என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் இனி தரமாகப் பாடம் நடத்துவார்கள். கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள் என எளிதாக கிடைக்கும். சத்துணவு தரமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போலதான் இயங்கும். என்ன செய்வது, நமக்கு என்ன ஒவ்வொரு ஊருக்கும் இந்த மாதிரி ஒரு கலெக்டரா இருக்கிறார்?.


6 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மக்கள் ரசனையை பிரதிபலிக்கும்ஊடகங்கள்....மக்களுக்கு உண்மையான அக்கறை வந்தால் ஊடகமும் திருந்தும் ..

    கச்சா எண்ணை தங்கவிலையோடு போட்டி போடுகிறது..

    அரசுபள்ளியில் ஆட்சித்தலைவர் புதல்வன்...இனியாவது ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவார்கள் என நம்புவோம்

    ReplyDelete
  3. வித்யாசமான பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. @பத்மநாபன்
    //மக்கள் ரசனையை பிரதிபலிக்கும்ஊடகங்கள்....மக்களுக்கு உண்மையான அக்கறை வந்தால் ஊடகமும் திருந்தும் ..//

    இதுவும் சரி என்றுதான் படுகிறது.. நாம் அதை நோக்கிப் போகா விட்டால் அவர்கள் ஏன் கூவி கூவி விக்க வேண்டும்..

    தங்கள் கருத்துக்கு நன்றிகள் அண்ணா..

    ReplyDelete