Monday, May 9, 2011

ஓர் இளம் விஞ்ஞானி

போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி.

நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான்.


(தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்)

"இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள மாசுவைக் குறைக்கலாம். புவி வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும். கார்பநேட்டர் என்பது கார்பன்-டை-ஆக்சிடை(CO2) சோடியம் ஹைற்றாக்சைடின் (NaOH) உதவியுடன் சோடியம்-பை-கார்பனேட் (NaCO3)ஆக மாற்றும் கருவியாகும்.

இதன் அமைப்பு ஆங்கில எழுத்தாகிய T -ஐ தலைகீழாக கவிழ்த்த வடிவமாகும். இதன் மேல் உள்ள புனல் மூலம் NaoH-ஐ ஊற்றும்போது, CO2-வை கரைத்து NaCO3 ஆக மாறுகிறது. இதனை நாம் குளிர்வித்து வெளிக்காற்றின் மூலம் CO2 ஐ தனியாக பிரித்து -72 C ல் குளிர்ரூட்டும் போது நமக்கு உலர் பனிக்கட்டி கிடைக்கிறது. இதனை நாம் கடலுக்கு அடியில் செலுத்த வேண்டும். இது கடல் நீரில் கரையாது.

இதன் மூலம் காற்று மாசுபடுதல் குறைகிறது. புவி வெப்ப மயமாதல் குறைகிறது." என்று கூறி முடித்தான். இந்த மாடலுக்கு, ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் விழாவில் "பெஸ்ட் மாடல்" விருது கிடைத்திருப்பதாக கூறினான்.



எங்களுக்கு மிகவும் ஆச்சரியம், இவ்வளவு சிறு வயதில் எப்படியெல்லாம் அறிவியலைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று. தம்பி ஹரிஹரனும் அவ்வபொழுது அவனுக்கு உதவி செய்கிறான் என்றும் கூறினான். இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பாலாஜியின் அப்பாவும், அம்மாவும் கூறும்பொழுது "எங்களுக்கு இவர்கள் சொல்வது, செய்வது ஒன்றும் புரிவதில்லை. அதைப் புரிந்து கொள்ளுமளவு கல்வியும் எங்களுக்கு இல்லை. நிறைய பரிசும், சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறான். இந்த நெசவுத் தொழிலை வைத்துக்கொண்டு இவனுக்கு தேவைப்படும் கருவிகளையோ, அல்லது மற்ற புத்தகங்களையோ எங்கு கிடைக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. சில சமயங்களில், ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் இவனே நெட்டில் தேடி விசயங்களைப் புரிந்து கொள்வான். இப்ப கூடப் பாருங்க, சோலார் கார் மாடல் செய்ய வேண்டும் என்கிறான். அந்தப் பொருட்களை எல்லாம் எங்கு வாங்குவது, அதற்குத் தேவையான பணம் என நிறைய பிரச்சினைகள்" என்றார்கள்.

"என்ன பாலாஜி, சோலார் மாடல் செய்ய போறாயா?" என்றோம்.

"ஆமாங்க சார்" என்றான்.

"சரி. .அதுக்கு என்ன என்ன வேணும்னு தெரியுமா.. ?" என்று கேட்டதும், பாலாஜியின் அம்மா "அதெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. பாலாஜி அத எடுத்துட்டு வா" என்றதும்.. ஒரு தாளை எங்கள் முன் நீட்டினான்.



12v சோலார் பேனல்
2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல்
12v பாட்டரி
காரின் தளம்
Driller
ஸ்பீடோ மீட்டர்
வோல்டேஜ் மீட்டர்
ஸ்டீரிங் செட்
Headlights, Indicators, Wire, Switches.

இவற்றில் எதுவும் புதிதாக கூட வேண்டாம். ஏற்கனவே உபயோகப் படுத்தியது, Second Hand என்றாலும் எனக்கு அது போதுமென்கிறான் பாலாஜி. மேற்கண்ட உபகரணங்கள் கிடைத்தால் பள்ளி விடுமுறையில் செய்து முடித்துவிடுவேன் என்றும் சொன்னான்.

"சரிப்பா.. நாங்கள், எங்களின் நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறோம்.. விரைவில் திரும்ப வருகிறோம்" என்று விடைகூறிப் புறப்பட்டோம். கிளம்பும்போது.. "பசங்க என்ன என்னமோ செய்யுறாங்க.. எல்லோரும் பாராட்டுறாங்க.. ஆனா, அவங்க வேணும்னு சொல்லுறத வாங்கிக் கொடுக்க கூட எங்களால முடியறதில்ல" என்று வருத்தப்பட்டார்கள் பாலாஜியின் அம்மாவும், அப்பாவும். "கவலைப்படாமல் இருங்கள்.." என்று சொல்லிவிட்டு நாங்கள் விடை பெற்றோம்.

சினிமா, விளையாட்டு, டிவி என பொழுதுபோக்கும் மாணவர்களுக்கு மத்தியில், அறிவியல் மீது ஆர்வம் கொண்ட சில மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போட, சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

அன்பு நண்பர்களே,
உங்களால் இந்த மாணவனுக்கு உதவ முடிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,
மேற்கண்ட உபகரணங்கள் உங்களிடம் உபயோகப் படுத்தாமல் இருந்தால் உதவுங்கள்,
அறிவியல் துறையில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உங்களின் எண்ணங்களை இம்மாணவனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

விழுதுகள்
29 , மறைமலை அடிகள் வீதி,
புன்செய் புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம்.

கமலக் கண்ணன் - 75021 97899
இளங்கோ - 98431 70925


22 comments:

  1. அடடடடா குழந்தை விஞ்ஞானிகள்....!!!!

    பாராட்டுகள் பாராட்டுக்கள்....

    ReplyDelete
  2. வளரும் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இளம் வளரும் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நம் நாட்டில் இவர்களுக்குண்டான அங்கீகாரம் என்பது எளிதில் கிடைத்து விடுமா?

    ReplyDelete
  5. அருமை இளங்கோ! குழந்தை விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Hi Elango,
    I would like to meet them. I will be India on next month 4th June. If, you are free on that time, surely we will meet.

    ReplyDelete
  7. குழந்தைகளில் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளியுலகிற்கு கொணர எடுத்த உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
    குழந்தை விஞ்ஞானிகள் வளர வேண்டும்.அதற்கு உங்களைப் போன்றவர்கள் ஊக்கம் ஆக்கம் அளிக்கும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான ஒரு வெற்றி சகோதரம் அந்த பையன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    ReplyDelete
  9. மாணவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. Mr.Elango..

    I live in Singapore and want to help these kids.. can you send some details on how to send money to these kids.. mail me @manian1@hotmail.com

    ReplyDelete
  11. எதாவது செய்யலாம் இளங்கோ......

    ReplyDelete
  12. @MANO நாஞ்சில் மனோ
    @இராஜராஜேஸ்வரி
    @சிநேகிதி
    நன்றிகள் நண்பர்களே.

    ReplyDelete
  13. @ஜோதிஜி
    அங்கீகாரம் என்பது ஒரு கேள்விக்குறிதான்.

    எது எதற்கோ இலவசம் வழங்கும் நமது அரசுகள் இது போன்ற மாணவர்களுக்கு, எந்த உதவிகளையும் செய்வதில்லை. அப்படியே சில திட்டங்கள் இருந்தாலும் அது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.

    நன்றிங்க ஜோதிஜி.

    ReplyDelete
  14. @ஜீ...
    நன்றிங்க ஜீ.

    ReplyDelete
  15. @senthilkumar
    கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே. நீங்கள் இங்கு வந்த பின்னர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
    my mail id : elango.ka(at)gmail.com

    ReplyDelete
  16. @FOOD
    நன்றிங்க.

    இதனால் அவர்களுக்கு சிறு உதவி கிடைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே.

    ReplyDelete
  17. @Chitra
    @♔ம.தி.சுதா♔
    நன்றிகள் நண்பர்களே.

    ReplyDelete
  18. @அமைதி அப்பா
    நன்றிங்க.

    ReplyDelete
  19. //முரளிகுமார் பத்மநாபன் said...
    எதாவது செய்யலாம் இளங்கோ......
    //

    நிச்சயம் முரளி.

    ReplyDelete
  20. உருப்படியான பதிவு இளங்கோ. திறமையுள்ள சிறுவனை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  21. உருப்படியான பதிவு இளங்கோ. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete